உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி: தினகரன் காட்டம்

துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி: தினகரன் காட்டம்

சென்னை: “பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்றியது, பா.ஜ., அல்ல; 122 எம்.எல்.ஏ.,க்கள் தான்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.

தஞ்சையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:

'நன்றி மறப்பது நன்றன்று' என்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுவது, 'சாத்தான் வேதம் ஓதுவது போல' இருக்கிறது. துரோகத்தை தவிர, வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க முற்பட்டபோது, பா.ஜ., காப்பாற்றியதாக பழனிசாமி கூறுகிறார்; இது தவறானது . ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை மாற்றிவிட்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர். பதவியேற்பு விழாவை கவர்னர் தள்ளி வைத்தபோது, பன்னீர்செல்வம், 'தர்ம யுத்தம்' நடத்தினார். அதனால், பழனிசாமி முதல்வரானார். வேடிக்கை பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்த போது, என் பெயரை முதலில் அறிவிக்க வேண்டாம், அப்படி அறிவித்தால் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே, அவர்களிடம் கையெழுத்தை வாங்கி கொண்டு அறிவிக்க வேண்டும், என்று சொன்னவர் பழனிசாமி. அப்போது, சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 122 பேர் ஓட்டளித்தனர். அதனால்தான் ஆட்சி தொடர்ந்தது. 18 எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றுதான், கவர்னரிடம் மனு கொடுத்தனர். பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதும், 122 எம்.எல்.ஏ.,க்களையும் பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வைத்தது யார் என்பதும், அனைவருக்கும் தெரியும். ஆட்சியைக் காப்பாற்றிய, 18 எம்.எல்.ஏ.,க்களை கட்சியை விட்டு நீக்கியது பழனிசாமிதான். அப்படிப்பட்டவர் நன்றி மறப்பது பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. 'ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். யாருக்கும் பயப்பட மாட்டேன்' என பேசிய பழனிசாமி, இப்போது டில்லி சென்று ஆதரவு தேட வேண்டிய அவசியம் என்ன? செங்கோட்டையனை, கைக்கூலி என மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார். துரோகம் தோல்வி பயத்தில் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார். வரும் சட்டசபை தேர்தலில், அவர் தோற்கடிக்கப்படுவார். அவருடன் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இதுபற்றி யோசிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் துரோகத்தை ஏற்றுக் கொண்டு பழனிசாமியை ஆதரிக்க முடியாது. அ.தி.மு.க.,வின் 20 சதவீத ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு பெரிதாக தெரியலாம். வரும் தேர்தலில், அது 10 சதவீதமாக குறைந்து விடும். வரும் தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி இருக்கும். கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் இருந்து, பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். அதன்பின் தான் கூட்டணியில் பழனிசாமி இணைந்தார். பா.ஜ.,வில் இருக்கும் நலன் விரும்பிகள், 'நல்லது நடக்கும்' என சொன்னதால், கடந்த நான்கு மாதங்களாக அமைதியாக இருந்தோம். அவர்கள் சொன்னது நடக்காததால், வெளியேறி விட்டோம். அ.ம.மு.க., கூட்டணி நிலைப்பாட்டை, வரும் டிசம்பரில் அறிவிப்போம். நாங்கள் இடம்பெறும் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். செல்லாக்காசுகளால் பின்னடைவு இல்லை! அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையால் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் விதமாக மதுரையில் நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் அளித்த பேட்டி: பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுக்காத எதிரிகள், துரோகிகள், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். வாய்க்கு வந்ததையெல்லாம் கூறும் அவர்களே, இன்றைக்கு தமிழகத்தில் பிரச்னையாக இருக்கின்றனர் என்பது தான் உண்மை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு, அ.தி.மு.க.,வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனர். தேர்தலுக்கு முன்பாக, 'ஒற்றுமை' என்ற பெயரில் புதிய கோஷத்தை எடுத்து வைக்கும் இந்த செல்லாக்காசுகளின் சலசலப்பால், அ.தி.மு.க.,விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கின்றனர். அது, ஒருபோதும் நடக்காது. ஒவ்வொரு தொண்டரும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. பழனிசாமிக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகின்றனர். அவர்கள் முகத்திரையை கிழித்து எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

M Ramachandran
செப் 18, 2025 01:24

அரசியலில் த்ரோகம் ஒரு முக்கிய காரணி. மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.


Raja
செப் 17, 2025 17:53

இவன் யோக்கியவனாக இருந்தால் சசிகலாவை அருகில் வைத்துக் கொண்டு எடப்பாடியாரை துரோகி என்று சொல்ல தைரியம் இருக்கா


Raj
செப் 17, 2025 17:47

துரோகம் செய்தது யார் என்று இவருக்கும், மற்றொருவருக்கும் நன்றாக தெரியும். இவர் கூறுகிறார் துரோகத்தை பற்றி.


என்றும் இந்தியன்
செப் 17, 2025 17:46

துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் தினகரன் : இப்படி படியுங்கள் உண்மை அர்த்தம் விளங்கும்


aaruthirumalai
செப் 17, 2025 16:53

அண்ணன் பெரிய அரிச்சந்திரன்!


Haja Kuthubdeen
செப் 17, 2025 16:07

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து மீண்டும் சசி போயஸ் தோட்டத்தில் நுழைந்ததுமே அம்மா உசாரா இருந்து இருக்கனும்.அம்மாவின் மரணம் இன்றுவரை மர்மமா இருக்கு.தினகரனை விரட்டியடித்தாங்க..அவங்க உயிரோடு இருந்ததவவரை பதுங்கு குழியில் கிடந்தவன் அம்மா படத்தைகொடியில் போட்டு கொண்டு ஏமாற்றி வரான்.அதைவிடவா பெரிய துரோகம் இருக்கு...எடப்பாடி நல்லவரா தவழ்ந்தவரா என்பதெல்லாம் பற்றி தொண்டர்களாகிய எங்களுக்கு எந்த கவலையயும் இல்லை.ஒரு நாசகார கும்பலிட மிருந்தும் மமிச்சர் முதல்வரிடமிருந்தும் கட்சியை காப்பாற்றினாரே...தொண்டர்கள் எப்பவும் அவருக்கே அரணா இருப்போம்.இது உறுதி...


SUBRAMANIAN P
செப் 17, 2025 17:23

யோவ் நீரு தொண்டரா.. வாழ்த்துக்கள்


Haja Kuthubdeen
செப் 17, 2025 20:38

ஏன் ...நல்லவர் பின்னே நிற்க கூடாதா???நான் புரட்சித்தலைவர் ஆளு...


Vijay D Ratnam
செப் 17, 2025 15:33

மன்னார்குடி மாஃபியா என்ற நாசகார சக்தியை அதிமுகவில் இருந்து ஒழித்துக்கட்டியாவர் எடப்பாடி கே பழனிசாமி. யாரு இந்த டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் இனி என் கண்ணிலே படக்கூடாது என்று கட்சியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டவர் . இவரு துரோகத்தை பற்றி பேசுகிறார். அதிமுக சரியான வழியில் போக தொடங்கி இருக்கிறது. வி.கே.சசிகலா, அவரோட அக்காவோட மவன் டிடிவி தினகரன், இவிங்களோட அல்லக்கைகை ஓ.பன்னீர்செல்வம் என்ற மூன்று துரோகிகளையம் அதிமுகவில் ஒழித்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி கெத்துதான். செங்கோட்டையன், அண்ணாமலை போன்ற ஆணிவேருக்கு ஆசிட் ஊற்ரிய மொள்ளமாரிகளை அரசியல் அநாதை ஆக்கிவிட்டார். அதிமுகவின் பொதுச்செயலாளர் கே பழனிசாமி.


Rathna
செப் 17, 2025 14:01

அரசியலில் சாதி ஆதிக்கம், அடியாட்கள் பிரச்சனை, கள்ள பணம், ரவுடி தனம் என்பதல்லாம் மாறும் வரை தமிழகம் உருப்படும் வாய்ப்பில்லை.


S Balakrishnan
செப் 17, 2025 12:32

கூட இருந்து குளிர் காய்ந்து அம்மாவால் புறக்கணிக்கப் பட்ட அரசியல்வாதியின் புலம்பல். சுருட்டிய பணத்தில் கும்மாளம் போடும் கோமாளி. இப்படி எத்தனையோ வசைபாட தகுதியான ஒரு மனித ஜந்து தான் இந்த தினகரன்.


SUBRAMANIAN P
செப் 17, 2025 11:22

துரோகம் துரோகம் னு சொல்ராங்க ஆனா என்ன துரோகம்னு விலா வாரியா சொல்ல மாட்டேங்கறாங்க. எனக்கென்னமோ ஜெயலலிதா செத்துப்போனதிலேயே ஒரு பெரிய சதித்திட்டம் கண்டிப்பாக இருக்கும். உண்மை கண்டு அறியும் சோதனை மெஷின் மூலம் சசிகலா, அவங்க கூட சிறைக்குப்போன அவுங்க உறவுக்கார பெண், ttv தினகரன், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கூட செங்கோட்டையன் இவர்கள் எல்லோரையும் சோதனை செய்தால் கண்டிப்பாக நடந்த சதி, யார் யாருக்கு துரோகம் செய்தது, ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை என்று எல்லா உண்மையும் வெளியுலகுக்கு தெரியவரும். கண்டிப்பாக இது நடக்கவும் செய்யாது. திமுகவும் கூட்டுகளவாணிகள்தான்.


முக்கிய வீடியோ