உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., - திரிணமுல் உறவில் மம்தா பானர்ஜி நாடகம்! டில்லியில் நெருக்கம்; மேற்கு வங்கத்தில் பகை ஏன்?

காங்., - திரிணமுல் உறவில் மம்தா பானர்ஜி நாடகம்! டில்லியில் நெருக்கம்; மேற்கு வங்கத்தில் பகை ஏன்?

காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்று இருந்தாலும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பீஹாரில் நடத்திய, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. ராகுலுடன் ஒரே மே டையில் தோன்றினால், அது மேற்கு வங்க தேர்தலில் திரிணமுலுக்கு பாதகமாக முடியலாம் என, மம்தா எண்ணுவதாக கூறப்படுகிறது. எனவே தான், டில்லியில் உறவு; மாநிலத்தில் பகை என்ற தெளிவான அரசியல் உத்தியை மம்தா கையாண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பீ ஹாரில் சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை ராகுல் மேற்கொண்டார். 16 நாட்களில், 1,300 கி .மீ., துாரம் சென்ற யாத்திரை செப்., 1ல் முடிந்தது. 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட பலர், பீஹார் சென்று ராகுலுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியல் உத்தி ஆனால் அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்., இந்த யாத்திரையை பெரிதாக பொருட்படுத்தவில்லை. மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளை மட்டுமே அனுப்பினார். மம்தா பானர்ஜி, யாத்திரையில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள். 'இது ஒரு அரசியல் உத்தி' என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். திரிணமுல் காங்கிரஸ், பார்லிமென்ட் விவகாரங்களில் காங்கிரசுடன் இணைந்து செயல்படுகிறது. ஆனால், இண்டி கூட்டணியில் தனித்தன்மையை பேணுகிறது. ராகுலின் பீஹார் யாத்திரையில் மம்தா பங்கேற்றிருந்தால், அது மேற்கு வங்கத்தில் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தி, திரிணமுல் காங்கிரசின் ஓட்டு வங்கியை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே பிரதிநிதிகளை அனுப்பி, கூட்டணி உறவை தக்கவைத்ததோடு, தேர்தல் பின்விளைவு களைத் தவிர்த்துள்ளனர். திரிணமு லின் மேல்மட்ட தலைவர்கள் ராகுலுடன் பொதுவில் தோன்ற விரும்பவில்லை என கூறப்படுகிறது. அப்படி தோன்றுவது, இண்டி கூட்டணியின் தலைவராக ராகுலை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக அமையும் என்றும் கருதுகின்றனர். இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்தல்களில் பா.ஜ.,வை தொடர்ந்து வென்றவர் மம்தா. ஆனால், ராகுலோ ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.,விடம் தோற்றவர்' என்கின்றனர். மேற்கு வங்கத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., ஆகிய மூன்று கட்சியினரும் திரிணமுலுக்கு அரசியல் எதிரிகள். காங்கிரஸ் உடனான உறவு சமீப ஆண்டுகளில் பெரிய உரசல் இன்றி இருந்தாலும், இன்னும் நிலை யற்றதாகவே உள்ளது. தொகுதி பங்கீடு கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்படவில்லை. மம்தாவுடன் மல்லுக்கட்டிய மேற்கு வங்க காங்கிரசின் அப்போதைய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கட்சி மேலிடம் மாற்றியது. மேற்கு வங்க அரசியலை உற்று நோக்குபவர்கள், அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தலுக்கு முன், திரிணமுலுடன் உறவை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புவதை கவனிக்கின்றனர். கடந்த 2011ல், மம்தா பானர்ஜி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, 30 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரி ஆட்சியை துாக்கி எறிந்து அதிகாரத்திற்கு வந்தார். அதன்பின், காங்கிரஸ் படிப்படியாக மேற்கு வங்கத்தில் வீழ்ச்சியடைந்தது. 2021 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை. சமீபத்தில், லோக்சபா எதிர்க்கட் சித் தலைவர் ராகுல், இண்டி கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். விருந்துக்கு முன், திரி ணமுல் காங்கிரசின் தேசிய பொதுச்செயலரும், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவருமான அபிஷேக் பானர்ஜி, ராகுல் உடன் 4 2 நிமிடங்கள் பேசி னார். இருப்பினும், காங்கிரசை திரிணமுல் தள்ளியே வைத்திருக்கிறது. காரணம், மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேல் உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளை காங்கிரஸ் ஈர்க்கலாம் என்று அஞ்சுகிறது. அதன் காரணமாகவே மாநிலத்தில் காங்கிரசை தள்ளிவைத்து, டில்லியில் உறவு, மாநிலத்தில் பகை என்ற கொள்கையை மம்தா கடைப்பிடிப்ப தாக அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறுகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ