உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பட்டாளம் வேண்டாம்: இடைத்தேர்தலில் தி.மு.க., தலைமை முடிவு

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பட்டாளம் வேண்டாம்: இடைத்தேர்தலில் தி.மு.க., தலைமை முடிவு

'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணித்துள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய பட்டாளங்கள் தொகுதியில் முகாமிட வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்ட சபை தொகுதிக்கு, இரண்டாவது முறையாக பிப்., 5ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., சார்பில், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bhslpw9n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரஸ் போட்டியிட்டால், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால், தி.மு.க., களம் இறங்கியதால், அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.வெ.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன.வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி மட்டும், ஆளுங்கட்சியை துணிச்சலுடன் எதிர்த்து களம் இறங்கி உள்ளது. அ.தி.மு.க., அல்லது பா.ஜ., இரு கட்சிகளில் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் களம் இறங்கி இருந்தால், தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அந்த தொகுதியில் குவிக்கச் செய்து, தேர்தல் பணியாற்ற வைத்திருப்பர்.கட்சி நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள ஓட்டுகளை வளைக்கும் பணியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டிருப்பர். அமைச்சர்களும், தி.மு.க.,வினரும், பண பலம், படை பலத்துடன், தேர்தலில் வெற்றி பெற உழைப்பர். அ.தி.மு.க., - பா.ஜ., போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால், தி.மு.க., தலைமை அத்தொகுதியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.கடந்த 2023ல் ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., இறந்ததை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில், அவரது தந்தையும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் தென்னரசு போட்டியிட்டார். எனவே, தி.மு.க., அமைச்சர்கள் 12 பேரும், 25க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்களும், தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், தற்போதைய இடைத்தேர்தலை சந்திக்க, தி.மு.க., சார்பில் தேர்தல் பணிமனை சமீபத்தில் ஈரோடில் திறக்கப்பட்டது.

வாய்ப்பு உண்டு

இதில், மாவட்ட அமைச்சர் முத்துசாமி, துணை பொதுச்செயலர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், தி.மு.க., அமைப்பு துணை செயலர் அன்பகம் கலை மட்டுமே பங்கேற்றனர். மூத்த அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. முத்துசாமியும், தேர்தல் பிரசாரத்தை கடந்த 11ம் தேதி துவக்கி விட்டார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், ஆய்வு பணி தொடர்பாக ஈரோடு சென்ற முதல்வர், மக்களை சந்தித்தார்.எனவே, அவர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வாய்ப்பில்லை. துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி போன்றோர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு. வேட்புமனு தாக்கல் முடிந்த பின், தி.மு.க., சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.முக்கிய கட்சிகள் போட்டியிடாததால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பட்டாளத்தை தொகுதியில் குவிக்க வேண்டாம் என, தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது. கொங்கு மண்டலத்தைச் சுற்றியுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் ஆகியோரை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிச்சல்

ஆளுங்கட்சியினரின் கவனம் முழுதுமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லாமல் போனதற்கு, பிரதான கட்சிகள் போட்டியை தவிர்த்ததே காரணம் என்பதால், தமிழகத்தின் பிரதான கட்சியினர் மீது, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கடும் கோபம் அடைந்துஉள்ளனர்.கடந்த முறை காங்.,கை எதிர்த்து அ.தி.மு.க., போட்டியிட்டதால், கடும் போட்டியை மீறி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த காங்.,கின் கூட்டணி கட்சியான தி.மு.க., வாக்காளர்களை தினமும் பட்டியில் அடைத்து வைத்து கவனித்தது. இம்முறை தி.மு.க.,வே போட்டியிடும்போதும், அந்த கவனிப்பு இருக்காது என்பதால், தமிழகத்தின் பிரதான பிற கட்சிகள் மீது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.தி.மு.க.,வுக்கு அடுத்த நிலையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், கவனிப்பு விஷயத்தில் ஈடுபாடு காட்டமாட்டார் என்பதும், மக்களை ஆத்திரமூட்டி இருக்கிறது.

'வரும் 2026 எங்கள் இலக்கு!'

அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த முறை கூட்டணி கட்சியான காங்.,கை போட்டியிட வைத்தே, தி.மு.க., பணத்தை ஆறாக தொகுதிக்குள் அள்ளி விட்டது. மக்களை ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போன்று அடைத்து வைத்து, குஷிப்படுத்தினர். அதனால், 40,000 ஓட்டுகளை தொடுவதற்கே அ.தி.மு.க.,வால் சிரமப்பட வேண்டியதானது. இம்முறை தி.மு.க.,வே நேரடியாக களம் இறங்கி விட்டதால், கடந்த முறையை விட கூடுதலாக செலவழிக்க திட்டமிடுவர் என சொல்லப்பட்டது. அதனால், எப்படியும் தோல்வி என்பதை உணர்ந்தே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல அ.தி.மு.க., ஒதுங்கி விட்டது. இதனால், ஈரோடு கிழக்கில் பா.ஜ., போட்டியிடும் என நினைத்தோம். அ.தி.மு.க.,வே ஒதுங்கும்போது, நம் நிலை இன்னும் மோசமாகும் என உணர்ந்து, அக்கட்சியும் ஒதுங்கிக் கொண்டு விட்டது. இதனால், தி.மு.க., அதிகம் செலவழிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டது. வாக்காளர்கள் மீதான ஈர்ப்பு தி.மு.க.,வுக்கு குறைந்து விட்டது. மக்களுக்கு பெரிய அளவில் பரிசுத் தொகை இம்முறை செல்லாது. அதனால், எங்கள் மீது மக்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும். நாங்கள் 2026 சட்டசபை பொதுத் தேர்தலை எதிர்நோக்கி தான் செல்கிறோம். எங்கள் இலக்கு அதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath
ஜன 17, 2025 17:39

DMK எதிர்ப்பாளர்கள் NTK க்கு ஓட்டு போடலாமே.


Mani . V
ஜன 17, 2025 05:46

எங்களுக்கு தெரியாதா திமுகவின் கோட்பாடு? எரிக்காதே என்றால் எரிக்கணும், வெட்டாதே என்றால் வெட்டணும், வைக்காதே என்றால் வைக்கணும், பட்டாளம் வேண்டாம் என்றால் பட்டாளம் வேணும். நாங்களும் எத்தனை வருடமாகப் பார்த்து வருகிறோம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 19:37

சரியான முடிவு. அரசியல் கட்சிகளின் முழு முதல் நோக்கமே மக்கள் ஆதரவைப் பெறுவது தான். அது தேர்தல் வழியாகத் தான் தெரியும். விக்கிரவாண்டி யிலும் ஓடி ஒளிந்தார்கள். ஈரோடி லும் ஓடி ஒளிகிறார்கள். இதில் திமுக மீது மக்களுக்கு எரிச்சலாம்...


chinnamanibalan
ஜன 16, 2025 12:45

திமுக விடம் பணத்துக்கு பஞ்சமில்லை. எனவே இந்த தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் அனைவரும் விடுதலின்றி கவனிக்கப்படுவர் என்பது உறுதி. மேலும் வழுவான கட்சிகள் எதுவும் களத்தில் இல்லாததால், நாதக வை, டெபாசிட் இழக்க வைக்கும் முயற்சி நடைபெறக் கூடும். வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்கும் தன்மையை என்றோ இழந்து விட்டனர். எனவே கிடைக்கும் தொகைக்கு ஏற்ப, கட்சி வேறுபாடு பாராமல் பெருமளவில் திமுக வுக்கு வாக்களிப்பர். ஏனெனில் இப்போதைக்கு காசுதான் கடவுள்!


Suresh Sivakumar
ஜன 16, 2025 11:28

Anyway people will be given something something to vote. As usual they will take it and vote for them. Themuka nadaga sabha


Haja Kuthubdeen
ஜன 16, 2025 11:06

பண புழக்கத்தை அஇஅதிமுக கெடுத்து விட்டதே என்ற கோபம் அத்தொகுதி மக்களுக்கு...ருசி கண்டவர்களாயிற்றே...


பேசும் தமிழன்
ஜன 16, 2025 08:49

எதிர்கட்சிகள் போட்டியிடாத காரணத்தால்... செலவு செய்யாமல் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்... பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காத மக்கள் விரக்தியை... இந்த ஆட்சியின் மீதான வெறுப்பை.... நோட்டாவுக்கு ஓட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 08:05

வாக்காளர்களை செமத்தியா கவனிக்க தொகுதி பிரமுகர்கள் போதுமானவர்கள் ...... அமைச்சர்களின் கண்காணிப்பு போதுமானது .....


புதிய வீடியோ