உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சதுரங்க வேட்டை போல ஆசையை துாண்டும் ஸ்டாலின்: மக்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை

சதுரங்க வேட்டை போல ஆசையை துாண்டும் ஸ்டாலின்: மக்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர் : ''மக்கள் செல்வாக்கு பெற்ற அ.தி.மு.க.,வை விழுங்குவதற்கு, எவனும் பிறந்து வரவில்லை,''என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். திருவாரூரில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில், லஞ்சம் இல்லாத துறையே இல்லை. மருத்துவமனையில், மருந்து, டாக்டர், நர்ஸ் இல்லாத அவல ஆட்சி நமக்கு தேவையா. தி.மு.க., ஆட்சியில் சளி சிகிச்சைக்கு போனால், நாய்க்கடி ஊசி போட்டு அனுப்புகின்றனர்; கை, கால்களோடு திரும்புவதே பெரும் பாடாக இருக்கிறது. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்ததில் என்ன தவறு? கடந்த 1999 லோக்சபா தேர்தல், 2001 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. அப்போது, பா.ஜ., நல்ல கட்சி; இப்போது, மதவாத கட்சியா? பா.ஜ., - அ.தி.மு.க.,வை விழுங்கிவிடும் என விமர்சிக்கின்றனர். ஆனால், மக்கள் செல்வாக்கு பெற்ற அ.தி.மு.க.,வை, விழுங்குவதற்கு எவனும் பிறந்து வரவில்லை.நான்கு ஆண்டுகளாக, மக்களை மறந்துவிட்டு, இப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' என்கின்றனர். இதுவரை, யாரோடு ஸ்டாலின் இருந்தார் என தெரியவில்லை. தி.மு.க.,வுக்கு விளம்பரம் செய்ய, அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர். அரசு பணம் செலவு செய்யப்படுகிறது. அரசின் 46 சேவைகளை, 45 நாளில் முடித்து தருவார்களாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்கிற மக்கள் முட்டாள்களா? ஏற்கனவே, ஸ்டாலினிடம் கொடுத்த மனுக்கள் என்ன ஆயின? மக்களை ஸ்டாலின் தொடர்ந்து ஏமாற்றுகிறார். சதுரங்க வேட்டை படத்தில், 'ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவர்களது ஆசையை துாண்ட வேண்டும்' என்பதுபோல், மக்களிடம் ஆசையை துாண்டி, ஓட்டுகளை வாங்க ஸ்டாலின் தந்திரமாக செயல்படுகிறார். மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். தன்னை சூப்பர் முதல்வர் என சொல்லும் ஸ்டாலின், தமிழக மக்களை கடனாளி ஆக்கிவிட்டார். இதுவரை, 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தமிழக காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையினரை யாராலும் காப்பாற்ற முடியாது. கடமை தவறினால், பலனை அனுபவிக்க வேண்டியது நீங்கள் தான். ஸ்டாலின் வந்தால், 2,000 போலீசார் பாதுகாப்பு தரப்படுகிறது. நாங்கள் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தோம். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லை. இது தான் தி.மு.க., அரசு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தரும் பாதுகாப்பு லட்சணம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆதிநாராயணன், குவைத்
ஜூலை 20, 2025 13:44

சரியாக சொன்னீர்கள்


Padmasridharan
ஜூலை 20, 2025 07:56

நல்லாதான் பேசியிருக்காரு ஆனா நடுவிலேயே ஆட்சியை இறக்க யாருக்கும் தைர்யம் வரவில்லயே சாமி. தனித்து நின்னு விஜயம் செய்யவும் முடியவில்லையே முன்பு மாதிரி யாராலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை