உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநில சுயாட்சியை பிறகு பேசலாம்; உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க! முதல்வருக்கு காட்டமான கடிதம்

மாநில சுயாட்சியை பிறகு பேசலாம்; உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க! முதல்வருக்கு காட்டமான கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'மாநில சுயாட்சியை பற்றி பிறகு பேசலாம். முதலில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவை மாநகராட்சி முன்னாள் ம.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடித விபரம்:

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசு தலையீடு பெருமளவில் உள்ளது; மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. தி.மு.க., ஆட்சியில் இதுவரை, மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி இஷ்டத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்தி, அபராதமாக ஒரு சதவீதம் வரி போடப்படுகிறது. பத்திரப்பதிவு துறையில் சொல்லவே வேண்டாம். சேவை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அரசு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இச்சூழலில், 14ம் தேதி நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்தில், சதுரடி கணக்கில், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். எந்த விவாதமுமின்றி, மக்களிடம் கருத்து கேட்காமல், தீர்மானம் நிறைவேற்றுவது எவ்வகையில் நியாயம்? உங்களுக்கு ஓட்டுப்போட்ட, ஓட்டுப்போடாத மக்களுக்கு எவ்வளவு சிரமம் கொடுக்க முடியுமோ, அத்தனையும் கொடுத்து விட்டீர்கள். இப்படித்தான், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில சுயாட்சி கேட்கும் முதல்வரே, முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அதன்பின், மாநில சுயாட்சி பற்றி பேசலாம். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தனகுமார்
மே 21, 2025 19:37

மாநில சுயாட்சி வந்தால் அடுத்த லெவலுக்கு தானே புல்லுக்கும் ஆங்கே பொசியும்.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 21, 2025 16:51

படம் அருமை.... வாழ்த்துக்கள் தினமலர்....


Barakat Ali
மே 21, 2025 13:43

[மாநில சுயாட்சியை பிறகு பேசலாம் உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க முதல்வருக்கு காட்டமான கடிதம்] ...... பலுசிஸ்தானை சரியா நடத்தாமே காஷ்மீர் எங்களுக்கு வேணும்ன்னு பாகிஸ்தான் கேக்குற மாதிரியே இருக்குதே .... துக்ளக்கார் பாகிஸ்தானின் வழியில் செல்கிறாரா ????


angbu ganesh
மே 21, 2025 11:32

நீங்கள் மாதீமுக்கவில் இருப்பதை விடும் தனித்து போட்டி இடும் கண்டிப்பாக வெல்வீர்கள் கிருஷ்ண சாமி அய்யா உண்மையை உரக்க உரைக்க கூறினீர்கள் தலை வணங்குகின்றேன், ஆனா நீங்க இருக்க வேண்டிய இடம் அண்ணாமலையிடம்


angbu ganesh
மே 21, 2025 11:30

அதுக்கு ஏன் இந்த அழகான படம் வேற படம் கெடைக்கவில்லையா,


ஆரூர் ரங்
மே 21, 2025 15:55

சட்டியில் இருந்தால் தான்


SUBBU,MADURAI
மே 21, 2025 17:22

மிசாவில் மிதி வாங்கும் படம் இருக்கு அதை போடச் சொல்லுவமா


சாமானியன்
மே 21, 2025 05:43

மாநில சுயாட்சி உளுத்துப்போன கான்சப்ட். உள்ளாட்சியில் ஒரு மரம் வெட்டக்கூட கலெக்டர் பர்மிஷன் வேண்டுமாம். தாசில்தார் டம்மியா ? ஒட்டு மொத்த ஊழலை யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் திராவிட மாடல் அரசாங்கம். கடவுளே இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்.


A very
மே 21, 2025 08:44

Super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை