உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

மானாமதுரை: மானாமதுரையில் நேற்று அரசு டவுன் பஸ் ஓடிக்கொண்டிருந்த போது பின்பக்க டயர் தானாக கழன்றதை டிரைவர் உடனடியாக கவனித்ததால் பெரிய அளவில் ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று காலை குவளைவேலி கிராமத்திற்கு பயணிகளுடன் டவுன் பஸ் சென்றது. முத்தனேந்தல் அருகே சோமநாதபுரம் என்ற இடத்திற்கு அருகில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றதை கவனித்த டிரைவர் உடனடியாக சுதாரித்து பஸ்சை நிறுத்தி பார்த்தபோது பின் பக்க டயர் கழன்று இருந்தது.பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் கவனிக்காமல் இருந்திருந்தால் டயர் கழன்று ஓடி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என பயணிகள் அச்சத்துடன் கூறினர்.அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும், காயலான் கடைக்கு அனுப்பக்கூடிய நிலையில் உள்ளன. பஸ்களில் உள்ள பழுதுகளை நீக்குவதற்கு உரிய டெக்னீசியன், உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் பழுதுடனேயே பஸ்களை இயக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கீழ்நிலையில் உள்ள டிரைவர், கண்டக்டர், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே தமிழக அரசும், போக்குவரத்து கழக அமைச்சரும் உடனடியாக ஓட்டை, உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh Sargam
ஜூலை 05, 2025 22:40

அந்த டிரைவரை பாராட்டுகிறேன். இதேபோன்று தறிகெட்டு ஓடும் தமிழக காவல்துறையினரை, முதல்வர் சுதாரித்துக்கொண்டு நல்லவழியில் அழைத்துச் செல்லவேண்டும். இனிமேலும் திருபுவனம் போன்ற அராஜகம் எங்கும் வேண்டாம் முதல்வரே.


Sudha
ஜூலை 04, 2025 21:59

போடுங்கம்மா வோட்டு 200 ரூபாயை பார்த்து


Manaimaran
ஜூலை 04, 2025 19:40

விடியலு எந்த கொம்பனும்..... நீ தான்


V RAMASWAMY
ஜூலை 04, 2025 19:28

தமிழக வாக்காளர்களுக்கு இது ஒரு முன்மாதிரி எச்சரிக்கை பாடம். நீங்கள் 2026ல் சுதாரிக்கவில்லையென்றால் அதோ கதி தான்.


raju
ஜூலை 04, 2025 17:43

4.5 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு அடிப்படை வசதியான தண்ணீர், பஸ் வசதி, ரோடு வசதி , தடையில்லா மின்சாரம் , இலவச கல்வி, இலவச மருத்துவமனை , இதை எதையும் மேம்படுத்தாத திராவிட மாடல் ஆட்சி தேவையா? மக்களே சிந்திப்பீர்கள்


பாரத புதல்வன்
ஜூலை 04, 2025 16:33

மறை கழண்டவன் அரசாண்டால் டயர் கழண்டு தெருவில் ஓடும் நிலையில் அரசாங்கம்.


RAAJ68
ஜூலை 04, 2025 14:49

எப்படித்தான் அதிகாரிகள் இந்த மாதிரி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கிறார்களோ தெரியவில்லை


ArGu
ஜூலை 04, 2025 16:34

உண்டியல்ஸ் சங்கம் எல்லாம் இத பத்தியெல்லாம் பேசாது. மூணு விசயங்களுக்கு ட்டும் தான் போராடும் . காசு குடு, காசு குடு, காசு குடு


N Srinivasan
ஜூலை 04, 2025 14:25

இனிமேல் ஓட்டுனர்கள் ரோட்டில் பார்த்து ஓட்டுவதோடு வண்டியில் 6 சக்கரங்களும் கூடவே ஓடி வருகிறதா என்று எட்டிப்பார்த்து கொண்டு வண்டியை ஓட்டவேண்டும்


சிந்தனை
ஜூலை 04, 2025 13:34

இதே பேருந்து கட்டணத்தை தான் தனியார் பேருந்துகளும் வாங்குகின்றன ஆனால் தனியார் பேருந்துகளின் தரமும் தனியார் பேருந்து ஊழியர்களின் தரமும் நன்றாக இருக்கிறது ஆனால் அரசு பேருந்துகளும் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்களும் குப்பைகளை போல இருக்கிறார்கள்


lana
ஜூலை 04, 2025 12:54

ஏம்பா பாவி விமானம் தற்போது tatA தனியார் நிறுவனம். பேருந்து ஓட்டுவது அரசு. இரண்டு க்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் முட்டு கொடுத்து வாழும் உனக்கும்


முக்கிய வீடியோ