உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்கள் மனசு; கோவில்களில் சிறப்பு தரிசனமே கூடாது பக்தர்களுக்கு உரிய வசதிகள் வேண்டும்

மக்கள் மனசு; கோவில்களில் சிறப்பு தரிசனமே கூடாது பக்தர்களுக்கு உரிய வசதிகள் வேண்டும்

இறைவன் சன்னதியில் உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான்இந்த ஆன்மிக யதார்த்தத்தை அண்மையில் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய அதிரடி ஆய்வு நிரூபித்துள்ளது. கோவில்களில் சிறப்புத் தரிசனம் என்ற பெயரில் நடக்கும் கட்டண வசூல் முறைகேடுகளையும், சாமானிய மக்களைக் காக்க வைக்கும் அவலங்களையும் அமைச்சர் நேரில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக மக்களின் கருத்துகள் இதோ:கட்டண கொள்ளைசுதா, நாச்சிபாளையம்:பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்புத் தரிசன நடைமுறை இருப்பதால், பணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை கொடுத்து, கட்டணம் செலுத்தாத ஏழைப் பொதுமக்களை மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கிறார்கள். சிறப்புத் தரிசன முறையை முற்றிலுமாக ரத்து செய்து, அனைவரும் ஒரே வரிசையில் வந்தால் முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற பேச்சுகளுக்கே இடமிருக்காது; வரிசையும் வேகமாக நகரும். கட்டணக் கொள்ளையில் காட்டும் கவனத்தை, பெண்களுக்குத் தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தருவதில் அரசு காட்ட வேண்டும்.- சுதா, நாச்சிபாளையம்.ஆதிக்கம் ஒழிய வேண்டும்திருச்செந்துார் கோவிலில் வசூல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. திருப்பூரிலுள்ள பெரிய கோவில்களிலும் இந்த அவலம் நடக்கிறது. தட்டில் அதிகக் காணிக்கை வைப்பவர்களுக்குச் சாமியின் மாலையை எடுத்துப் போட்டுச் சிறப்புத் தீபாராதனை காட்டுகிறார்கள். அதிகாரிகள், அறங்காவலர்களின் உறவினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்தால் முன்பக்கம் கூட்டிச் சென்று தரிசனம் தருகிறார்கள். அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஏழைகளையும் நடுத்தர மக்களையும் சரியாகச் சாமி கூட கும்பிட விடாமல் உடனே அகற்றி விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.- புவனேஸ்வரி, அனுப்பர்பாளையம்இறைவன் முன் அனைவரும் சமம்வாராவாரம் தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களுக்குச் சென்று வருகிறோம். சிவனடியார்களின் உழவாரப்பணியால்தான் இன்று பல கோவில்கள் துாய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன; மற்றபடி போதிய பணியாளர்கள் வசதி அரசிடம் கிடையாது. பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்துக் கிடக்கும் அவலத்தை நீக்கச் சிறப்புத் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்கும் பகுதிகளில் கழிவறை, குடிநீர் மற்றும் பிரசாத வசதிகளை முறையாகச் செய்து தர வேண்டும். வி.ஐ.பி-யாக இருந்தாலும் சாதாரணப் பக்தராக இருந்தாலும் இறைவன் முன் அனைவரும் சமமே!- வளர்மதி, திருப்பூர்காத்திருக்க தேவையில்லைகோவில்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. வி.ஐ.பி தரிசனம் என்றால், அதற்குப் பிரத்யேகமாக இரண்டு மணி நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்; அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மற்ற பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று காத்துக் கிடக்கத் தேவையில்லை. கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சிறப்பு வழியில் அனுப்பலாம். திருப்பதி போன்ற வெளிமாநிலக் கோவில்களில் இருப்பது போல, காத்திருக்கும் அறைகளிலேயே தரமான குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி மற்றும் குழந்தைகளுக்குப் பால் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தால், பக்தர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமைதியாகக் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.- சிவ பாலசுப்பிரமணியம், திருப்பூர்பாகுபாட்டை ஒழிப்பதே அறம்கடவுள் முன்பு அனைவரும் சமம் என்கிற போது, பணக்காரர்களை மட்டும் முதலில் அனுமதிப்பது மிகப்பெரிய பாவம். அனைத்துக் கோவில்களிலும் சிறப்புத் தரிசன முறையை ரத்து செய்துவிட்டு, ஒரே வரிசைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அவிநாசிபாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி மாதத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். ஆனால், அங்கு ஒரு மேற்கூரையோ, கழிப்பிட வசதியோ கூட இல்லை. மழை பெய்தால் பக்தர்கள் திருவிழாக் கடைகளில்தான் ஒதுங்க வேண்டியுள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பை அரசு முதலில் பலப்படுத்த வேண்டும்.-பரமசிவம், சேரன் நகர்.துாய வாரியமாகட்டும்பல நுாறு ஆண்டுகள் பழமையான நம்ம ஊர்க் கோவில்களின் பூஜை மற்றும் தினசரித் தேவைகளுக்காக முன்னோர்கள் தங்களது விலைமதிப்பற்ற சொத்துக்களைத் தானமாக அளித்துள்ளனர். ஆனால், இன்று அந்தச் சொத்துக்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்துவிட்டன. கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளும், கட்டணங்களும் கூட அந்தந்தக் கோவில் பணிகளுக்கோ அல்லது பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கோ முழுமையாகப் பயன்படுவதில்லை.திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போல, பக்தர்கள் தரும் பணம் முதலில் அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கே செலவிடப்பட வேண்டும். அங்கு சென்றால் தங்குமிடம் முதல் தரிசனம் வரை பணமின்றி எளிய மக்களும் நிம்மதியாக இறைவனை வழிபட முடிகிறது. ஆனால், தமிழகக் கோவில்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; பதிலுக்கு ஒரு சிறு அடிப்படை வசதி கூட செய்து தருவதில்லை. எனவே, இந்தச் சிறப்புக் கட்டணத் தரிசன முறையை அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.பிற மத வழிபாட்டுத் தலங்களைப் போல இல்லாமல், தமிழக அரசின் அறநிலையத்துறை என்பது ஹிந்துக்களின் மத சுதந்திரத்தை நசுக்கும் விதமாகவே செயல்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அறநிலையத்துறையைத் தனித்து இயங்கும் ஒரு சுதந்திர வாரியமாக மாற்ற வேண்டும். ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் துறவிகளைக் கொண்ட ஒரு தூய்மையான வாரியத்தை அமைத்து, அதன் மூலமே கோவில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். புதிய அரசு இதில் உரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.- முத்துரத்தினம், பூச்சக்காடு

அவிநாசியின் புனிதம் காக்க முனைப்பு அவசியம்

காமாட்சி தாச சுவாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம்: கொங்கு மண்டலத்தின் தலைசிறந்த ஆன்மிக அடையாளமாக, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமை உடைய தலமாக விளங்குவது திருப்புக்கொளியூர் எனும் அவிநாசிப் பதியாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் அருட்பாடலால், மூன்றாண்டுகள் முன்பு முதலை விழுங்கிய மழலையை, கால மாற்றத்துடன் அதே மூன்றாண்டு வளர்ச்சியோடு மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலம் இது. இந்த உன்னதச் செயல் நிகழ்ந்த இடம் 'தாமரைக்குளம்' என்னும் புனித நீர்நிலையாகும். ஆனால், இன்று அந்தத் தாமரைக்குளம் கழிவுநீரால் மாசுபட்டு, முள் மரங்கள் மண்டிக் கிடப்பதால் பக்தர்கள் அண்டவே முடியாத அளவுக்கு அசுத்தமாகக் காட்சியளிக்கிறது. பல ஆண்டுகளாகப் போராடியும் எந்தப் பலனும் இல்லை. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருவிழா நாட்களில் பக்தர்களுக்குப் போதிய குடிநீர் வசதியோ, நிழற்பந்தல்களோ இல்லை. பாரம்பரியமிக்கத் திருநந்தவனம் இன்று பராமரிப்பின்றி வாகன நிறுத்தமாக மாறிவிட்டது. பிரதோஷ காலங்களில் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெயில், மழையில் தவிக்கிறார்கள். கோவிலை ஒட்டி ஓடும் நல்லாறு நதியில் அசுத்தங்கள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, மன நிம்மதியுடன் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அவிநாசியின் புனிதத்தைக் காக்க நன்முயற்சி எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

karthikeyan
ஜூன் 05, 2026 13:41

நம் பக்கத்து மாநிலங்களை பார்த்தாவது நமக்கு புத்தி வரவேண்டும். கேரளம், கர்நாடகம் இரண்டு மாநிலங்களையும் போய் பாருங்கள் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே. நம்பிக்கை இல்லாதவர் அமைச்சரானாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் நிர்வாகம் என்பதை ஒழுக்கமாக பார்த்திருந்தால் கூட 40000 கோவில்களுக்கு மேல் இருக்கும் நம் தமிழகத்தில் இப்படி ஒரு அவல நிலைக்கு கோவில்கள் தள்ளப்பட்டிருக்காது. ஆயிரம் வருடம் பழமையான கோவில்கள் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடப்பது, விலை மதிப்பற்ற சொத்துகள், நிவந்தங்கள், செப்புத் திருமேனிகள், என ஒவ்வொரு கோவிலுக்கும் தேவையான வருவாய்க்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் கட்டிய காலத்திலேயே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாம் எதையும் புதிதாக சிந்திக்கத் தேவையில்லை, அவர்கள் செய்ததை முறைப்படி பின்பற்றினாலே போது, கோவில்கள் எல்லாம் நலமாக இருக்கும். கோவில் என்பது காசு பார்க்கும் இடமில்லை, அது நம் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, ஒழுக்கம் இதற்கும் மேலாக நம் சமூகத்தின் ஒழுகக்ததிற்கான ஒரு அளவுகோள். கட்டுக்கடங்காத கூட்டம் வந்தாலும் மன்னர்கள் காலத்தில் எந்த கோவிலிரும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இல்லை, கடவுள் சிலைகளை பூட்டி வைக்க இரும்பு பரள்கள் கிரில், ஆனாலும் திருவிழாக்களும், தினமும் நித்திய வழிபாடு, வார வழிபாடு, மாத வழிபாடு, ஆண்டு வழிபாடு, உற்சவங்கள், திருக்கட்டளை உபயம், முதலானவை எந்த இடையூறும் இன்றி நடந்தேறின. ஆனால், இன்று அவ்வாறு இல்லை என்றால் பிரச்சனை நம் மக்களிடம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்கள் ஒரு கோவில் இருந்தால், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று கடந்து போவது மிகப்பெரிய அயோக்கயத் தனம். அந்த கோவில் பராமரிப்பிலும், நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும், உள்ளுரில் உள்ள அனைவருக்கும் சம்பந்தம் உண்டு. ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண்பதற்கும், ஆபத்து என்றால் கூடி நின்று உதவுதற்கும், ஒவ்வொரு மனிதரும் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். கோவில் என்பது தனிப்பட்டு ஒரு விஷயம் அல்ல, அது சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருடனும் சம்பந்தப்பட்டது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கோவில்களின் சீரழிவு என்பது சமூகத்தின் அழிவுக்கு அறிகுறி என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லாவிடில் காலம் கைமீறி போய்விடும்.


Ramesh Sargam
ஜூன் 03, 2026 20:22

தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களிலும் சிறப்பு தரிசனமுறை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். எல்லாவித மக்களும், அதாவது ஏழை, பரம ஏழை, பணக்காரன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோரும் ஒரே பொதுவரிசையில் வந்து சாமி கும்பிடவேனெடும் என்று அரசு ஆணை இடவேண்டும். முதல்வரே வந்தாலும் பொதுவரிசையில்தான் வந்து சாமி கும்பிடவேண்டும்.


Jagan
ஜூன் 01, 2026 20:26

வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக விரைவு தரிசனம் இருக்க வேண்டும்.


chandra mouli
ஜூன் 01, 2026 20:42

உங்களுடைய கருத்து மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.


chinnamanibalan
ஜூன் 01, 2026 20:11

விஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும். மற்ற நேரங்களில் வரிசை முறை விரைவாக செல்லும் வகையில் தரிசன முறை அமைக்கப்பட வேண்டும். சந்நிதியில் விபூதி பிரசாதம் தாமதத்துக்கு இடமின்றி வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் தாமதத்தை உருவாக்கி, வசூல் வேட்டை பலமாக நடைபெறுவது கண்கூடு. இதற்கு அதிகாரிகள் பலர் உடந்தையாக உள்ளதும் உண்மை. சந்நிதிக்கு எதிரில் இடையூறாக உள்ள உண்டியல்களை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும். அர்ச்சகர்கள் தட்டுக்களில் காணிக்கை பெறுவது தடை செய்யப்பட வேண்டும். அர்ச்சகர்களுக்கு அவர்களது வாழ்க்கைக்கு ஏற்ப, நியாயமான நல்ல ஊதியம் வழங்குவதோடு, சந்நிதியில் சுழற்சி முறையில் அர்ச்சகர்கள் பணிபுரிவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் பக்தர்களின் வரிசை சுறுசுறுப்பாக நகரும். அறநிலையத்துறை இதனை கவனத்தில் கொள்ளுமா?


ஆரூர் ரங்
ஜூன் 01, 2026 16:03

5000 கொடுத்து கர்பக்கிரகம் அருகில் அர்த்த மண்டபம் செல்லலாம். ஆனால் ஆண்டவனை கண்களால் காணமுடியாது. இறைவன் நம்மைக் காண்பதுதான் தரிசனம். அது நமது பக்தியைப் பொருத்தது. இதைப் புரிந்து கொண்டால் சரி


K.P SARATHI
ஜூன் 01, 2026 15:49

உண்டியலில் பணம் தங்கம் போடுவது நிறுத்தவேண்டும் அதற்கு பதிலாக ஹிந்து மத பாதுகாப்பு நிதி தொடங்க வேண்டும். தன்னார்வ தொண்டர்களை மதிக்கவேண்டும் விரைவு தரிசனம் வேண்டும். மத தலைவர்கள் ஒன்று கூடவேண்டும்


chennai sivakumar
ஜூன் 01, 2026 18:36

நல்ல யோசனை. அதோடு மட்டும் இல்லாமல் அந்த நிதி இந்து மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்.


kulanthai kannan
ஜூன் 01, 2026 14:15

விசேஷ நாட்களில் குழந்தை குட்டிகளுடன் கோவிலுக்கு செல்லாமல், சாதா நாட்களில் செல்லும் பழக்கம் வரவேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா


Rathna
ஜூன் 01, 2026 12:29

கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் உள்ள நபர்களால் அல்லது வேறு சமூகங்களை சேர்ந்த நபர்களால் கோவில்கள் நிர்வகிக்க படுகிறது. இவர்கள் எப்படி, கோவில்களை ஒழுங்காக நிர்வாகம் செய்வார்கள்.


ponssasi
ஜூன் 01, 2026 10:50

பொதுமக்கள் மட்டுமே இறைவனுக்கு பயப்படுகிறார்கள். கோவில் ஊழியர்களை பார்த்து இறைவன் தான் பயப்படுகிறார். ரயில்வே புக்கிங் போல பணம் கட்டிவிட்டு தரிசனம் செய்யலாம். குறிப்பாக திருவண்ணாமலை மலையை சுற்றி தனியார் ஆக்கிரமித்துள்ளனர் அவர்களை அகரற்றவேண்டும் அங்கெ திருப்பதி போல பக்தர்கள் தங்கவைக்கப்பட்டு ஒரு தானியங்கி நடைமேடை வழியாக கோவில் கருவறை வரை செல்லவேண்டும் . கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தூய்மை படுத்தவேண்டும், இறைச்சி மற்றும் மதுக்கடைகளை மூடவேண்டும்.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 01, 2026 10:50

குருவாயூர் போல் சிறப்பு கட்டண தொகை ஒரு நபருக்கு 1000 அடுத்து கட்டணமில்லா பொது தரிசனம்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 01, 2026 13:37

15 செகண்ட் தரிசிக்க 1000 ரூபாய் கொடுத்தேன். எங்க ஊரு கிருஷ்னன் கோவிலில் காசு கொடுக்காமல் மனசார தரி சித்தேன். மனம் நிம்மதி அடைந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை