உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் பெருமை

பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் பெருமை

சென்னை:''பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.சுப்பு சுந்தரம் எழுதிய, 'காசி கும்பாபிஷேகம்' நுால் வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட்டு பேசியதாவது:

நகரத்தார் சமூகம்

ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாடு ஆன்மிக தலமாக இருந்து வருகிறது.கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லீம் படையெடுப்பாளர்களால் காசிக்கு அச்சுறுத்தல்இருந்தது. ஆன்மிகப் பணிகளில் நகரத்தார் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் பல ஆன்மிக தலங்களில், அவர்களின் சேவை இன்றளவும் தொடர்கிறது.பொருளாதாரத்தை வளர்ப்பதில், நாட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. தார்மீக வழியில் பொருளாதாரம் வந்ததாக இருக்க வேண்டும்.சுய நலத்திற்காக மட்டுமே பொருளாதாரம் என, இருந்து விடக் கூடாது. பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்பு தான் நாம் குடும்பமாக இருக்கிறோம். பாரத ராஷ்ட்ரா என்பது தார்மீக கொள்கைகளால் ஆனது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

subramanian
ஜன 30, 2025 15:22

பல பெரியவர்கள் பல மணி நேரம் விளக்கி சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லி விட்டார் ஆளுநர் ரவி அவர்கள்.


Barakat Ali
ஜன 30, 2025 14:15

He likes to ....


sundarsvpr
ஜன 30, 2025 14:00

கிருஸ்துவ மிஷினரிகள் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகளில் மாரல் வகுப்புகளில் முறையே பைபிள் குரான் ஓதப்படுகின்றது நூறு % கிருத்துவ முஸ்லீம் மாணவர்கள் வருகின்றனர். அங்கு படிக்கும் ஹிந்துக்கள் இதனை கேட்கின்றனர். வாயால் சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் ஹிந்துக்களால் நடத்தும் பள்ளிகளில் தேவாரம் பிரபந்தங்கள் ஏன் சொல்வதில்லை. பள்ளிகளுக்கு சமய சின்னம் அணிந்துவர என்ன தயக்கம்? ஹிந்துக்களுக்குள் ஒற்றுமையை இல்லையா அல்லது பயமா? மாணவர்கள் தயங்குவதில்லை. இவர்களில் பெற்றோர்கள் தான் பதில் கூறவேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லா பிரிவினரும் குடுமி சிகை வைத்துஇருந்தனர். குடுமி வைத்துஇருபவர்கள் முகத்தில் காணும் வசீகரத்தை பாருங்கள். காரணம் மனத்திண்மை.


மோகனசுந்தரம் லண்டன்
ஜன 30, 2025 13:09

என்ன சார், நீங்கள் வேறு, நடுநடுவில் அந்த அயோக்கியர்களின் தோலை உரிக்கிறீர்கள்.


அப்பாவி
ஜன 30, 2025 12:54

சொல்லுங்க ஐயா.


Sivagiri
ஜன 30, 2025 12:47

அய்யய்யோ, இந்த அய்யாவுக்கு, வேற ஒண்ணுமே பேசுறதுக்கு இல்லே போல இருக்கு...


Ramesh Sargam
ஜன 30, 2025 12:44

ஆனால் அந்த சனாதானத்தை ஒரு எலிக்குஞ்சி, அதான் அந்த உதவா நிதி ஏளனமாகப்பேசுகிறது. அந்த எலிக்குஞ்சியை கண்டால் நசுக்கவும்.


Oru Indiyan
ஜன 30, 2025 12:43

பிள்ளையார்பட்டி குருக்கள் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பெருமை உண்டு ..


RAAJ68
ஜன 30, 2025 12:00

ஆஹா என்ன ஒரு பிராமணக் களை தாண்டவமாடுகிறது எல்லார் முகங்களிலும்.


R S BALA
ஜன 30, 2025 12:28

அப்போ என்ன எதிர்பாக்குறியா


Sridhar
ஜன 30, 2025 14:54

படிச்சவங்க நேர்மையானவங்க முகங்களில் அப்படிதான் இருக்கும். புதுசா சொல்ற?


Sundar R
ஜன 30, 2025 11:57

Sanatan is for direction.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை