உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டவர் இல்லை; சிக்னல் இல்லை பி.எஸ்.என்.எல்.,லில் பெருந்தொல்லை

டவர் இல்லை; சிக்னல் இல்லை பி.எஸ்.என்.எல்.,லில் பெருந்தொல்லை

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கே சிக்னல் கிடைக்காத பரிதாப நிலை உள்ளதாக புலம்பி வருகின்றனர்.பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில், 'ரீசார்ஜ்' வசதிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இருப்பினும், பழைய உள்கட்டமைப்புடன் கூடிய, 'டவர், நெட்வொர்க்' பிரச்னைகளால், சமீப ஆண்டுகளாக இந்நிறுவனம் திண்டாடி வருகிறது. கடந்தாண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள், ரீசார்ஜ் விலையை திடீரென உயர்த்தியபோது, பி.எஸ்.என்.எல்., 'சிம் கார்டு' வாங்க மக்கள் படையெடுத்தனர். அப்படி வாங்கியவர்களுக்கு திருப்தியான சேவையை இந்நிறுவனம் வழங்கவில்லை.குறிப்பாக, '5ஜி' அதிக வேக இன்டர்நெட் பயன்பாட்டில் உள்ள சூழலில், '3ஜி' சேவையை இன்றளவிலும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அவ்வப்போது தான், '4ஜி' சேவை கிடைக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், மீண்டும் தனியார் டெலிகாம் நிறுவன சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகம் முழுதும் பி.எஸ்.என்.எல்., சிக்னல் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில், சிக்னல் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடுகின்றனர். சென்னை கிரீம்ஸ் சாலையில், தமிழக பி.எஸ்.என்.எல்., தலைமையகம் அமைந்துள்ளது, இதை சுற்றி மத்திய - மாநில அரசு அலுவலகங்கள், பிரபல தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் போனுக்கே சிக்னல் கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.இது குறித்து, பி.எஸ். என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணியில் சேர்ந்து, 15 ஆண்டுகளாகி விட்டன. முன்பெல்லாம் பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகளை, மக்கள் போட்டி போட்டு வாங்கினர்.இப்போது, நாங்கள் விற்பனையை அதிகரிக்க, 'ஸ்டால்' அமைத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. 'சிக்னல் கிடைக்கவில்லை; பேசிக் கொண்டிருக்கும்போது அழைப்பு துண்டிக்கப்படுகிறது' என, புகார்கள் தெரிவிக்கின்றனர். இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து சரி செய்கிறோம். ஆனாலும், முழுமையாக செய்ய முடியவில்லை. நாங்கள் பணிபுரியும் தலைமை அலுவலகத்திலேயே, பி.எஸ்.என்.எல்., போனுக்கு சிக்னல் பிரச்னை இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டார பொது மேலாளர் பாஸ்கரிடம் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்து விட்டார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Karai Vijayan
ஜூலை 21, 2025 07:17

நான் கடந்த 25 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்து வருகிறேன் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இதே பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தனியார் தொலைத்தொடர்பு சேவைகள் ஏராளமாக வந்தும் கூட நான் நமது தேசத்தின் நிறுவனம் என்ற எண்ணத்தில் இன்னமும் அதை பயன்படுத்தி வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் 4ஜி சேவை காரைக்காலுக்கு வழங்கப்பட்டது. அதுவும் திருப்திகரமாக இல்லை. அது இஷ்டப்பட்ட நேரத்தில் வருகிறது நாம் இஷ்டப்படும் நேரத்தில் ஓடி விடுகிறது கிடைப்பதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் காரைக்காலில் கடற்கரை ஓரத்தில் bsnl அலுவலக வாசலில் கூட நெட்வொர்க் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது...


NBR
ஜூலை 20, 2025 19:41

Nowadays the efficiency with working class is decreasing because of work load. If higher payments given they show some interest. Competition is very high with companies. So that AI is introduced in all companies.


Gokul Krishnan
ஜூலை 20, 2025 18:46

பதினொரு வருடங்களாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் இப்போதைய அரசு பிஸ்னல் 4ஜி லைசென்ஸ் வழங்க ஏன் இத்தனை காலம் தாமதம் செய்தது . மேலும் பெரும்பாலான ஜியோ ப்ரீபெய்ட் மாத கட்டணங்கள் 28 அல்லது 23 நாட்கள் மாறும் ஏன் 30 நாட்கள் இல்லை.


theruvasagan
ஜூலை 20, 2025 17:44

பிஎஸ்என்எல் மட்டுமில்லை.ஏர்டெல் ஜியோ போன்ற தனியார் நிறுவன சேவைகளிலும் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. 10 -15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது தொலை தொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி இல்லை. ஆகையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும புது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் இவர்கள் பெரிதாக முனைப்பு காட்டுவது இல்லை. உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முயல்வதில்லை. முக்கியமாக பல ஏரியாக்களில் இணையசேவை தொடர்பு வேகம் குறைவாகவோ அல்லது முற்றிலும் வராமலோ இருக்கிறது. அதிலும் பிஎஸ்என்எல் சேவை 2ஜி லெவலுக்கு மேல் கிடைப்பதில்லை. சேவை தரமில்லை. ஆனால் கட்டணத்தை மாத்திரம் ஏற்றி விடுவார்கள். மீண்டும் ஒரு நவீனமான தொலை தொடர்பு தொழில்நுட்ப புரட்சி வந்தால்தான் சரியாகும் போல உள்ளது. அதே சமயத்தில் கேபிள் மூலமாக வீடுகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு வரும் ப்ராட் பேண்ட் சேவைகளின் தரம் படிப்படியாக உயர்ந்து தற்போது திருப்திகரமாக உள்ளது.


Chandrasekaran
ஜூலை 20, 2025 17:37

பிஸ்னல் நிறுவனத்தை முதல்ல வித்துடணும். தனக்கு மிஞ்சி தானதர்மம்னு அரசு எல்லாத்துறையிலும் இருக்க வேண்டும். ஆனால் நேர்மாறக உள்ளது. தனியாரால் முடியும் என்பது என்ன வானத்திலிருந்து வந்தவர்களால் நடத்தப்படுகிறதா. பொறுப்பற்ற நிர்வாகம்.


Sathish Krishna
ஜூலை 20, 2025 17:05

Even in pondicherry the same issue arises.


Anand
ஜூலை 20, 2025 13:41

தெண்ட சம்பளம் கொடுத்து தெண்ட பயல்களை வேலைக்கு வைத்தால் ,தெண்டமான சேவை தான் கிடைக்கும் நம்ம பணம் தான் வேஸ்ட்


Arunagiri
ஜூலை 20, 2025 13:38

அருப்புக்கோட்டை நகரில் இதே தொல்லை தான் நீடிக்கிறது. நானும் தனியார் சிம் பயன்படுத்தி வந்தேன்.பிஎஸ்என்எல் நன்றாக இருக்கும் என்று நம்பி ரீசார்ஜ் செய்து தினமும் அழுது புலம்ப வேண்டியுள்ளது. டவரும் சிக்னலும் கிடைக்கவில்லை.நம்பி ஏமாந்துள்ளேன்.


Elumalai
ஜூலை 20, 2025 13:07

நமது இந்திய நிறுவனம் இப்படி இருக்கே நினைத்தால் அசிங்கம் 4Gசிம் கூவி கூவி வித்துட்டாங்க. ஒரு அழைப்பு ஒழுங்கா பேச முடியல


Elumalai
ஜூலை 20, 2025 12:57

நமது இந்திய அரசு நிறுவனம் இப்படியா? என நினைத்தால் அசிங்கமாக இருக்கிரது இதுலவேர 4கிசிம் கூவி கூவி வித்துட்டாங்க கேவலம்