உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பன்னீர் வரலாம்; தினகரன் கூடாது நாகேந்திரனிடம் சொன்ன இபிஎஸ்.,

பன்னீர் வரலாம்; தினகரன் கூடாது நாகேந்திரனிடம் சொன்ன இபிஎஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ., தேர்தல் பிரசாரம், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, அவரது வீட்டில், தமிழக பா.ஜ., மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k1z5p6m0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு மணி நேர நடந்த சந்திப்பு குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய, அ.தி.மு.க., இசைவு தந்துள்ளது. ஆனால், லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில், 39 தொகுதிகளும், சிறிய கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கு 11 தொகுதிகள் என, 50 தொகுதிகளும் ஒதுக்கும்படி, மீண்டும் தமிழக பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருநெல்வேலியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடத்துவது குறித்தும், இரு கட்சி கூட்டங்களிலும், இரண்டு கட்சியினரும் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அக்., 1ல் மதுரை தெற்கு சட்டசபை தொகுதியில், முதல் கட்ட பிரசாரத்தை நாகேந்திரன் துவக்க உள்ளார். இதில் பங்கேற்க பழனிசாமிக்கு, நாகேந்திரன் அழைப்பு விடுத்தார். தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேசி உள்ளனர். அப்போது, பன்னீர்செல்வத்துக்கு மட்டும் இசைவு தெரிவித்த பழனிசாமி, தினகரனை ஏற்க முடியாது என கூறிவிட்டார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Kovandakurichy Govindaraj
செப் 23, 2025 10:31

அண்ணாமலை இல்லாமல் பாஜகவும் டி டி வீ தினகரன் , சின்னம்மா , ஒபிஎஸ் இல்லாமல் அதிமுகவும் வெற்றி பெறாது . இதை சொன்னால் ஈபிஎஸ்க்கு புரியாது


Naresh Kumar
செப் 22, 2025 20:19

பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட்டால் எங்கள் குடும்ப ஓட்டு நிச்சயமாக அதிமுகவுக்கு இருக்காது. எடப்பாடி யார் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவோம்.


தத்வமசி
செப் 22, 2025 14:54

இத பாருங்க திருவாளர் எடப்பாடி, அதிமுக உங்க வீட்டு சொத்து கிடையாது. நீங்கள் ஒன்றும் அதற்கு முதலாளி கிடையாது. இது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களுக்கான கட்சி. நீங்கள் இப்போது அதன் காபந்து காப்பாளர் மட்டுமே. இதில் யார் வரலாம் யார் வரக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டாம். அரசியலில் நிரந்தர பகைவரும் கிடையாது, நண்பரும் கிடையாது. பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா.. எங்கோ கேட்டது போல இருக்கிறதா ? அதிமுகவின் முதலாளி சொன்னது. தனக்கு போட்டியாக வருபவர்களை வெளியேற்றுவது காபந்து தலைவருக்கு நல்லதல்ல.


Oviya Vijay
செப் 22, 2025 13:05

மக்களின் மனதில் அதிமுக பாஜக இல்லவே இல்லையே ஐயா... எப்படியும் தேர்தல் முடிவுகள் வந்த பின் உங்களைக் கட்சியை விட்டுத் துரத்திவிட்டு, உங்களிடமிருந்து அதிமுகவை மற்ற நிர்வாகிகள் கைப்பற்றி விடுவார்கள்... ஆகையால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் உங்களுடைய ஓய்வுக்காலத்தை எவ்வாறு கழிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து விட்டீர்களா...???


Anvar
செப் 22, 2025 13:36

மக்களின் ணத்தில் வேற ன்ன இருக்கறது சொல்லுங்களேன் ? எனக்கு தெரிஞ்சு மக்கள் ணத்தில் G Square Red Giant மின்சாரக் கட்டணம் property tax நீட் தெரிவு ஒரே கையெழுத்துல ரத்து அண்ணா பல்கலை இப்படி நிறையா இருக்கு


Madras Madra
செப் 22, 2025 12:55

TTV அதிமுக வில் சேர மாட்டார் கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம்


M Ramachandran
செப் 22, 2025 12:04

இந்த துர் எண்ணம் உன்னை நிச்சயம் பாதிக்கும். நீ ஒரு கேட்டு கேட்ட ஜெனம என்று உறுதி படுத்தது. நீ ஒரு கருங்க்காளி.பதவிக்காக மேனஜய் அடியில் ஊர்ந்து சென்று காலை சுரண்டிய சுய நல.


வாய்மையே வெல்லும்
செப் 22, 2025 15:47

அப்போ கலைஞர் எப்படி பதவிக்கு வந்தார் என்பதையும் எழுத அருகதை இருக்கா ? அது எப்படி தனி குடும்ப பிடியில் காலங்காலமாக முதல்வர் பதவி போச்சு என்பது பற்றி எழுத முடியுமா ? பதில் சொல்லிட்டு ஊர்ந்து போனதை பற்றி கேள்வி கேளு


Arul Narayanan
செப் 22, 2025 11:29

தினகரன் தான் தனி கட்சி வைத்துள்ளாரே? கூட்டணி வைத்தால் போதும்.


Ragupathy
செப் 22, 2025 11:12

பன்னீரைச் சேர்ப்பதால் எடப்பாடிக்கு ஆபத்தில்லை...ஆனால் தினகரன்..சசிகலா இணைந்தால் எடப்பாடியை முடித்து விடுவார்கள்...


Arul Narayanan
செப் 22, 2025 11:11

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் பாஜக போட்டியிடலாம். 25 தொகுதி எப்படி போதும்? அதிமுகவிற்கு தன்னம்பிக்கை இருந்தால் 150 தொகுதிகளில் போட்டியிட்டு தனி பெரும்பான்மை பெறலாம்.


V K
செப் 22, 2025 10:42

ரெண்டு உருப்படாத கட்சி தமிழத்தில் இவன்கள் எதோ ஆட்சி அமைகிற மாதிரி


புதிய வீடியோ