உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா சீட்: தி.மு.க.,விடம் வி.சி., டிமாண்ட்

 இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா சீட்: தி.மு.க.,விடம் வி.சி., டிமாண்ட்

தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலக்கத்தில், 'சீட்' கேட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதில் எண்ணிக்கையை குறைத்தால், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.வி.சி.,யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, அ.தி.மு.க., - த.வெ.க., போன்ற கட்சிகள் முயன்றன. ஆனால், சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்வதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5stskb0g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரம், 'கூட்டணியில் தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,தான் அனைத்து தொகுதிகளிலும் பெரிய கட்சியாக இருக்கிறது. எனவே, தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,க்கு தான் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். குறிப்பாக, இரட்டை இலக்கத்தில் ஒதுக்க வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த முறை போலவே, இம்முறையும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கினால், கூடுதலாக ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, வி.சி., கட்சியினர் கூறியதாவது: சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., விரும்புகிறது. அக்கட்சிகளுக்கும் சீட் ஒதுக்குவதோடு, தி.மு.க.,வும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.நாங்கள் கூடுதல் இடங்கள் ஒதுக்கும்படி கேட்டு வருகிறோம். ஒருவேளை, இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்காவிட்டால், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Leaf
ஜன 29, 2026 19:28

33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்பது நடைமுறை.


Rafi Theatre
ஜன 29, 2026 13:40

கண்டிப்பாக கொடுக்கலாம்... சுயநலமில்லா தலைவன் தோழர் திருமா அவர்கள்...


Kalyana Sundaram
ஜன 29, 2026 07:27

நான்கு தொகுதிகளில் நிற்பவர்களெல்லாம் பெரிய கட்சியா


kulanthai kannan
ஜன 28, 2026 20:54

4 சீட்டும் ஒரு பிளாஸ்டிக் சேரும் கன்ஃபர்ம்


Balasubramanian
ஜன 28, 2026 08:33

தேமுதிக வை அழைத்து வந்தால் அவர்களுக்கு 30 தொகுதி விசிக 20 கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் 30 சொந்த கட்சிக்கு 154 இதுவே வெற்றி கூட்டணி 200 தொகுதிகள் நிச்சயம்


சந்திரன்
ஜன 28, 2026 09:57

கூடுதலா ஒரு ஓட்டை பிளாஸ்டிக் சேர் லருவாங்க திமுக போல விசி தெருமாவ அசிங்கப்படுத்தியவங்க யாருமில்ல


முத்து செல்வம் ஈரோடு
ஜன 28, 2026 08:16

திருமாவளவன் என்னதான் போராடி பார்த்தாலும் திமுகவிலிருந்து ஒன்றோ இரண்டோ ஒற்றை இலக்க அல்லது இரட்டை இலக்கில் தான் தொகுதி கிடைக்கப் போகுது அதுக்கு எதற்கு இந்த பந்தா பேச்சு எல்லாம்


A viswanathan
ஜன 28, 2026 09:17

எல்லோரையும் கழற்றி விடுங்கள் தனியாக நின்று நிருபிக்கட்டும் அவர் அவர் பலத்தை.


சமீபத்திய செய்தி