உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷாவின் ராஜதந்திரம் யாருக்கும் புரியாது: தொண்டர்கள் தரிசன நிகழ்வில் நயினார் பேச்சு

அமித் ஷாவின் ராஜதந்திரம் யாருக்கும் புரியாது: தொண்டர்கள் தரிசன நிகழ்வில் நயினார் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'வரும் 2026ல், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி; அதற்கான தந்திரம் அமித் ஷாவிடம் உள்ளது,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். திருவண்ணாமலையில், நேற்று, தமிழக பா.ஜ., வேலுார் பெருங்கோட்டத்தின் தொண்டர்கள் தரிசன நிகழ்வு நடந்தது. அந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு கடைசி மணி அடிக்கும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுள்ளார். தி.மு.க., ஆட்சியை அவர் விரைவில் முடித்து வைப்பார். அமித் ஷா ஹரியானாவுக்குச் சென்றார். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மகாராஷ்டிராவிலும் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்தி உள்ளார். டில்லியிலும் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார். ஆக, அவர் நினைத்தால் ஆட்சி மாற்றம் உறுதி. அவருடைய ராஜதந்திரம் யாருக்கும் புரியாது. அவருடைய பேரை கேட்டாலே எல்லோரும் நடுங்குகின்றனர். அதேபோல, தோல்வியை எதிரிக்கு, பரிசாகக் கொடுத்து பழக்கப்பட்டவர் பிரதமர் மோடி. மோடி மற்றும் அமித் ஷாவால், தமிழகத்தில் வரும் 2026ல், ஆட்சி மாற்றம் வருவது உறுதி. மகளிருக்கு உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் கொடுப்பதால், அவர்கள் ஓட்டு போட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. அதில் மண் விழப்போகிறது. இனி வரும் காலம் பா.ஜ.,வுக்கானது. ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் அமித் ஷா தமிழகம் வரப் போகிறார். அப்போதும், தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். வரும் காலத்தில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களுக்கு பா.ஜ.,வே முக்கிய காரணமாக இருக்கும். 2026 தேர்தலுக்குப் பின், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படும். இது உறுதி. இவ்வாறு அவர் பேசினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பல்வவி
ஏப் 19, 2025 23:18

EVM தந்திரங்கள் பற்றி நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்


Kanns
ஏப் 19, 2025 11:31

Its Not ImPossible to Defeat-Oust-Punish AntiNation AntiPeople NativeHindus, MegaCorrupt MegaLoot Goonda PowerMisusing DMK & TMC& their Stooge Officialdoms. Amit Shah& Yogiji Can Do it With Extensive Propagandas& Alliance. Already they are FearingThats Why they do Destructive-Divisive PropagandasActionsMinority Appeasements, VoteBriberies, CasteismReservations, Sabotage BJP Alliance With Agents like EPS etc


venugopal s
ஏப் 19, 2025 10:18

இவருக்குப் புரியவில்லை என்பதை நாசூக்காக சொல்லி விட்டார்!


thehindu
ஏப் 19, 2025 09:06

இந்து மதவாதிகளின் கூடாரம் மத்திய அரசு , மீடியாக்கள் , கோவில்களும் .


vivek
ஏப் 19, 2025 10:18

சரிங்க பாய் .


thehindu
ஏப் 19, 2025 09:05

தமிழகத்திலே மத்திய குண்டர்கள் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாத செயல்களுக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்வது மட்டும்தான் இவர் வேலையா ?. அவர்களை காப்பதுதான் தினமலர் போன்ற மீடியாக்கள் .


thehindu
ஏப் 19, 2025 08:49

பயங்கரவாதிகள் இப்படித்தான் யாருக்குமே தெரியாமல் திட்டமிடுவார்கள்


अप्पावी
ஏப் 19, 2025 08:47

முதல்ல அவரோட வேஷத்தைப் புரிஞ்சுக்க இந்தி கத்துக்கோ நைனா.


thehindu
ஏப் 19, 2025 08:46

பயங்கரவாதிகள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்


Sampath Kumar
ஏப் 19, 2025 08:42

ஆக மொத்தம் உன்னக்கு புரியாது என்பதை இப்படி சமாளிக்க பாரு


pmsamy
ஏப் 19, 2025 06:24

அரசியல் தந்திரவாதிக் காண இடம். மக்கள் சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்று நாய் நாகேந்திரன் ஒப்புக்கொண்டு சிறப்பு


vivek
ஏப் 19, 2025 08:07

குற்றவாளிகளே அமைச்சர்கள் என்று திரியும் திராவிட பச்சொந்திகளின் சொம்பு ....


புதிய வீடியோ