உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தினமலர் தலையங்கம் : டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?

தினமலர் தலையங்கம் : டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.இதனால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள நகரங்களில் இருந்தும் பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களில் பயணிக்க, சில நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. சமீபத்தில், மஹா கும்பமேளாவிற்கு செல்வதற்காக, டில்லி ரயில் நிலையத்தில் குவிந்திருந்த பயணியர், ரயிலில் முண்டியடித்து ஏற முற்பட்ட போது, நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, 18 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.பிரயாக்ராஜ் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என தெரிந்தும், அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், தெளிவான திட்டத்தை செயல்படுத்தாதது, முன்பே இவ்வளவு கூட்டம் வரும் என கணிக்க தவறியது, அரசு மற்றும் ரயில் நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்த பலிகளுக்கு காரணம்.'டில்லி ரயில் நிலைய நெரிசல் சம்பவத்திற்கு, நடை மேம்பாலத்தில் சென்ற போது, சில பயணியர் கால்தடுக்கி கீழே விழுந்ததும், அதை தொடர்ந்து மற்றவர்கள் அவர்கள் மீது விழுந்ததுமே காரணம்' என, ரயில்வே நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.ரயில்கள் புறப்பாட்டில் ஏற்பட்ட தாமதம், அளவுக்கு அதிகமான பயணியருக்கு டிக்கெட் வழங்கியது, ரயில்கள் புறப்படும் நடைமேடைகளை கடைசி நேரத்தில் மாற்றியது போன்ற, ரயில்வே அதிகாரிகளின் குளறுபடிகளே நெரிசலில் பலர் உயிரிழக்க காரணம் என்று, ரயில்வே துறையின் முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் உட்பட, சில தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது.நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த உடன், ரயில்வே விதிமுறைகளின்படி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 2.5 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.பொதுவாக இழப்பீடு விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ, ரொக்கமாக, 50,000 ரூபாய் வரை மட்டுமே வழங்க முடியும். அந்த விதிமுறைகளை மீறி, ரயில் நிலையத்திலேயே ரொக்கமாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது, அரசின் நெறிமுறைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நெரிசல் சம்பவத்திற்கான காரணங்களை கண்டறியாமல், அரசு மீது மக்கள் களங்கம் சுமத்தாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே, இழப்பீடு தந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.ரயில் விபத்துகள் நடந்தவுடன், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது வழக்கமானது. அதுபோலவே, டில்லி நெரிசல் சம்பவத்தை தொடர்ந்தும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜினாமா செய்ய வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாது என்றாலும், டில்லியில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள், நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இனி நடைபெறாத வகையில், முறையான சீர்திருத்தங்களை ரயில்வே அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில், போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, வழிகாட்டி குறிப்புகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்தினாலே, திருவிழாக்கள் மற்றும் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க குவியும் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியும்.அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் முடியும். அத்துடன், கூட்டத்தை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்ப ரீதியான விஷயங்களையும் அமல்படுத்தலாம். ரயில்வே துறை இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்; தவறுகள், உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பல்லவி
பிப் 25, 2025 20:40

கோத்ரா சம்பவம் இது வரை பாடம் கற்பிக்க வில்லை இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 25, 2025 02:19

விழித்துக் கொள்ள வேண்டியது ரயில்வேத்துறை மட்டும் அல்ல. குடும்பக்கட்டுப்பாடு துறையும் தான்.


aaruthirumalai
பிப் 24, 2025 21:21

ஒரே சிரிப்பா இருக்கு


அப்பாவி
பிப் 24, 2025 17:26

விழிக்குமா? எம்.பி.ஏ அமைச்சர் தலைமையில் முழிக்கும்.


hariharan
பிப் 24, 2025 17:19

கடந்த வாரம் சபரிமலை சென்றுவிட்டு பம்பையிலிருந்து நிலக்கல் செல்வதற்காக பேருந்தில் ஏற முடியவில்லை. சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிலக்கல்லிலேயே நிறுத்திவிட்டு பேருந்தில் செல்ல வேண்டும். ஜனத்திரள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்துகள் வந்தவுடன் மக்கள் முண்டியடித்து ஏற முயற்சிக்கின்றனர். கேரள அரசுக்கு பக்தர்களின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் சன்னிதானத்திலிருந்து பம்பை வரை கழிப்பிடங்களோ அல்லது அடிப்படை வசதிகளோ பேருந்தில் சிரமமின்றி ஏறுவதற்குள்ள சௌகரியங்களோ எதுவுமில்லை. கேரள அரசின் கேவலமான நிர்வாகம்.


A.Gomathinayagam
பிப் 24, 2025 14:13

வி ஐ பி தரிசனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தில் ,சிறிதும் அடித்தட்டு பக்தர்களுக்கு கொடுப்பதில்லை.


J.Isaac
பிப் 24, 2025 13:49

மும்மொழி படிக்கிற மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.


Barakat Ali
பிப் 24, 2025 12:30

கோவிட்டில் பாதிப்பையும் தாண்டி மிச்சம், சொச்சமே இத்தனை உயிரிழப்புக்களை ஏற்படுத்த முடிந்தால் ????


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 12:12

இது போன்ற விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. 2014-இல் கும்பமேளா நடந்தபோது, இதே போன்ற விபத்து பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் நடந்தது என்பதை நினைவுகூறத் தோன்றுகிறது. அப்போது 42 பக்தா்கள் உயிரிழந்தனா் 45 போ் படுகாயம் அடைந்தனா். அதிலிருந்து ரயில்வே நிா்வாகம் எதுவும் கற்கவில்லை என்பதைத்தான் இப்போதைய விபத்து உணா்த்துகிறது ..... 14, 15 நடை மேடைகளுக்கு இடையே கட்டுக்கடங்காத அளவில் நெரிசல் காணப்பட்டதற்கு முக்கியமான காரணம், மிக அதிக அளவில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேரத்துக்கு 1,500 பயணச் சீட்டுகள் வீதம் ரயில்வே நிா்வாகம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வழங்கி வந்திருக்கிறது. பயணச் சீட்டுக்கு ஏற்ப போதிய ரயில்கள் இருக்கின்றனவா, இடம் இருக்கின்றனவா என்பது குறித்த சிந்தனை ரயில்வே நிர்வாகத்துக்கு இல்லாமல் போனது விபத்து ஏற்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் ..... பண்டிகைக் காலங்களிலும் கும்பமேளா போன்ற திருவிழாக் காலங்களிலும் ரயில்வே நிா்வாகம் நெகிழ்வுக் கட்டண முறையை பிளெக்ஸி கட்டண முறையை கையாளுவது தவறு மட்டுமல்ல, கண்டனத் திற்குரியதும்கூட. முன்பதிவு செய்வதற்கு வசதி இல்லாதவா்களும், மிக அதிகமான கட்டணம் செலுத்த முடியாதவா்களும் சாதாரண வகுப்பில் பயணிக்க முற்படுகிறாா்கள். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விழையும் பக்தா்கள் வேறு வழியில்லாமல் கிடைத்த ரயிலைப் பிடித்து பிரயாக்ராஜ் செல்ல முனைப்புக் காட்டுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அது ஏன் ரயில்வே நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கவில்லை ?? .... விபத்து சில முக்கியமான குறைபாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிக அளவில் எல்லா ரயில்களிலும் முன்பதிவு இல்லாமல் பயணிப்பதற்கான இடங்கள் அல்லது பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த நடைமேடைகள் பெரிதாக்கப்பட வேண்டும். கூடுதல் நடைமேடைகள் எல்லா ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட வேண்டும் .... ரயில் நிா்வாகம் தேவையில்லாமல் தனியாக ரயில்வே காவல் படை வைத்திருப்பதைக் கைவிட்டு, விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ளது போல உள்துறை அமைச்சகத்தின் கீழான காவல் படையினரிடம் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும். புது தில்லி ரயில் நிலைய விபத்துக்கு மிக முக்கியமான காரணங்கள் ரயில்வே நிா்வாகத்தின் முறையான திட்டமிடலின்மையும், ரயில்வே பாதுகாப்பு படையினா் போதிய அளவில் இல்லாமல் இருந்து கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்தாமையும்தான் ....


Ray
பிப் 24, 2025 19:00

ரயில்வே பாதுகாப்பு படை RAILWAY PROTECTION FORCE RPF பயணிகள் பாதுகாப்பில் ஈடுபடுவதில்லை ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பவர்கள் ரயில்வே போலீஸ் என்பது மாநில போலீஸ் படையிலிருந்து ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக டெபுடேஷனில் நியமிக்கப் படுவோர். டில்லியை பொறுத்தவரை டில்லி போலீஸ் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளதுதான். அவர்கள் RIOT CONTROL இல் ஜாம்பவான்கள் தண்ணீரை பீச்சியடித்து / கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தலில் விற்பன்னர்கள் டில்லி ஆச்சி அமைப்பதில் அமீத் பிசி


aaruthirumalai
பிப் 24, 2025 21:25

இது எல்லாமே செவிடன் காதில ஊதிய சங்காகவே இருக்கும்.


அசோகன்
பிப் 24, 2025 12:04

மெரினாவுல நடந்தது மக்கள் தவறு..... டெல்லியில் நடந்தது மோடி தவறு...... இந்த உபி களுக்கு கூச்சமே இருக்காதா.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை