உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

மத அடையாளம் பிற்போக்குத்தனமானது; அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் பதில்

சென்னை: ''பள்ளிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்த சொல்லும், அண்ணாமலையின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். மதுரையில் கடந்த 22ம் தேதி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:ஹிந்துக்களை பொறுத்தவரை, சிறிதாக யாராவாது தொந்தரவு செய்தால், பரவாயில்லை என்று கண்டுகொள்ள மாட்டோம். மன்னித்து விடுவோம். பெரிதாக தொந்தரவு செய்தாலும் கூட கண்டுகொள்ள மாட்டோம். இன்று, அதை எல்லாம் தாண்டி, நம் வாழ்வியல் முறைக்கு, தொடர்ந்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்து என்பதற்காக, கடைக்கோடி தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். ஹிந்து மதத்தை பின்பற்றினால் மட்டும், நம் ஓட்டுகளை வாங்கும் அரசியல்வாதிகளாக, அதிகாரத்தில் இருப்பவர்கள், கோவில்களை அசிங்கப்படுத்துகின்றனர். ஹிந்து மக்களிடம் ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்கின்றனர். அதை எல்லாம் உடைத்துக்காட்ட வேண்டும். கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களின் வாழ்வியல் முறையில், எந்த பிரச்னையும் வரக்கூடாது. எங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றாலும், தைரியமாக திருநீறு வைத்துச் செல்ல வேண்டும். எங்கள் குழந்தைகள், வட மாவட்டங்களில் பள்ளி சென்றால்கூட ருத்ராட்சையை வெளியில் அணிந்து செல்ல வேண்டும். இவை எல்லாம் இன்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னையாக உள்ளது. அதற்கு எல்லாம் தான் முருகர் மாநாடு தேவைப்படுகிறது. மதுரையில் இத்தனை பெரிய மாநாடு நடத்தப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணங்களில் இதுவும் முக்கியமானது.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் மகேஷ் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத அடையாளச் சின்னங்களுடன் பள்ளிக்கு செல்லும்படி, மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். எந்த மதமாக இருந்தாலும், அந்த அடையாளங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், முன்னாள் முதல்வர் காமராஜர், சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும், மத அடையாளத்தை புகுத்துவது, மிகவும் பிற்போக்குத்தனமானது. பள்ளி, அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முற்போக்குத்தனமானது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Saai Sundharamurthy AVK
ஜூன் 25, 2025 22:03

இந்து நாடான இந்தியாவின் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வக்கில்லாதவர்கள், கிறிஸ்துமாசுக்கு வாழ்த்து சொல்லி கேக் சாப்பிடுவது, ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி கஞ்சி குடிப்பது தான் ஒரு முதலமைச்சருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் மதசார்பின்மையா ???என்ன முதலமைச்சரோ, என்ன அமைச்சர்களோ தெரியவில்லை. ஆட்சி செய்ய தெரியாதவர்கள்..... இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை........


Nandakumar Naidu.
ஜூன் 25, 2025 21:21

இவரெல்லாம் நம் தமிழகத்தின் மற்றும் நம் நாட்டின் சாபக்கேடு. இந்த லட்சணத்தில் அமைச்சர் வேற? எல்லாம் தலையெழுத்து.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 21:07

திமுக கட்சியினர் இனிமேல் கருப்பு, சிகப்பு கரையுடன் உள்ள வேஷ்டியை கட்டக்கூடாது. அதுவும் ஒரு அடையாளம்தான்.


Barakat Ali
ஜூன் 25, 2025 20:53

என்னது ???? அப்போ இனி குல்லா, சிலுவை இதுக்கெல்லாமும் அனுமதி இல்லீங்களா ????


ManiK
ஜூன் 25, 2025 20:45

உங்களுடைய சிகப்பு கருப்பு கொடி, சூரியன் சின்னம் இது எல்லாம் தான் பிற்போக்கு அடையாளங்கள்


chinnamanibalan
ஜூன் 25, 2025 19:49

அடிப்படை வசதிகள் என்பது அரசுப் பள்ளிகளில் அறவே இல்லை. அது குறித்து திமுக அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் பெரும்பான்மை மதத்தினர் மத அடையாளம் மட்டுமே திமுகவின் கண்ணுக்கு பளிச் என்று தெரிகிறது. திராவிட கருத்தியல் என்பதே திக, திமுக ஆகிய கட்சிகளுக்கும், இந்து சமய ஒழிப்பு மட்டுமே. எனவேதான் பிற சமய விழாக்களுக்கு வாழ்த்து கூறும் திமுக அரசு, பெரும்பான்மை மக்களின் சமய விழாக்களுக்கு ஒருபோதும் வாழ்த்து கூறுவதில்லை. இதனை, தேர்தலின் போது மக்கள் தமது நினைவில் வைத்துக் கொண்டாலே நிலைமை திருந்தி விடும்.


chandrasekaran p.m.
ஜூன் 25, 2025 18:50

பர்தா அணிந்து பள்ளியில் வருவதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு. என தலைப்பு போடுங்க


Rathna
ஜூன் 25, 2025 18:41

மற்ற மதத்தவர்கள் எல்லாம் தங்கள் மத அடையாளங்களை விடுவதில்லை. ஆனால் ஹிந்துக்கள் தங்கள் மத அடையாளங்களை விடும்படி கூறுவது, அவர்களை மத மாற்றம் செய்வதற்கும் அதற்கு பின்னால் உள்ள வோட்டு பிச்சை வாக்கு வங்கிக்கும் தான்.


Somasundaram
ஜூன் 25, 2025 17:53

இப்போது முருகனை பற்றியும் இந்து மதத்தை பற்றியும் தவறாக சமநிலை என்ற போர்வையில் பேசும் திமுக தலைகள் தேர்தல் நேரத்தில் இதை விட உறக்க மக்களிடம் கூற வேண்டும். இதை தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மைபடுத்தி ஓட்டு கேட்க வேண்டும்.


உண்மை கசக்கும்
ஜூன் 25, 2025 16:19

அப்ப பர்தா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை