உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாகேந்திரன் - திருமாவளவன்.சந்திப்பு தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு

நாகேந்திரன் - திருமாவளவன்.சந்திப்பு தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை, திடுமென சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gbn1ebif&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திருமாவளவன் வெளியிட, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கட்சி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தனர். அங்கு ஏற்கனவே, விமான பயணத்துக்காக காத்திருந்த திருமாவளவன், நயினார் நாகேந்திரன் மற்றும் முருகனை சந்தித்துப் பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரனுக்கு துண்டு அணிவித்து, வாழ்த்து தெரிவித்ததோடு, தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். பின், மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன், திருமாவளவன் ஆகிய மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திருமாவளவன், சமூக வலைதள பக்கங்களில் பதிவிட, தி.மு.க., கூட்டணியில் சர்ச்சையாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் திருமாவளவன் சேர வேண்டும் என்று, அண்மையில் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், விமான நிலையத்தில் திருமாவும், நாகேந்திரனும் சந்தித்து பேசியிருப்பது, தி.மு.க., கூட்டணியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நல்லவன்
மே 25, 2025 11:32

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை ... திருமா ஒன்றும் எடப்பாடி இல்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 25, 2025 13:13

உங்க கூற்றுப்படி திருமா கூவத்தில் தான் இருப்பேன் என்றால் கூவத்தில் இருப்பது தான் சிறந்தது....!!!


செல்வேந்திரன்,அரியலூர்
மே 25, 2025 16:32

சரி, நீங்க சொல்வதை ஒத்துக் கொண்டாலும் விமான நிலையத்தில் அந்த நேரத்தில் நயினாருக்கு பொன்னாடை போற்றுவதற்கு திருமாவுக்கு துண்டு எப்படி வந்தது? அதையாவது விளக்கி சொல்லுங்க...


Haja Kuthubdeen
மே 25, 2025 21:19

ஆமா ஆமா...எடப்பாடி இல்லதான்...எடப்பாடிலாம் பிஜெபி 114அஇஅதிமுக 112சீட்டுலாம் கூட்டணி ஒப்பந்தம் போட மாட்டார்...அதெல்லாம் திமுகவோட கொள்கை.1980ல் காங்கிரசோடு அப்டிதானே சேர்ந்து கூட்டு பொரியல் எல்லாம் போட்டார்கள்.


hariharan
மே 25, 2025 11:23

ஊர்களுக்கு போகும்போது எதுக்கும் இருக்கட்டும்ன்னு 4, 5 புதுத் துண்ட பைக்குள்ள வெச்சு கொண்டு போவாங்க போல இருக்கு, இல்லாட்டின்னா எங்கேருந்தாவது ஆட்டைய போட்டதா இருக்குமோ.


Oviya Vijay
மே 25, 2025 08:03

இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வீழ்த்தப்பட வேண்டுமெனில் அதன் கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மையம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் வெளியேறி பிஜேபி, அதிமுக மற்றும் நாதக அல்லாத ஒரு கட்சியுடன் கூட்டணி அமையுமாயின் கண்டிப்பாக திமுக தோற்கடிக்கப்படும். இவையன்றி வேறு எது நிகழ்ந்தாலும் 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் கட்டிவரும் மனக்கோட்டைகள் அத்தனையும் 2026 தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் சுக்குநூறாக உடைந்திருக்கும்...


Manaimaran
மே 25, 2025 04:20

நாடகம்


, ராமகிருஷ்ணன்
மே 25, 2025 03:55

எல்லாம் டாஸ்மாக் ஊழல்கள், உதைநிதியின் நண்பர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம், அதிமுக, பாஜக கூட்டணி, இதனால் வர உள்ள தேர்தலில் திமுகவின் படுதோல்வி என்று எதிர் காலத்தில் நடக்க உள்ளதை கணக்கிட்டு நடக்கிற நாடகம் தான்.


சமீபத்திய செய்தி