உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு

அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என, அமைச்சர்கள் போட்டி போட்டு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். 'அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, சமீபத்தில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசினார். ஏற்கனவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு விழாவில், உதயநிதி துணை முதல்வராகும் தேதியை சொல்லி விட்டு, பின் மாற்றிக் கொண்டார்.அமைச்சர்கள் துரைமுருகன், மகேஷ், அன்பரசன், மஸ்தான் உள்ளிட்டோரும் போட்டி போட்டு, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குமாறு ஆதரவு கோஷம் எழுப்பி வருகின்றனர்.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது உறுதியாகி விட்டது. அதனால் தான், அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டு ஆதரவு அளித்து வருகின்றனர். கட்சி கூட்டங்கள் நடத்தும்போது, அதில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி பேசுமாறு, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு மாவட்டச்செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை தலைமை செயலகத்தின் கீழ் தளத்தில், துணை முதல்வருக்கான அறை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அமைச்சர்களின் வரிசையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்ததாக, மூன்றாவது இடம் துணை முதல்வருக்கு ஒதுக்கப்படுகிறது.வரும் 24ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அவர் சென்னை திரும்பியதும், எந்த நேரத்திலும் உதயநிதியை துணை முதல்வராக்கும் அறிவிப்பு வெளிவரலாம். அதே நேரத்தில், இது புரட்டாசி மாதம் என்பதால், அறிவிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
செப் 23, 2024 21:14

இந்த உதயநிதி தன்னுடைய அப்பாவுக்கே செக் வைக்கிறார்.


nv
செப் 22, 2024 18:37

சினிமா காரனையும் உதவாக்கரை ஆட்களையும் தமிழகம் புறக்கணித்தால், உண்மையில் தமிழகம் எல்லா துறைகளிலும் முதல் இடம் பிடி‌க்கு‌ம்.. ஆனால் நம்ம ஆட்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கும், ஒரு பிரியாணி பாக்கெட்க்கும், 200 ரூபாயை வாங்கிகிட்டு வாக்கு அளித்தால் நம்மை எவரும் காக்க முடியாது..


என்றும் இந்தியன்
செப் 22, 2024 17:12

குடும்ப ஆட்சி போதுமடா சாமி கும்பிடு போட்டனர் இலங்கை மக்கள் ராஜபக்சே மகன் படுதோல்விஎன்ன டாஸ்மாக்கினாட்டு மக்களே ஒரு சிறிய தேசம் இலங்கை அவங்களுக்கு புத்தி வந்துடுச்சு அதே டாஸ்மாக்கினாடு அது இது என்று டப்பா கொட்டுகின்றார்கள் அதுக்கு அறிவே வராதா என்ன எழுமின் விழிமின் புறப்படுமின்


theruvasagan
செப் 22, 2024 15:53

பதவிக்கும் அதிகாரத்துக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற 21ம் பக்க மதிப்பீடு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது.


Sundaran
செப் 22, 2024 15:07

பதவி பணம் என்று வரும் பொழுது கொள்கை தன்மானம் எல்லாம் காற்றில் பறந்து விடுகிறது யார் காலிலும் விழ தயாராகி விடுகிறார்கள் இது தான் திராவிடம்


krishna
செப் 22, 2024 10:10

ETHANAI KAALAMDHAAN EEMAATRUVAAR.INDHA URUTTU THODANGI ORU VARUDAM AAGIRADHU NAATHAM PIDITHA KANJA TASMAC VIDIYAA NAATIL.


sundaran manogaran
செப் 22, 2024 09:45

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயதாகிவிட்டதா? அரசு நிர்வாகத்தில் சிறப்பாக இல்லையா?ஙஉடல் நலம் இல்லையா?? இனி தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது என்பதாலா?.... உதயநிதி துணை முதல்வர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றா?? ஒண்ணும் புரியலெயே...


sridhar
செப் 22, 2024 11:30

கடைசி கேள்வி தவிர மற்ற எல்லாத்துக்கும் ஆமாம் என்பது தான் பதில் .


ஆரூர் ரங்
செப் 22, 2024 14:04

பாலாறும் தேனாறும் ஏன் எதற்கு ஓடவேண்டும் ? ரேஸ்கார் ஓடினா போதும்.


A Viswanathan
செப் 22, 2024 08:46

எல்லாம் பதவி சுகத்திற்காக போட்டி போட்டு கொண்டு ஆதரிக்கன்றனர் வருங்காலத்திற்காக.


மோகனசுந்தரம்
செப் 22, 2024 07:36

இந்த அல்லக்கைகள் போட்டி போட்டு ஆதரிக்கவில்லை என்றால் நாளைக்கு அவர்களுக்கு ஆப்பு தானே. இந்த கொத்தடிமை கூட்டங்கள் எப்பொழுதுதான் திருந்தமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.


எஸ் எஸ்
செப் 22, 2024 17:23

கொத்தடிமைகள் திருந்த வாய்ப்பு இல்லை. வாக்காளர்கள்தான் திருந்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை