உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிந்து நதியை திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

ராமகிருஷ்ணன்
மே 15, 2025 05:22

முதலில் பாகிஸ்தானில் உள்ள எல்லா தீவிரவாத பயங்கரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் பேசலாம். இதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்


nagendhiran
மே 14, 2025 22:25

இதற்கு பெயர்தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொல்வது என்பது?


K.Uthirapathi
மே 14, 2025 22:12

வாசகர் "கிஜன்" அவர்களுக்கு, 1972ல் இந்திய மக்கள் தொகை 31 கோடி. நான், 1972ல் 6 வது பாடப்புத்தகத்தில் படித்தது.


kannan sundaresan
மே 14, 2025 21:43

தீவிரவாதத்தை நீங்க நிறுத்தும் வரை, நீரை தர மாட்டோம்.


தாரகவாசன்
மே 14, 2025 21:02

கருணை காட்டியதற்காக என் சகோதிரிகளின் வாழ்க்கை போயிற்று.


KavikumarRam
மே 14, 2025 20:59

சைமன், குருமா, ஆம்னி அம்மா, மாடல் தலைவர் எல்லாத்தையும் பாகிஸ்தான் பார்டருக்கு அனுப்பி வைங்கப்பா. அவனுங்க நைல் நதில இருந்து பாக்கெட்ல தண்ணி எடுத்து பாகிஸ்தானுக்கு மொண்டு ஊத்தட்டும்.


கிஜன்
மே 14, 2025 20:52

இந்த ஒப்பந்தம் 1962ல் போடும்போது இந்தியாவின் மக்கட்தொகை சுமார் 60 கோடிபேர் ...இன்றோ 140 கோடி .... அவ்வளவு பேருக்கும் குடிநீர் தேவை இருக்கிறது ..... எல்லாவற்றயும் உங்களுக்கு கொடுத்து விட்டால் .... நாங்கள் குடிநீருக்கு எங்கே செல்வது ....


Venkatasubramanian krishnamurthy
மே 14, 2025 20:31

துருக்கி மற்றும் அஜர்பைஜானிடம் கேட்கலாம் பாக்கியாரே. இந்தியாவிடம் ஒதுங்கியிருப்போமென்ற 1947 கொள்கையை விடாதிருப்பீர்கள்.


தமிழ்வேள்
மே 14, 2025 20:20

இடிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும்.. ஹிந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து கட்டாய நிக்காஹ் செய்வதற்கு எதிராக சட்டங்கள் வேண்டும்.... ஹிந்து ஜனங்களுக்கு சம உரிமை தரும் வகையில் பாக்.அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்... மதசார்பற்ற நாடு பாகிஸ்தான் என்ற அரசியல் சட்ட திருத்தம் அவசியம்.. பயங்கரவாதிகளை பாரதத்திடம் ஒப்படைக்க வேண்டும்... இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாக்.ஐ வற்புறுத்தி செயலில் கொண்டு வர செய்ய வேண்டும்....இவற்றை பாரதத்தின் மேற்பார்வையில் செவ்வனே முடித்தால் பிறகு சிந்து நதி பற்றி யோசிக்கலாம்.


Keshavan.J
மே 14, 2025 21:17

என்னுடைய நிபந்தனையும் இதுவே . நன்றி தமிழ்வேள் அவர்களே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 15, 2025 06:09

நீங்கள் எத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் காரியம் கைகூடும் வரை பாக்கிஸ்தான் அத்துணை நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளும். காரியம் தனக்கு சாதகமாக முடிந்த உடன் புதிய ஸ்டிக்கர் ஒட்டி புதுப்புது விதத்தில் இந்தியாவிற்கு தொல்லை தரும். இது அந்த நாட்டின் பரம்பரை கலாச்சாரம். மாற்ற முடியாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனால் ஒன்று இந்த நிபந்தனைகள் ஏதும் இல்லாமலே 2029ல் ராகுல் பிரதமர் ஆனால் சிந்து நதி என்ன கங்கை நதி நீர் கூட பாக்கிஸ்தான் செல்ல வாய்ப்புகள் அதிகம்.


Ramesh Sargam
மே 14, 2025 20:15

தீவிரவாதிகள் கூடாரங்களை நீங்கள் ஒழித்தால் தண்ணீர்.


முக்கிய வீடியோ