உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 234 தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்த பழனிசாமி திட்டம்

234 தொகுதிகளிலும் ரோடு ஷோ நடத்த பழனிசாமி திட்டம்

சென்னை : சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ரோடு ஷோ' நடத்த இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.கட்சி கட்டமைப்பை பலப்படுத்த, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்களுடன், இரண்டாவது நாளாக பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். திருவாரூர், நாகை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், வேலுார், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கு உட்பட்ட, 40 மாவட்டச் செயலர்கள், 40 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பழனிசாமி, 'அனைத்து மாவட்டங்களிலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, வரும் ஜூலை 10க்குள் முடிக்க வேண்டும். 'பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு, 10 அல்லது 15 பூத்களை ஒருங்கிணைத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், போலி வாக்காளர்களை தடுத்தல், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுதல் போன்ற தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.

விமர்சிக்க வேண்டாம்

மாவட்டச் செயலர்களில் சிலர், 'வலுவான கூட்டணி வேண்டும். பா.ம.க., உடைந்தால் கூட்டணியை பாதிக்கும்' என்று கவலை தெரிவித்துள்ளனர். அதற்கு பழனிசாமி, 'மற்ற கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து, தமிழகத்தில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் தான் இருக்கிறோம்.'சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை எந்த கட்சியையும் விட்டுவிடக் கூடாது என எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம். 'விரைவில், நிர்வாகிகள் அனைவரும் எதிர்பார்ப்பது போன்று வலுவான கூட்டணி அமையும். 'நம்மோடு கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள், தனியாக போட்டியிட்டாலும், நம்முடைய கருத்தில் ஒத்துபோகக் கூடிய கட்சிகளை சேர்ந்தோரை, எக்காரணம் கொண்டும் விமர்சிக்க வேண்டாம். 'தி.மு.க., கூட்டணியை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் எண்ணத்தில் மட்டும் உறுதியாக இருந்து கட்சியினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தியதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய இடங்கள்

அதோடு, 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்ல பழனிசாமி முடிவு செய்துள்ளார். இந்த பயணங்களின்போது, தமிழகம் முழுதும் முக்கிய இடங்களில், 'ரோடு ஷோ' நடத்த இருக்கிறார். இதுகுறித்து, மாவட்டச் செயலர்களுடன், பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கான பயண திட்டம் ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

முருகன்
ஜூன் 26, 2025 23:22

யாருக்கும் உன்மையாக இருந்தது இல்லை


Kulandai kannan
ஜூன் 26, 2025 23:15

அதற்குமுன் இலக்கணப் பிழையில்லாமல் தமிழ் பேசக் கற்றுக்கொண்டால் நல்லது


guna
ஜூன் 26, 2025 09:26

என் கணிப்புபடி இருநூறு ரூபாய்க்கு மேல் ஒர்த் இல்லை என்று தெரிகிறது....


Oviya Vijay
ஜூன் 26, 2025 08:14

என் கணிப்புப்படி 2026 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் நடக்கப்போகும் மாற்றங்கள்... 1. திமுக இதுவரை தொடர்ச்சியாக இருமுறை வென்றதில்லை என்றிருந்த குறையைப் போக்கும் விதத்தில் இம்முறை மீண்டும் ஆட்சியமைக்கும். 2. பெரும்பாலான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியை பின்னுக்குத்தள்ளி தவெக இரண்டாமிடம் பிடித்து அதிர்ச்சியைக் கொடுக்கும். 3. 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் மாநிலம் முதல் சென்ட்ரல் வரை அனைத்து மீடியாக்களும் பேசப்போகும் மிகப்பெரிய டாபிக் என்ன தெரியுமா? MGR உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றியது தான். ஜெயா டிவி, நியூஸ் J அனைத்திலும் முகாரி ராகம் ஒலித்துக் கொண்டிருக்கும். 4. அதிமுக பாஜக கூட்டணி முறியும். தோல்விக்கான காரணமாக ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக்கொள்வர். 5. அதிமுக சின்னாபின்னமாக உடையும். உட்கட்சியில் யாருமே எடப்பாடி பேச்சைக் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். 6. பாஜக கட்சி மேலிடத்தால் மாநிலத் தலைவர் பதவி நயினாரிடமிருந்து பறிக்கப்பட்டு மீண்டும் அண்ணாமலையிடம் கொடுக்கப்படும். அவர் மீண்டும் ஜீரோவிலிருந்து கட்சியை வலுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.


சிவம்
ஜூன் 26, 2025 08:01

234 தொகுதிகளா. அப்போ பாஜக மற்றும் இதர கட்சிகளுக்கு ஒரு தொகுதியும் கிடையாதா?


மோகனசுந்தரம்
ஜூன் 26, 2025 06:24

சூப்பர் சூப்பர் சூப்பர். இவர் ரோட் சோ செய்து தான் இவருடையது திறமையை வெளிக்காட்ட வேண்டும் போலும். மனதில் பெரிய ஜெயலலிதா என்ற நினைப்பு இதைப் போன்ற எட்டப்பண்கள் உள்ளதால் தான் இந்த கட்சி அநியாயமாக அழிந்து கொண்டிருக்கிறது


Kumar
ஜூன் 26, 2025 03:53

வாழ்த்துக்கள்.அடுத்த முதல்வர் எடப்பாடி தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை