உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள்; மனதை மயக்கும் மன்னார் வளைகுடா

ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள்; மனதை மயக்கும் மன்னார் வளைகுடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாயல்குடி : இந்தியாவின் மிக முக்கிய கடல்வாழ் பல்லுயிர் பெருக்க பகுதியான மனதை மயக்கும் மன்னார் வளைகுடா கடலில் புதிதாக 62 வகை அரிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரை மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. 10,500 சதுர கி.மீ.,ல் பாம்பன் முதல் துாத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்துள்ளன.மன்னார் வளைகுடா பகுதி கடல்வாழ் உயிரினங்களின் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு, சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கலம், கண்ணைக் கவரும் பல வண்ண மீன்கள், பாலுாட்டி வகைகளான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், அரிய வகை பவளப்பாறைகள் என பதிவு செய்யப்பட்ட 4223 கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.மன்னார் வளைகுடா கடலில் தற்போதுள்ள கடல் வாழ் உயிரினங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த ஆய்விற்கு துாத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 2017 மே முதல் தற்போது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதி 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதில் 62 புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவற்றில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 3 மீன் இனங்கள், 17 மில்லியன் பவளப்பாறை இனங்கள், 16 சங்கு இனங்கள் என 62 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்கு பகுதியிலும் காணப்பட்டன. இவற்றை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயற்சி நடக்கிறது.இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதியவை. 2003 மற்றும் 2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும் தற்போதுள்ள ஆய்வு தகவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் களத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதற்கு ஸ்கூபா டைவிங் வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கடலில் அதிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம். கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்விற்கு ஸ்கூபா டைவிங் முக்கிய பங்கு வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
அக் 12, 2024 07:26

இப்படிப்பட்ட மன்னார்வளைகுடாவைத்தான் சேது சமுத்திரத்துட்டம் எனும பெயரில் நாசப்படுத்த அவரை திருட்டுக் கூட்டம் முனைந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை