உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை

தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை, தனக்கும், தொண்டர்களுக்கும் துாக்கம் இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த ஜூலை 7 முதல் ஆக., 25-ம் தேதி வரை, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என, எழுச்சி பயணம் மேற் கொண்டேன். கோவையில் துவங்கி திருச்சி வரை 40 நாட்கள், 24 மாவட்டங்களில், 118 சட்டசபை தொகுதி களில், 6,728 கி.மீ., பயணம் செய்து, 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களும், பெரும் வரவேற்பு அளித்தனர். தி.மு.க., ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் நடக்கும் அட்டூழியங்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நிறுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து, மக்கள் கவலை தெரிவித்தனர். மக்கள் கோபம் தி.மு.க., அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தி.மு.க., அரசு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தவறி விட்டது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல், முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார். பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியை பிடித்த பின், கோமா நிலைக்கு தி.மு.க., அரசு சென்று விட்டது. தமிழகத்தை பீடித்திருக்கும் துயரத்திற்கு, 2026ல் முடிவுரை எழுதுவோம். குடும்ப ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைப்போம். மோசமான விளம்பர மாடல் 'போட்டோ ஷூட்' தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அ.தி.மு.க.,வை அரியணையில் ஏற்றுவோம். என் எழுச்சி பயணத்திற்கு கிடைக்கும் பேராதரவையும், திரளும் மக்கள் வெள்ளத்தையும், முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெல்வது உறுதி அதனால் தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் நினைத்துக்கொண்டு நான் பேசுவதாகக் கூறுகிறார். நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன். முன்கள வீரனாக, என் எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை, அ.தி.மு.க., தொண்டர்களுக்கும், எனக்கும் துாக்கமில்லை. வரும் 2026ல் அ.தி.மு.க. வெல்வது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

T.sthivinayagam
ஆக 30, 2025 21:44

தூங்காமலே முதல்வர் பதவி கனவு காண்பது முடியுமா


ramesh
ஆக 30, 2025 21:34

அப்படி என்றால் எடப்பாடி அவர்களே இனிமேல் தங்களுக்கு நிரந்தரமாக தூக்கம் இன்மை தான் இருக்கும்


Narayanan Muthu
ஆக 30, 2025 19:57

அப்படி பார்த்தால் தூக்கமே இல்லாமல் போயிடும் போலேயே


Kudandhaiyaar
ஆக 30, 2025 15:56

அதிமுகவினர் பதவிக்கு வரும் வரை தூங்கமாட்டார்கள் மிக சரி . பதவிக்கு வந்தவுடன் தூங்கிவிடுவார்கள் அதை கரணம் காட்டி திமுக பதவிக்கு வந்துவிடும்.


Vasan
ஆக 30, 2025 15:12

EPS Sir, daily sleep is essential for everybody, for healthy life. While 8 hours of sleep per day is essential for a common man, people in public service, who sacrifice their sleep everyday for the wellness of public, should sleep at least 6 hours a day. This is my humble request. Please forget everything going on in political battle ground, though it is difficult, and have peaceful sleep for 6 hours a day, at the least.


Tamilan
ஆக 30, 2025 12:39

இவரின் அதிமுகவின் கடிவாளம் மத்தியிடம் இருக்கும்வரை இப்படி கூவிக்கொண்டே இருப்பார்


Oviya Vijay
ஆக 30, 2025 08:19

பிரசுரிக்கப்பட்ட செய்தியில் ஒரு இடத்தில் கூட பாஜக பெயர் இல்லை...ஆனால் இங்குள்ள கருத்து கந்தசாமிகள் பாஜக... பாஜக...என கதறுகிறார்கள்...முன்பு பாஜக செய்தியை பார்த்து கதறியவர்கள், இம்முறை அதிமுக பெயரைப் பார்த்தாலே கதறுகிறார்கள். இவர்கள் எந்த மார்க்கம் என்பது அனைவரும் அறிந்ததே...நீங்கள் என்னதான் சபித்தாலும் தமிழகத்தில், மதமாறாத மக்களுக்கான ஆட்சி நிச்சயம் 2026ல் அமையும்... ஜெய் பாரத்...


vivek
ஆக 30, 2025 09:00

நம்புங்க நம்ம திமுக சொம்பு இல்லை...இருநூறு இல்லை...அப்பம் இல்லை...ஆனால் அவர் இதயம் பத்திரம்


S.L.Narasimman
ஆக 30, 2025 08:07

லஞ்சம் ஊழல், கள்ளச்சாராயம், போதைபொருள் அராசகம் பெருகி, தேர்தல் பொய் வாக்குறிகளை நிறைவேற்ற துப்பில்லாத இந்த தீயசக்தி ஆட்சியை அகற்ற அதிமுக பிரசார கூட்டத்திற்குவரும் அளவிள்ள மக்கள்கூட்டமே சாட்சி. இங்கே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலே விடியலு நாடு பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த மாதிரி குடும்பத்தோடு வெளிநாடு இன்ப சுற்றுலா போறாராம்.


ramesh
ஆக 30, 2025 21:37

மணிப்பூர் கலவரத்தின் போது தங்கள் தலைவர்கள் பிடில் வாசித்து கொண்டு இருந்தார்களே அதை சொல்லுகிறீர்களா


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 07:33

பாஜாக்காவோட கூட்டணி வெச்ச பெறவு இவருக்கு தூக்கம் போயிடிச்சு என்பதை இப்படி சொல்றார்?


Mariadoss E
ஆக 30, 2025 07:12

ஓகே ஆனா பிஜேபி இல்லாம வாங்க....


vivek
ஆக 30, 2025 07:27

திமுக தனியா நின்ன டெபாசிட் வாங்குமா ....மரியதாஸ் கேள்வி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை