உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  இனி அடிச்சு விளையாடுவோம் பலமான கட்சியாக மாற்றுவோம்: மாணிக்கம் தாகூர்

 இனி அடிச்சு விளையாடுவோம் பலமான கட்சியாக மாற்றுவோம்: மாணிக்கம் தாகூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பதவி ஏற்பு விழாவிற்கு எல்லோரும் வாருங்கள்; இனி அடிச்சு விளையாடுவோம். காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக மாற்றுவோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தமிழக காங்., புதிய தலைவராக விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை 4:00 மணிக்கு, கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் பங்கேற்கிறார். இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இந்த காலத்தில், தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 59 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசுக்கு, இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஆட்சியில் பங்கு என்பது, நம் லட்சியமாக இருந்தது; அதை அடைந்து விட்டோம். ராகுலை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்பதே, அடுத்த லட்சியம். அதற்கு 40 எம்.பி.,க்கள் தமிழகத்திலிருந்து வெற்றி பெற வேண்டும். அதுதான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு பலமான கூட்டணி, நம்மிடம் இருக்கிறது. அந்த கூட்டணியுடன், மக்களிடம் செல்வது, மிக மிக அவசியமானது. மிகுந்த நம்பிக்கையோடு, நம் தொடக்கம் இருக்கும். அடிச்சு விளையாடுவோம்; நம்பிக்கையோடு இருப்போம். காங்கிரஸ் கட்சியை, பலமான கட்சியாக மாற்றுவோம். ஒரு பலமான காங்கிரஸ் கட்சியை உருவாக்க, தலைவர்கள், தொண்டர்கள் அனைவரின் ஆதரவும் தேவை. பதவி ஏற்பு விழாவிற்கு எல்லோரும் வாருங்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Srinivasan
ஜூன் 30, 2026 19:09

தாகூர் சார் அடிச்சி விளையாட முடியாது உங்க கட்சிகுள்ளே அடிச்சி விளையான்டாதான் உண்டு திமுக முதுகில் சவாரி செய்தவரை தான் தமிழ்நாட்டில் உங்க கட்சிக்கு மரியாதை இணி உங்க கட்சிக்கு பங்குதான் ஊஊஊஊஊ தான்


chinnamanibalan
ஜூன் 29, 2026 20:59

மேகதாது அணைத் திட்டத்தை, கர்நாடக காங்கிரஸ் அரசு திரும்ப பெறும் வரை, முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அடித்து ஆட முன்வர வேண்டும். செய்வாரா!!


subramanian
ஜூன் 29, 2026 18:25

மாணிக்கம் தாகூர் நீங்கள் விளையாடுவீர்கள்.... உங்களுக்கு அனுமதி கிடைக்குமா ?


theruvasagan
ஜூன் 29, 2026 18:09

ஓ...யார் பெரியவன்னு அடிச்சுக் காட்டுங்க என்பதை போலத்தானே. 60 வருஷமா ஒட்டுண்ணியாவே இருந்து குப்பை கொட்டினதுக பேசுற பேச்சு மட்டும்தான் அமர்க்களம். செயலில் பூஜ்ஜியம். போக்கத்த வெட்டி கும்பல்.


முருகன்
ஜூன் 29, 2026 17:18

வாய் பேச்சில் மட்டும் கட்சியை வளர்க்க முடியாது வேண்டும் என்றால் கூட்டணி கட்சியிடம் .. மையமாக இருக்காலம்


சூர்யா
ஜூன் 29, 2026 17:18

பல வருடங்களாகவே சத்திய மூர்த்தி பவனில் வேஷ்டி கிழியும் அளவிற்கு அடித்து விளையாடிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்? இதுல புதுசா வேற அடிச்சு விளையாடுவதற்கு என்ன இருக்கு?


Rangarajan Cv
ஜூன் 29, 2026 16:06

He seems to be excited. Will find his


krishna
ஜூன் 29, 2026 15:36

INDHA DESA VIRODHA HINDHU VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALUKKU VEERAM VAAI SAVADAAL VERA.INDHIA MUZHUVADHUM ADITHU NORRUKKA PATTUM THIRUNDHAADHA MAINO PAPPU PAPPY PONDRA KOMALI THALAIVARGALAI VAITHU KONDU CIRCUS VENA SUPERAA NADATHALAAM.IDHELLAM ORU KATCHI.THALAIVARGAL THONDARGAL VERA.


காவிரி துரோகி ஒழிக, சென்னை
ஜூன் 29, 2026 15:21

ஏற்கனவே 40 எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். அப்புறம் ஏன் உங்கள் ராகுல் பிரதமராக முடியவில்லை..


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 29, 2026 15:18

திமுகவை முடித்து வைத்தது போல தவெகவை முடித்து வையுங்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை