உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்ட்? மாநில அரசை உஷார்படுத்தும் உளவுத்துறை

போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்ட்? மாநில அரசை உஷார்படுத்தும் உளவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை அண்ணா பல்கலை வளாகத்துக்குள், மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், பெண் உரிமை இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.இதன் தொடர்ச்சியாக, அம்பேத்கர்- ஈ.வெ.ராமசாமி படிப்பு வட்டத்தை சார்ந்த மாணவர் அமைப்பு, சமூக நலனுக்கான மாணவர் எழுச்சி இயக்கம் போன்ற அமைப்புகளும், இந்த விஷயத்தில் அனைத்து கல்லுாரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, மாநில அளவில் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ps21xadh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பல்கலையில் தொடர்ச்சியாக, இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், பல்கலையில் பணியாற்றும் சிலர் உடந்தையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். கூடவே, இந்த விவகாரங்களை ஏற்கனவே நன்கு அறிந்திருந்தும், அரசும், போலீசும் மூடி மறைக்க பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.இதுபோன்ற உயர் கல்வி நிறுவனங்களில், முனைவர் பட்டம் பெறுவதற்காக படிக்கும் மாணவியருக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர்.கடந்த அக்டோபரில், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது, கவர்னர் ரவியிடம் பி.எச்.டி., மாணவர் ஒருவர், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலையில் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து புகார் மனு அளித்தார். இதுபோன்று, தமிழகத்தின் வேறு சில பல்கலையிலும் துன்புறுத்தல்கள் நடப்பதாக, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தோர் கூறுகின்றனர்.இதற்கிடையில், இந்த விவகாரம் வேறு திசை நோக்கி பயணிப்பதாக, மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் கண்காணிப்பில் கிடைத்த தகவல் என, மத்திய உள்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதில், 'அண்ணா பல்கலை விவகாரத்தில் நடக்கும் போராட்டத்தில், நகர்ப்புற மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனர்.'போராட்டங்களை தீவிரப்படுத்த ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதனால், மாநில அரசு இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

c.Natarajan
ஜன 06, 2025 12:18

ஊழல்வாதிகள் அமைச்சர்களாக உள்ளனர். பணம் கொட்டுது. திறமையான வக்கீல்கள் பலர் உள்ளர். நீதிமன்றமும் ஆதரவாக உள்ளது. ஆண்டவன் தண்டனையை எதிர்பார்ப்போம்.


சுந்தரம்
டிச 31, 2024 22:45

முன்பு போல் ஒரு அரசாங்கத்தை எளிதாக கலைக்க முடியாது. மேலும் இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சப்போர்ட் செய்வதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது


M Ramachandran
டிச 31, 2024 19:44

அரசால் தோழர்கள் மத்தியில் தோழமையுடன் கை கோற்கும் மாவோயிஸ்ட்கள். திராவிட கட்சியின் தோழமயினர் எப்படி அவர்களை கண்டிக்க முடியும் அவர்கள் ஒன்றிய அரசை நோக்கித்தான் அவர்கள் செயல்கள் இருக்கும். ஏன் தடுக்க வேண்டும்


Muralidharan S
டிச 31, 2024 13:28

மாவோயிஸ்டுகள் தேசபற்றுக்கு எதிரானவர்கள் ஆயிற்றே.. தமிழ்நாட்டிலும், மத்திய அரசையே "ஒன்றிய அரசு" என்று தேசப்பற்று இல்லாமல் பிரித்து கூறும், கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது.. இருந்தும்.... எப்படி... என்னமோ நடக்குது ......ஒண்ணுமே புரியலே ....


ஆரூர் ரங்
டிச 31, 2024 11:07

மணிப்பூர் மேட்டருக்கு மட்டுமே போராட்டம் நடத்த அனுமதியுண்டு. ஆனா வேங்கைவயல், அண்ணா பல்கலைக் கழகக் கொடுமைகளுக்கு எதிராக? மூச்? விடியலார்..


THIRUMALAI KUMAR
டிச 31, 2024 10:40

யாரும் குறை சொல்ல முடியாத முதல்வர் எதற்கு இருக்காரு? போலீஸ் DEPT எதற்கு IRUKKU


அப்பாவி
டிச 31, 2024 09:07

இவிங்க வெறும் எச்சரிக்கை மட்டும் உடுவாங்க. அசம்பாவிதம் நடக்கலேன்பா சைலண்ட்டா போயிடுவாங்க. ஏதாவது நடந்துச்சுன்னா நாங்க அப்பவே மாநில உளவுத்துறையை எச்சரிச்சோம்னு அடிச்சு உடுவாங்க.


பேசும் தமிழன்
டிச 31, 2024 08:49

இப்படி வேறு சொல்ல ஆரம்பித்து விட்டார்களா..... இனி மாணவிக்கு..... பெண்களுக்கு நீதி வேண்டும் என்று போராடும் ஆட்களை எல்லாம் இப்படி தான் சொல்ல ஆரம்பிக்கும் திருட்டு மாடல் கட்சி.


Kalyanaraman
டிச 31, 2024 07:39

திராவிட மாடல் என்பதே மாவோயிஸ்டுகள் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தானே. ஆதலால் மாவோயிஸ்டுகளால் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.


அப்பாவி
டிச 31, 2024 07:05

வந்துட்டாங்க மத்திய உளவுத்துறை அதிகாரிங்க. இங்கே குற்றம் நடக்கும் போது என்ன பண்ணிக்கிடிருந்தீங்க? அரன் நக்சல்ஸ் போய் நகர்ப்ப்ய்ற மாவோயிஸ்ட் வந்துட்டாங்கன்னு அறிக்கை வேற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை