உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அணு ஆயுத நாடு; இந்த பூச்சாண்டி பலிக்காது!: பஹல்காம் பயங்கரத்துக்கு பதில் சொல்லுமா பாக்.,

அணு ஆயுத நாடு; இந்த பூச்சாண்டி பலிக்காது!: பஹல்காம் பயங்கரத்துக்கு பதில் சொல்லுமா பாக்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பகைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்கள் பதிலடி தருவோம் என கூறும் பாகிஸ்தான், 'நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு' என, மிரட்டி வருகிறது.இரு நாடுகளின் ராணுவ வலிமை மற்றும் அணுசக்தி திறன், சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும், ஒரு நாடு போருக்கு கிளம்பிவிட்டால், அது அணு ஆயுதத்தை தான் முதல் ஆயுதமாக பயன்படுத்துமா?அப்படியென்றால், ரஷ்யாவில் இல்லாத அணு ஆயுதமா? அமெரிக்காவை விட, அதிக ஆயுதங்களை குவித்துள்ள ரஷ்யா, உக்ரைன் போரில் தனது முழுத்திறனையும் பயன்படுத்தவில்லையே. அணுசக்தி இருப்பதாக காட்டிக்கொள்ளவில்லையே.இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்தாலும், இந்தியா பெரிய ராணுவ நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது; பாகிஸ்தான் பயந்து நடுங்குகிறது.

பின்தங்கும் பாக்.,

படை வீரர்கள் பலத்தில், இந்தியா 15 லட்சம் ராணுவ வீரர்கள் எனும் வலிமை கொண்டது; பாகிஸ்தானில், 6 லட்சத்து 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் தான் உள்ளனர்.2024ம் ராணுவ பட்ஜெட்டில் இந்தியாவின் ஒதுக்கீடு 8,600 கோடி டாலர்கள்; பாகிஸ்தானின் ஒதுக்கீடு 1,000 கோடி டாலர்கள். அணு ஆயுதங்களை பொறுத்தவரை, இந்தியாவிடம் 180, பாகிஸ்தானிடம் 170 உள்ளன.இந்தியாவிடம் 480 அதிநவீன போர் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம், 300 தான் உள்ளது. கடற்படை கப்பல்களைப் பொறுத்தவரை, இந்தியாவிடம், 210 மற்றும் பாகிஸ்தானிடம் 44 உள்ளன.

2 விக்கெட்

இந்தியாவும், பாகிஸ்தானும் 1947, 1965, 1971, 1999 என நான்கு போர்களில் ஈடுபட்டுள்ளன. இதில் மூன்று போர்கள், காஷ்மீர் மீதான ஆசையால், பாகிஸ்தான் அத்துமீறி போரில் ஈடுபட்டு, மண்ணைக் கவ்விக்கொண்டவை. 1971ம் ஆண்டு நடந்த இந்திய - பாக்., போர் வங்கதேசம் உருவாக காரணமானது. அதே வங்கதேசம் இன்று, பாகிஸ்தானுடன் சேர்ந்தது, வளர்த்த கடா மார்பில் பாயும் கதையாக, இந்தியா மீது போர் தொடுக்க கங்கணம் கட்டியுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா வலுவான பதிலடி தர விரும்புகிறது. 2016 மற்றும் 2019ல் நடந்தது போல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போன்ற டிரைலர்களாக இருக்காது. இது துல்லிய தாக்குதல்களாக தான் இருக்கும். இதில், விழப்போகும் விக்கெட்டுகள், பயங்கரவாதி ஹபிஸ் சயீத், ராணுவ தளபதி முல்லா முனீர் (எ) அசிம் முனீர் ஆகியோராக தான் இருக்கும் என, பாகிஸ்தானியர்களே நம்புகின்றனர். காரணம், பஹல்காம் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர்கள் இவர்கள் என்பதை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rambo
மே 05, 2025 08:44

இஸ்ரேலிடம் அவ்வாறு எவ்வித திட்டமும் இருந்ததில்லை.. 80களில் இஸ்ரேல் பாகிஸ்தான் ஒரே அணியில் இருந்த நாடுகள்..


RAMESH
மே 04, 2025 21:45

தாக்குதலை விட.........சிந்து நதி நீர் நிறுத்தம்........இறக்குமதி நிறுத்தம்...... வான்வழி மூடியது.....எந்த ஒரு பாகிஸ்தான் நபரையும் நம் நாட்டிற்குள் நம் நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது.....இதுவே நாம் பன்றிஸ்தான் மீது அணுகுண்டு வீசியது போல் தான்..‌....‌இரண்டாம் கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயற்சி செய்ய வேண்டும்...... பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பல்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்


சண்முகம்
மே 04, 2025 21:05

பாக்கிற்கு இழக்க ஒன்றுமில்லை.


nsathasivan
மே 04, 2025 20:55

பாகிஸ்தான் இருக்கிற வரை தீவிரவாதமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அது தீவிரவாதத்தால் தானே அழிந்து விடும். தாலிபான் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கனவே பாகிஸ்தானில் தங்கள் கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டனர்.அவர்களுக்கு நவீன ஆயுதங்களை நாம் வழங்க வேண்டும்.


என்றும் இந்தியன்
மே 04, 2025 19:48

இந்தியாவில் நிச்சயம் பாகிஸ்தான் வெற்றி பெற முடியும் காரணங்கள் 122 கோடி இந்தியாவில் வாழும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 2 இந்தியாவில் வாழும் பப்பு காங்கிரஸ் , திமுக, கம்யூனிஸ்ட் 3 122 கோடி .எல்லாவற்றையும் டோலெராண்ட் செய்யும் இந்துக்கள்


subramanian
மே 04, 2025 20:11

உங்க ஆசை பலிக்காது. இந்தியா அடிக்கிற அடியில் பாகிஸ்தான் கப்பு கபடா எல்லாம் தூள் தூளாக நொறுங்கும்.


naranam
மே 04, 2025 15:54

1981 இல் இஸ்ரேல் இந்திய இணைந்து பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சியை அடியோடு அழித்து விட எடுத்த முடிவிலிருந்து இந்திரா அம்மையார் பின் வாங்காமல் இருந்திருந்தால் இன்று இந்த வலியும் வேதனையும் நமக்கு வந்திருக்காது. தொலை நோக்கு இல்லாத காந்தி நேரு மற்றும் இந்திரா நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். முதலில் இந்த அஹிம்சை சிறந்தது என்ற எண்ணத்தை ஹிந்துக்கள் மனதிலிருந்து அடியோடு அழிக்க வேண்டும்.


அப்பாவி
மே 04, 2025 08:58

பக்கிகள் இழப்பதற்கு ஒன்றுமில்லை....நாமதான் பாதுகாப்பா இருக்கணும். ஆப்கானிஸ்தான் மூர்க்கம் தான் அமெரிக்காவை தாக்கியது. பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியது.


Vasan
மே 04, 2025 08:56

Modi told Russia and Ukraine that "today is not the time for war". Entire world appreciated that statement. Modi may even be nominated for Nobel prize for peace, when Russia-Ukraine war comes to an end. So, definitely India will not initiate war. What India always wants is peace, and safety to people.


ராமகிருஷ்ணன்
மே 04, 2025 08:28

அந்த 3 பேர் மட்டும் செத்தால் போதாது அங்குள்ள எல்லா விதமான தீவிரவாத குழுக்கள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.


முக்கிய வீடியோ