உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின் கட்சியில் சீரமைப்பு செய்யுங்க: ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்

துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின் கட்சியில் சீரமைப்பு செய்யுங்க: ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்

- நமது நிருபர் -'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின், கட்சியை சீரமையுங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eovhddpm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, ஸ்டாலினுக்கு தொண்டர்கள் அனுப்பியுள்ள கடிதம்: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், நீங்கள் நியமித்த குழுக்கள் ஆய்வு செய்து, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், வேட்பாளர்களுக்கு எதிராக துரோகம் செய்த நிர்வாகிகள் பற்றியும் அறிக்கை அளித்துள்ளன. அதன் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கபளீகரம்

அதனால், அடிமட்ட தொண்டர்கள் வேதனையில் இருக்கிறோம். கட்சிக்கு சீரமைப்பு அவசியம் என்றாலும், அதற்கு முன், துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். அப்படி எடுக்காவிட்டால், சீரமைப்பு என்பது பாலைவனத்தில் பெய்த மழைக்கு சமம். கருணாநிதி காலத்தில், எந்த வியூக வகுப்பாளர்களும் இல்லாமல் வெற்றிகளை குவித்தோம். தற்போது, 'ஐபேக், பென் டீம்' போன்ற வியூக நிறுவனங்களை களத்தில் இறக்கி, கட்சியை 'கார்ப்பரேட்' நிறுவனமாக மாற்றி விட்டீர்கள்.முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், கட்சியை கபளீகரம் செய்து விட்டனர். கட்சிக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்து, பணம் பார்த்ததோடு, பதவிகளை விலை பேசி விற்றனர். தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு சேர்ந்து, தொகுதிகளை கோடிக்கணக்கில் விற்றனர். தலைமை அலுவலகமான அறிவாலயத்தை வசூல் அலுவலகமாக மாற்றி விட்டனர்.உங்களுக்கு தகவல் சொல்பவர்களையும் கூட, கூட்டு சேர்த்துக்கொண்டனர். அவர்களின் தேவைக்கேற்ப கட்சியையும், ஆட்சியையும் நடத்தி, உண்மை நிலவரத்தை உங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அதனால், தோல்வியை சந்தித்தோம். எனினும், தோல்விக்கு காரணமான மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

புல்லுருவிகள்

ஆட்சியிலும் கட்சியிலும் இடைத்தரகர்களாக செயல்பட்டு, கோடிகளை சுருட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது, உங்கள் பெருந்தன்மையா அல்லது நடவடிக்கை எடுத்தால், வேறு எதையாவது கிளப்பி விடுவர் என்ற அச்சமா? 'சர்வே டீம்'களையும், நாணயமற்றவர்களையும், துரோகிகளையும் நம்பாமல் கட்சி நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருங்கள்.கருணாநிதியை போல, விசுவாசிகளை நியமித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், என்ன நடக்கிறது என்பதை தெளிவாக கண்காணியுங்கள். குறுநில மன்னர்களையும், புல்லுருவிகளையும் களையெடுக்காமல், எப்போதும் போல் நீங்கள் அமைதி காத்தால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2026 10:54

கட்சியை சீரமைக்கணும்ன்னா கமாண்டரே ஒதுங்கி நின்னு வழிவிடணும் ..... தயாரா >> அதை எழுத எந்த குண்டருக்காவது நோ நோ தொண்டருக்காவது துணிவு இருந்ததா >>


Rajah
அக் 23, 2026 11:09

அதுதான் உண்மை. குறைந்த பட்ஷம் உதயனை நீக்கினால் ஓரளவு பலன் கிடைக்கும்.


GUNA SEKARAN
அக் 23, 2026 08:21

சிஜேபியை அண்ணாமலை ஆதரிக்கவில்லை. உண்மையை சொல்கிறார். பாரத அரசாங்கம் அறிவற்ற அராஜகமான சிஜேபி கும்பலை பெரிய ஆட்களாக மாற்றிவிடக் கூடாது என்பதுதான் அண்ணாமலையின் நிலை. நானும், என்னைப் போன்ற பலரும் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளனர். ரங்கராக் பாண்டே உட்பட பலரும் இதை மறைக்கின்றனர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2026 10:55

பாண்டேவுக்கு திமுகவிடமும் பயம் .... அதே சமயம் பாஜக மீதும் பற்று உண்டு .... இரண்டையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் கிடந்தது தவிக்கிறார் ....


ராமகிருஷ்ணன் பரமக்குடி
அக் 23, 2026 07:26

யோக்கியன்கள் யாரும் திமுகவில் இல்லையே. யார் பெரிய திருடன்கள் , யார் சின்ன திருடன்கள் என்று வேண்டுமானாலும் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க யாருக்கும் தகுதி இல்லையே, ஏன்னெனில் அவனும் திருடனாக இருக்கிறார்கள்.


பிரேம்ஜி
அக் 23, 2026 07:22

தோல்விக்கு முழு முதல் காரணம் யார் என்று இன்னும் தலைமைக்கு தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லை. தெரிந்து கொண்டாலும் ஒரு மனிதன் எப்படி தன்னைத் தானே கட்சியில் இருந்து நீக்கி கொள்ள முடியும்? சரியான இடியாப்ப சிக்கல்! இப்படி இருப்பது கட்சிக்கு கேடு! நாட்டுக்கு நல்லது! வாழ்க திராவிடம்!


Sun
அக் 23, 2026 07:07

மேலிடம் முதல் கீழிடம் வரை அ.தி.மு.கவில் இருந்து வந்தவர்களும் குறுநில மன்னர்களைப் போல இருந்தவர்களும் அவர்களது வாரிசுகளுமே கட்சியில் இன்றும் கோலோச்சுகின்றனர்.இதில் அடிமட்ட தொண்டன் கருத்தைக் கேட்க ஸ்டாலினுக்கு எங்கே நேரம்?


A viswanathan
அக் 23, 2026 08:44

முதலில் தலைவர் முதல் தொண்டன் வரை தனி நபரை ஏட்டில் அச்சிட முடியாத வார்த்தைகளால் திட்டுவது.கட்டுக்கு அடங்காத ஊழல் மேலும் 2026 வருடம் இது. 70 வருட காலத்திற்கு முன் உள்ளதை பேசினால் இன்று உள்ள இளைஞர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். மிகவும் கடினம் ஆட்சியில் அமர்வதற்கு.