உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / "தோல்வி மட்டுமே இறுதி அல்ல" - கவுதம் அதானி

"தோல்வி மட்டுமே இறுதி அல்ல" - கவுதம் அதானி

புதுடில்லி: தோல்வி மட்டுமே இறுதி அல்ல மறு வாய்ப்பு காத்திருக்கிறது என தொழில் அதிபர் கவுதம் அதானி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள ஒரு மாணவி ஜே.இ.இ., தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனம் வேதனையுற்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் , ' நீங்கள் என்னை அன்பாக நடத்தினீர்கள், என்னால் உங்களின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. மன்னிக்கவும், தங்கை உங்கள் கனவை நிறைவேற்றுவார் '. இவ்வாறு எழுதி இருந்தார். இது குறித்து பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானி; அவரது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

புதிய பாதை திறக்கும்

தேர்வில் வரும் தோல்வி என்பது வாழ்வை விட பெரிதல்ல. தோல்வி வந்தாலும் மற்றொரு வாய்ப்பு திறந்திருக்கும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம். யாரும் தங்களின் உயிரை மாய்க்க வேண்டாம். எதிர்பார்ப்பினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ஒரு மகள் தற்கொலை செய்திருப்பது கவலை அளிக்கிறது. நான் கூட படிப்பில் மிக நல்ல நிலையில் தேறியதில்லை. பல முறை தோல்விகளை தழுவி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய பாதை திறப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

jaiaaa
பிப் 14, 2025 22:16

எவ்வளவு மகத்தான உண்மை இது படிப்பு முக்கியம் தான் படிப்பு மட்டுமே முக்கியம் இல்லை


pmnr pmnr
பிப் 14, 2025 18:42

GOOD


theruvasagan
பிப் 14, 2025 16:51

இந்த தற்கொலை இங்கு நடந்திருந்தால் ஜேஇஇ தேர்வை ரத்து செய்யணும்னு ஒரு தற்குறி கூட்டம் கிளம்பியிருக்கும்.


Murugesan.P
பிப் 14, 2025 13:16

கௌதம் அதானியின் கருத்து மிக, மிக அருமை !


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:56

ஆர்டரை கேன்சல் பண்ணினதை இன்னும் நெனச்சு வருத்தப்படுறாரே ??


Balasubramanian
பிப் 14, 2025 12:15

அட பப்பு கூட அப்படித்தாங்க! குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உருவாக்க கூடாது பெற்றோர்கள்! எங்கள் தலைமுறையில் நான் பிகாம் படிக்கிறேன் என்று நினைத்து இருந்தார் என் தந்தை! நான் Chemistry Lab இல் சில பொருட்களை தெரியாமல் உடைத்து அதற்கான தண்டனையாக பணம் கட்ட நேரும்வரை!


பாமரன்
பிப் 14, 2025 11:16

என்னது ... தத்துபித்துவம்லாம் பேச மாட்டாரே நம் கம்பெனி ஸ்பான்ஸர்...??? ம்ம்ம்ம் ஏதோ இருக்குமோ...???


N Sasikumar Yadhav
பிப் 14, 2025 14:59

உங்க மானங்கெட்ட திராவிட மாடல் களவானிங்க மாதிரி அரியலூர் அனிதா தற்கொலையை வைத்து கேவலமான அரசியல் செய்யாமல் ஏதோ அவரால் முடிந்த ஆறுதல் சொல்லியிருக்கிறார் . எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க முரசொலி மூளையுள்ள உங்களால் மட்டுமே முடியும்


முக்கிய வீடியோ