உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டிரம்ப் அரசில் விவேக் ராமசாமி மகிழ்ச்சியில் கேரள மக்கள்

டிரம்ப் அரசில் விவேக் ராமசாமி மகிழ்ச்சியில் கேரள மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைச்சரவையில், பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி இடம்பெற்றுள்ளார். இவர், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர். டாக்டர் கணபதி ராமசாமி - அவரது மனைவி கீதா தம்பதியின் மகன். இவர்கள், 1970ல் வடக்கஞ்சேரியில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 1985ல் விவேக் ராமசாமி பிறந்தார்.பள்ளி நாட்களில் தேசிய அளவில் டென்னிஸ் நட்சத்திரமாக இருந்த அவர், 2007ல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2013ல், யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்ற பின், 2014ல், 'ரோவான்ட் சயின்சஸ்' என்ற மருந்து நிறுவனத்தை நிறுவினார்.விவேக் ராமசாமியின் மனைவி உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபூர்வா. இவர்களுக்கு கார்த்திக், அர்ஜுன் என இரு மகன்கள் உள்ளனர்.விவேக் ராமசாமியின் சகோதரர் சங்கர் ராமசாமி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொழில்அதிபராக உள்ளார்.அவரது குடும்ப உறுப்பினர் ராமசாமி கூறியதாவது:அமெரிக்க அதிபராவேன் என்று குழந்தை பருவத்திலேயே அவர் கூறினார். அப்போது விளையாட்டாக சொன்னது தற்போது, நிறைவேறி வருகிறது.தற்போது டிரம்ப் அரசில் அவர் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், கேரளாவுக்கு வந்தால் உறவினர்கள் வீடுகள் மற்றும் கோவில்களுக்கு செல்வது வழக்கம். கடைசியாக, ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தார். இரண்டு வாரம் தங்கிச் சென்றார். ஒரு ஆண்டுக்கு முன் அவரது பெற்றோர் வடக்கஞ்சேரிக்கு வந்திருந்தனர்.இவ்வாறு கூறினார்.இதற்கிடையே, டிரம்ப் அரசில் இடம்பெற்றுள்ள விவேக் ராமசாமியால், அவர் பிறந்த வடக்கஞ்சேரி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் - நமது நிருபர் - -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indian
நவ 16, 2024 14:05

அவன் தான் நாட்டை விட்டு பொய் அமெரிக்கா குடியுரிமை வாங்கியாச்சே . பின்ன இன்னும் ...


Sakthi,sivagangai
நவ 16, 2024 16:01

உனக்குன்னு நாட்டை பிரிச்சு கொடுத்த பின்னாலும் அங்க போகாம இங்க இருந்துட்டு ஏன் புலம்பற பேசாம அங்கே போயிரு இல்லாட்டி வாலை சுருட்டிக்கிட்டு கிடக்கணும்.


karupanasamy
நவ 16, 2024 12:21

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நம் முதுமொழி. இவரின்முகத்தைப்பார்த்தால் அது ஊர்ஜிதப்படுகிறது.


shanker
நவ 16, 2024 12:10

கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியர்கள் என்றால் பிச்சைக்காரர்களை பார்ப்பது போல் பார்த்த காலம் போய், மதிப்போடு பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


shanker
நவ 16, 2024 12:10

கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியர்கள் என்றால் பிச்சைக்காரர்களை பார்ப்பது போல் பார்த்த காலம் போய், மதிப்போடு பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 16, 2024 11:41

கேரள மக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டாம்.. ஏன்னா.. அவர் ஒரு பாலக்காடு மாதவனாக்கும்... அதாவது பாலக்காட்டு தமிழ் பிராமின்.. so.. தமிழகமும் சந்தோஷப்படலாம்


Iniyan
நவ 16, 2024 09:02

எல்லா சேட்டன்களுக்கும் ஒரு கட்டான் சாயா கொடுப்பாரோ என்னவோ


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 06:49

மத நம்பிக்கையை விட்டுக்கொடுக்காதது பாராட்டத் தக்கதே ....


Smba
நவ 16, 2024 04:31

சரி இதனால் கேரளத்துக்கு என்ன பயன்பாடு


Barakat Ali
நவ 16, 2024 09:23

ஒரு மலையாளி மற்றொரு மலையாளியைக் கைதூக்கி விடாமல் புறக்கணிப்பது என்பதே கிடையாது ....


Jagan (Proud Sangi)
நவ 16, 2024 03:14

பாலக்காடு ராமசாமி அய்யர் தமிழ் சுமாரா பேசுவார்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 06:49

பாலகக்காட்டில் இருக்கும் பல பிராம்மணர்கள் தமிழகத்தைப் பூர்விகமாக உடையவர்கள் என்பது உண்மையே ... ஆனால் இவர்கள் பிராம்மணர்கள் இல்லை .... இரண்டாவது பாலக்காட்டில் இருக்கும் அனைவருமே தமிழ் சுமாராகப் பேசுவர் ...


முக்கிய வீடியோ