உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ஈகோ அமைச்சர்களால் உச்சகட்ட குழப்பத்தில் மதுரை மாநகராட்சி; கம்யூனிஸ்ட்டை டம்மியாக்க முடக்கப்படுகிறதா மாமன்றம்

 ஈகோ அமைச்சர்களால் உச்சகட்ட குழப்பத்தில் மதுரை மாநகராட்சி; கம்யூனிஸ்ட்டை டம்மியாக்க முடக்கப்படுகிறதா மாமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் யாருடைய ஆதரவாளர்களை தேர்வு செய்வது என அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே நடக்கும் மறைமுக ஈகோ யுத்தத்தால் இரண்டு மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை. இதனால் நிர்வாகம் முடங்குவதாக சர்ச்சை வெடித்துள்ளது. மதுரை மேயராக இருந்த இந்திராணி, சொத்துவரி முறைகேடு புகார் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்தார். அவரது கணவர் பொன்வசந்த், மாநகராட்சி அலுவலர்கள் என உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் 5 மண்டலம், 2 நிலைக் குழு தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது மேயர், மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் இல்லாத மாநகராட்சியாக இரண்டு மாதங்களாக செயல்படுகிறது. புதிய மேயரை தேர்வு செய்வதில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியான மதுரையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். 100 வார்டுகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடுகள் என ஏராளமான பிரச்னைகள் நிலவுகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. அதுதொடர்பாக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லையென்றால் அது ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பும். மேலும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மேயரை நியமிக்க வேண்டும் தி.மு.க., நிர்வாகிகள் தொடர்ந்து போர்க்கொடி துாக்கி வருகின்றனர். அதிகாரிகள், உளவுத்துறை தரப்பிலும் மேயர் நியமனத்தின் முக்கியத்துவம் குறித்து அறிக்கை யாக அளிக்கப்பட்டுள் ளது. இதன் எதிரொலியாக மேயரை நியமிக்க கட்சித் தலைமை தயாராக இருந்தாலும், அமைச்சர்களுக்குள் தொடரும் மோதல்போக்கு குறையாததால் தலைமையும் குழப்பத்தில் உள்ளது. இதற்கிடையே தி.மு.க., முக்கிய புள்ளிகள் மூலம் மேயர் பதவிக்கு சிபாரிசு செய்வதாக கூறி பெண் கவுன்சிலர்களிடம் நிர்வாகிகள் சிலர் பல லட்சம் ரூபாயை 'அட்வான்ஸ்' ஆக பெற்று வசூல் வேட்டை நடத்தும் தகவலும் தலைமைக்கு எட்டியுள்ளது. டம்மியாகும் மார்க்சிஸ்ட் மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: இம்மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை வெளியே கொண்டுவந்தது அ.தி.மு.க., தான். ஆளுங்கட்சிக்குள் என்ன தான் கோஷ்டி பூசல் இருந்தாலும் எந்த மாநகராட்சியிலும் மக்கள் நலன் கருதி மாமன்றக் கூட்டங்கள் நடத்த முடியாத நிலை இல்லை. ஆனால் மதுரையில் மேயர் இல்லாத நிலையில், தி.மு.க., கூட்டணியை சேர்ந்த மார்க். கம்யூ., கட்சியின் துணைமேயர் தான் மாமன்றக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்க வேண்டும். இதை ஆளுங்கட்சி விரும்பவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை 'டம்மி'யாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என இரண்டு மாதங்களாக மாமன்றக் கூட்டங்களை நடத்த அனுமதிக்காமல் உள்ளூர் தி.மு.க., அரசியல் செய்கிறது. முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் உடன் மேயரை நியமிக்க முடியாத நிலைதான் மதுரையின் நிலவரம். மாநகராட்சி மண்டலங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் மாமன்றக் கூட்டம் நடத்தாமல் ஒப்புதல் பெற முடியாது. இதனால் 100 வார்டுகளில் தற்போது திட்டங்கள் முடங்கி போயுள்ளது. மக்கள் நலன் கருதி அமைச்சர்களின் ஈகோ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் புதிய மேயரை நியமிக்க முதல்வர் ஸ்டா லின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ