உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணனை போல கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்..: அந்துமணி பதில்கள்

அண்ணனை போல கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்..: அந்துமணி பதில்கள்

கி.பாலவித்யா, சிகாகோ, அமெரிக்கா:

'தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனையிடுவது வழக்கமான ஒன்று. எங்களை ஒன்றும் செய்ய முடியாது...' என்கிறாரே ஜெகத்ரட்சகன்?'நாங்கள் அவ்வளவு உஷாராக, 'விஞ்ஞான ஊழல்' தான் செய்வோம்' என, கூறுகிறாரோ!

அ.ரவி, வேலுார்:

பொது இடங்களிலும், டீக்கடைகளிலும் சிலர் பத்திரிகையை சத்தமாக படிப்பது சரியா?தவறில்லையே... செவி வழியாக இன்னும் பலருக்கு உண்மை தகவல் போய் சேருமே. அதுவே ஒரு பொதுத்தொண்டு தான்!

ஆர்.ஜெயச்சந்திர பாபு, சென்னை:

ஆஸ்திரேலியாவிலும், வெளிநாட்டவரின் குடியேற்றத்துக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருகின்றனரே?'இந்தியாவில் படித்து, இந்தியாவிற்கே நம் மூளையும், உழைப்பும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்' என்று, நம் பிரதமர் மோடி கூறுகிறாரே... புரியவில்லையா பாபு?

த.வேலு, ஊட்டி:

மத்திய அரசு, 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதால், விலைவாசி உயரக் கூடுமல்லவா?விலைவாசி உயர்வது ஒரு பக்கம், மக்கள் மீண்டும் பணப் பரிவர்த்தனை செய்வதை அதிகரிப்பர். 'பிக்பாக்கெட்' திருடர்களுக்கும், வழிப்பறி திருடர்களுக்கும் கொண்டாட்டமாக போகும்!

எம்.ராஜேந்திரன், லால்குடி:

தி.மு.க., - எம்.பி., கனிமொழி கருணாநிதி, தாய் ராஜாத்தியின் பெயரையும் தன் பெயருடன் இணைத்து, 'கனிமொழி ராஜாத்தி கருணாநிதி' என, பெயர் மாற்றியுள்ளாரே?தன் அண்ணன் ஸ்டாலின், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என, 'கெத்தாக' தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது போல, கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார் போலும்!

எம்.ரிஷிவந்தியா, தஞ்சாவூர்:

சிட்டா வழங்க, விவசாயியிடம், மீன் குழம்பு பார்சல் எடுத்து வரும்படி கூறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து?இப்படி, 'சின்ன மீனில்' ஆரம்பித்து, நடவடிக்கை எடுப்பது சரியே! ஆனால், 'திமிங்கிலங்களை' கொண்டு வரச் சொல்பவர்களையும் பிடிக்க வேண்டும்!

சி.வேணுகோபால், செங்கல்பட்டு:

'சிறப்பான எதிர்காலத்தை நோக்கி இந்தியா செல்கிறது' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறுகிறாரே!அஜித் தோவல், இந்தியாவின் மூளை என சொல்லலாம். தேசத்தின் பாதுகாப்பு மட்டுமே அவரது சிந்தனை. அவர் போன்றோர் நம் நாட்டின் உயர் பொறுப்புகளில் உள்ள வரை, இந்தியா மிளிரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

GOPA LAW Krish
செப் 25, 2026 05:27

கனவன் பெயரை தான் தன் பெயருக்கு பின்னால் போட வேண்டும் என்று காலங்காலமாக பின்பற்ற படுகிறது மருதமலை படத்தில் ஒரு காமெடி காட்சி கனிமொழிக்காக வேண்டியே அமைத்திருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது


ராமகிருஷ்ணன் பரமக்குடி
செப் 23, 2026 15:19

யாரு எதை மாற்றிக் கொண்டாலும், திருட்டு ஊழல் திமுகவின் தலைஎழுத்து மாற போவதில்லை. ஊழலுக்கு பது இலக்கணம் எழுதிய திமுகவின் ஆட்சியை தோண்ட தோண்ட ஊழல் ஊற்று பொங்கி பெருகி வந்து கொண்டு உள்ளது.


திராவிட சொம்பு
செப் 23, 2026 12:52

இன்னும் அருமையாகவும் பொருத்தமாகவும் இருக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 23, 2026 10:01

கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்பதில் ஜா என்பது கட்சிக்கு உடன்பாடில்லாத எழுத்தாயிற்றே? ராஜாஜி என்று எழுதினால் தமிழ் கெட்டுப்போய்விடும் என்று அவரை அவமதிக்கவே ராசாசி என்று எழுதுபவர்கள் இவர்கள் அல்லவா?


கிஜன்
செப் 23, 2026 09:45

தந்தையைப்போல் மகளும் தமிழ் வளர தொண்டாற்றிட வேண்டும். அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற திட்டத்திற்கான உத்தரவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்தது, முதன்முதலில் இக்கருத்தை 1971ல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி கொண்டு வந்தார். அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.


ஆரூர் ரங்
செப் 23, 2026 08:44

இசை வேளாளர் பெண்மணிகள் தாயின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வது நெடுங்காலமாக உண்டு.


ஆரூர் ரங்
செப் 23, 2026 08:39

பெருந்தன்மைக்குப் பாராட்டுகள். தனக்குப் பிறந்த மகளே அல்ல என கோர்ட்டில் சிறுமைப்படுத்திய பிறகும் தந்தையின் பெயரையும் சேர்த்து ஒட்டிக் கொள்ளும் பெருந்தன்மை சிலருக்கே வரும்.


SUBBU,MADURAI
செப் 23, 2026 06:30

எங்க அண்ணன் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு ஒரே ஒரு டாடி மட்டும்தான் ஆனால் எனக்கு இரண்டு டாடி நான் வளர்கிறேனே மம்மி


SUBBU,MADURAI
செப் 23, 2026 06:18

செந்தாமரை ராசாத்தி கருணாநிதி கனிமொழி என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 23, 2026 10:02

உங்களுக்கு வாலி என்ற திரைக் கவிஞரைப் பிடிக்காதா? ஏன் செந்தாமரைக்கு அப்புறம் வாலியின் பெயரை விட்டுவிட்டீர்கள்?


Raj
செப் 23, 2026 05:56

என்ன தான் பெயர் மாற்றினாலும் சுபாவங்கள் மாறப்போவதுயில்லை அது அவர்களது குடும்பத்த்தின் DNA அப்பவும் கனிமொழி அப்பாவுக்கு கடைசி இடம் தான் கொடுத்திருக்கிறார்.


சமீபத்திய செய்தி