செங்கோட்டையன் அலுவலகத்தில் பழனிசாமி படம் மறைப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோபி: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அலுவலகம் முன்பு உள்ள பேனரில், பழனிசாமி படம் மறைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலராக பொறுப்பில் இருந்தது முதல், தற்போது வரை கோபி அருகே கரட்டூரில், தனியார் காம்ப்ளக்சில் உள்ள அறையை, தன் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். அவரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதையடுத்து, செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருக்கும் பேனரில் உள்ள, பழனிசாமி படத்தின் மீது, ஜெயலலிதா படத்தை ஒட்டி மறைக்கப்பட்டது. இதேபோல், கோபி அருகே, குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில், நேற்று செங்கோட்டையன் பேட்டியளித்தபோது, அருகே உள்ள மேஜையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. செங்கோட்டையனின் பண்ணை வீட்டில் 400க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பைக், கார்களில் குவிந்தனர். பட விளக்கம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு உள்ள பேனரில், பழனிசாமி படத்தின் மீது, ஜெயலலிதா படத்தை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் மறைத்தனர். இடம்: கரட்டூர், கோபி