உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி?

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கவும், அக்டோபர் 2 அமாவாசை அன்று, அமைச்சரவையை மாற்றி அமைக்கவும், முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த மின் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டன.இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீடிக்க வைக்க முடிவு செய்து, கவர்னருக்கு முதல்வர் கடிதம் அனுப்பினார். துறை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்தார். இதை கண்டுகொள்ளாமல், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்' என முதல்வர் அறிவித்தார்; அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை கடந்த பிப்., 13ல் ராஜினாமா செய்தார். அதன் காரணமாக அமைச்சர்கள் எண்ணிக்கை, 33 ஆக குறைந்தது.சமீப நாட்களாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக தி.மு.க., வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதையொட்டி அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, செந்தில் பாலாஜியும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அமைச்சர் பதவி ஏற்க அவருக்கு எந்த தடையும் இல்லை. அதனால், அமைச்சரவை மாற்றம் நிச்சயம் என, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அக்., 2 அமாவாசை அன்று இந்த மாற்றங்கள் இருக்கலாம் என, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உறுதி அதனினும் பெரிது!'

சமூக வலைதள பதிவில் முதல்வர் கூறியிருப்பதாவது: ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு, 471 நாட்களுக்கு பின், உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.'எமர்ஜென்சி' காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதி செயல்கள், 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்து, செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தனர்.முன்னிலும் உரம் பெற்றவராய், சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது; உறுதி அதனினும் பெரிது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sundaran manogaran
செப் 27, 2024 23:25

திராவிட மாடல் ஆட்சி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்தது என்பதை செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து நிரூபிக்கப்போகிறார் முதல்வர்.அதே அளவு தரம் தாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதையும் உணர்த்தப் போகிறார்.... ஓட்டை விற்கும் தமிழர் களுக்கு எதுவுமே புரியாதது தான் கொடுமை.


Ramesh Sargam
செப் 27, 2024 20:56

சொல்லமுடியாது ஜெயில்துறை அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதவி கிடைத்தால்... அப்புறம் என்ன ஆகும்?


RAAJ68
செப் 27, 2024 14:34

பொன்முடிக்கு மீண்டும் வந்திருப்பதை கிடைக்கவில்லையா நீதியரசர் இடம் தண்டனையை குறைத்துக் கொடுங்கள் வயதாகிவிட்டது என்று கெஞ்சினார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை இருந்து விடுதலை கிடைத்து விட்டது அதாவது தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது அப்படி இருந்தும் வந்திருப்பதை கொடுத்தாயிற்று வசூல் வேட்டை நடந்து கொண்டுள்ளது அது போன்று செந்தில் பாலாஜிக்கு டாஸ்மாக்க மின்சாரத்துறை ஒதுக்கப்படும் மீண்டும் டாஸ்மாக்கில் 20 ரூபாய் அதிகம் வசூலிப்பார்கள் மின்சார துறையில் அமோககமாக வசூர் வேட்டை நடக்கும். நாமெல்லாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.


Muralidharan S
செப் 27, 2024 13:34

குற்றம் சாட்டப்பட்டு, ஜாமீனில் இருப்பவர்கள் மீண்டும் மந்திரி ... இது இன்றைய காலகட்டத்தின் புது TREND. இந்த அரசாங்கத்தை ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்த மக்களே தெய்வம் கூட மன்னிக்க முடியாத குற்றவாளிகள். நன்றும் தீதும் பிறர் தர வாரா.. திரவிஷ கட்சிகளை ஆட்சி தேர்ந்து எடுக்கும் மக்களுக்கு தமிழ்நாட்டில் எப்பொழுதுமே நிரந்தர தண்டனைதான்.


M S RAGHUNATHAN
செப் 27, 2024 12:02

குற்றவாளி என்று உயர் நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்ட பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆகி இருக்கும் போது செந்தில் பாலாஜி மந்திரி ஆவதில் தவறு இல்லை. இது தான் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல். திமுக அரசு நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றும் அதுவும் அமைச்சர்கள் விஷயத்தில். யாருக்கும் வெட்கமில்லை என்று அன்று சோ சொன்னது மிகவும் சரி.


ஆரூர் ரங்
செப் 27, 2024 11:41

பாவம்.நல்ல மனுஷன் . தமிழ்க் குடிமகன்களுக்கு நல்லது செய்யப்போய் அநியாயமா கம்பியெண்ணினார். லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற முயற்சித்தவர்களுக்கு பாடம் கற்பித்தது தவறா? வேலை கிடைக்காதவர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுத்த நேர்மையான மகாத்மா மகானை எப்படி சிறையிலடைக்கலாம்? குடிமகன்களிடம் குவாட்டருக்கு பத்து ரூபாய் கூட வாங்கியது என்ன தவறு?. குடிப்பவர்களும் சமூகத்திற்கு கெட்டவர்கள்தானே ?ஆக கெட்டவர்களுக்கு பாடம் புகட்டிய நல்லாசான் எப்படி கிரிமினல் ஆவார்?


venugopal s
செப் 27, 2024 11:40

ஆயிரம் பேரைக் கொன்றவர்களை அங்கு மிக உயர்ந்த பதவியில் உட்கார வைத்துள்ள சங்கிகளுக்கு இவரைக் குறை கூற என்ன தகுதி உள்ளது?


ஆரூர் ரங்
செப் 27, 2024 12:07

3000 சீக்கியர்கள் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற ஆட்கள் ஆண்டது?


Muralidharan S
செப் 27, 2024 14:21

அப்பா.... திராவிஷ அரசியல்வியாதி எல்லாம் தோற்றுபோகணும் உன்கிட்டே..


vbs manian
செப் 27, 2024 09:28

தமிழக மக்களுக்கு ஒரு சவுக்கடி. மக்களை பார்த்து ஏளன சிரிப்பு.


raja
செப் 27, 2024 08:34

ராஜிவ் கொலைகாரனை கட்டி தழுவி வரவேற்ற இருவத்தி மூனாம் புலிகேசி மாடல் அரசர்.. பாட்டிலுக்கு பத்துறுவா அதிகம் வைத்து விற்றவருக்கு மங்குனி பதவி தராமலா போயிடுவார்..


SUBBU,MADURAI
செப் 27, 2024 09:45

அப்படி ஒருவேளை செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரானாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வாரம் இரண்டு தடவை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கண்டிப்பாக கையொப்பம் இட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது அவமானகரமாது.


Rajarajan
செப் 27, 2024 07:58

அதுசரி, சில சந்தேகங்கள். இப்போதைய முதல்வர் தானே, அன்று செந்தில் பாலாஜியை பற்றி பொதுவெளியில் புகார் வாசித்தார். அவரை சிறைக்கு அனுப்புவோம் என்றார். பின்னர் தெரிந்தே ஒரு குற்றவாளிக்கு, மந்திரி பதவி கொடுத்தது ஏன் ?? அப்படியெனில் உண்மையான குற்றவாளி யார் ?? இவரது தொண்டர்களே இதுபற்றி முதல்வரை கேட்காதது ஏன் ?? எந்த பொது ஊடகமும் இதுபற்றி விவாதம் நடத்தாது ஏன் ?? அப்படியெனில், செந்தில் பாலாஜி முதல்வர் மீது அவதூறு வழக்கு தொடுக்காதது ஏன் ? தன்னை ஏமாற்றிவிட்டதாக எந்த பொது ஆர்வலரும் இதுபற்றி, முதல்வர் மீது பொதுநல வழக்கு தொடுக்காது ஏன் ?


சமீபத்திய செய்தி