உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வழித்தடம் புதுசு: பேருந்து பழசு; துவக்க நாளிலேயே டயர் டமால்

வழித்தடம் புதுசு: பேருந்து பழசு; துவக்க நாளிலேயே டயர் டமால்

அச்சிறுப்பாக்கம்; அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரத்தி ஊராட்சி. இப்பகுதியின் அருகே, அன்னங்கால், பொறங்கால், கூணங்கரணை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள், அரசு பேருந்து வசதியின்றி இருந்தது.பகுதிவாசிகளின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பின், நேற்று முன்தினம், திருக்கழுக்குன்றம் பகுதியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், தாம்பரம் -- திருக்கழுக்குன்றம், ஒரத்தி -- தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் பேருந்து துவக்க விழா நடந்தது.இதையடுத்து, ஒரத்தியில் இருந்து அன்னங்கால், பொறங்கால், ரெட்டிபாளையம், எலப்பாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் தடம் எண்: 77பி பேருந்தை வரவேற்ற அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமையிலான தி.மு.க.,வினர், பேருந்தை அலங்கரித்து, மலர்கள் சூடிவரவேற்றனர்.பொறங்கால் பகுதியில் இருந்து ஒரத்தி மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். ஒரத்தி அருகே சென்றபோது, திடீரென 'டமால்' என, பெரும் சத்தத்துடன் டயர் வெடித்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து பயணியர் கூறுகையில், ''சுந்தராடிராவல்ஸ்' பட பாணியில் காலாவதியான பேருந்திற்கு பெயின்ட் அடித்து, டயர்களில் கருப்பு வர்ணம் தீட்டி, புதிய பேருந்து என மக்களை ஏமாற்றியுள்ளனர். வழித்தடம் மட்டுமே புதியது, பேருந்து பழசு தான்,'' என, கிண்டலடித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Karunakaran
ஜன 24, 2025 12:29

ஒரு புதிய முயற்சி அல்லது தொடக்கத்தின் போது, சிறு தவறுகள் இருந்தால் சரி செய்ய வேண்டியதுதான். பஸ் இல்லாத கிராமங்களுக்கு பஸ் விட்டதற்கு முதலில் பாராட்டுவோம். இயந்திர கோளாறு மற்றும் பேருந்து பழுது போன்றவைகள் எளிதில் சரிசெய்யக்கூடியவைகலே, எனவே குறைகூறுவதையோ அல்லது நாகரீகமற்ற வகையில் கருத்து கூறுவைதை தவிர்ப்பது நல்லது.


vivek
ஜன 24, 2025 14:21

ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் பலி ஏற்பட்டு இருந்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?


Ramesh Sargam
ஜன 24, 2025 12:16

இப்ப டயர் வாங்க ஒரு ஆயிரம் கோடிக்கு டெண்டர் விட்டு, அதில் 999 கோடியை ஆட்டைபோடுவார்கள். இது தேவையா நமக்கு?


Ramesh Sargam
ஜன 24, 2025 12:09

சரி சொல்லிட்டீங்க இல்ல, இப்ப டயர் வாங்க ஒரு ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடுவாங்க. ஆனால் டயர் வாங்க மாட்டாங்க. எல்லா பணத்தையும் ஆட்டை போட்டுடுவாங்க.


vivek
ஜன 24, 2025 11:00

வழித்தடம் புதுசு.... டயரு பழசு...இனிமே இரும்புல தான் டயரு.....எப்படி எங்க அறிவு....


தமிழன்
ஜன 24, 2025 10:57

2 திருட்டு திராவிட ஆட்சிகளில் தமிழகத்திலிருந்துதான் பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் வியாபாரம் தோன்றியது


Ram pollachi
ஜன 24, 2025 10:55

வண்டியில் கியர் சரியாக விழுவது இல்லை... பராமரிப்பு என்பது கிடையாது, ஒரே வண்டியை பலர் இயக்குவதால் என்ன பிரச்சினை என்பதே பழுது பார்ப்பவருக்கு சவாலாக உள்ளது. மலையை முழுங்கி சுக்கு கசாயம் குடிப்பவர்களுக்கு பெயர் தத்தியா? பொருத்தமா இல்லையே நண்பா.


தமிழன்
ஜன 24, 2025 10:52

ஆட்சியில் டயரு டமாலு மக்கள் உயிர் பனாலு


தமிழன்
ஜன 24, 2025 10:42

காயிலாங்கடை வண்டி இப்படித்தான் இருக்கும் பழைய துருப்பிடித்த இரும்புக்கு பேரிச்சம்பழம் பேரிச்சம்பழம் குடும்பத்துடன் இந்த வண்டியில் பயணம் செய்ய வைக்க வேண்டும்


கிஜன்
ஜன 24, 2025 10:39

ஏர் கொஞ்சம் கூட அடிச்சிருப்பாங்க .... பஸ் விட்டா செய்தியல்ல... டயர் வெடிச்சா செய்தி...என்று இருப்பபவர்களுக்கு ....மெல்ல அவல் .... அவ்வளவு தான் ...


அப்பாவி
ஜன 24, 2025 10:30

தத்திகள் நடத்தும் அரசு போக்குவரத்து. இப்பிடித்தான் இருக்கும்.


சமீபத்திய செய்தி