உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டட அனுமதிக்கு ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டம்

கட்டட அனுமதிக்கு ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சுயசான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை, பொதுப்பணி துறையின் விலை பட்டியல் அடிப்படையில், ஆண்டுதோறும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி அளவுக்கான குடியிருப்புகள் கட்ட, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான புதிய திட்டம், கடந்த ஜூலையில் துவக்கப்பட்டது. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில், 15,000க்கும் மேற்பட்டோர் உடனடி கட்டட அனுமதி பெற்றுள்ளனர். இத்திட்டத்தை மேலும் எளிமைபடுத்துவதற்கான நடவடிக்கைகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஈடுபட்டுள்ளது. நிர்வாக ரீதியாக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, அதுகுறித்த நடைமுறை விதிகள், கட்டணங்கள் அடங்கிய தீர்மானம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பாக, அக்., 10ல் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் மொத்தம் உள்ள, 12,525 ஊராட்சிகள், நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அமைவிடம் அடிப்படையில், இந்த வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதில், சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணம், ஒரு சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம், பொதுப்பணி துறையின் தர விலை பட்டியல் அடிப்படையில், ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். இந்த விபரங்கள் அடங்கிய தீர்மானத்தை, நவம்பர், 5க்குள் கூட்டம் நடத்தி நிறைவேற்ற வேண்டும். தீர்மான விபரங்களை, ஊரக வளர்ச்சி துறைக்கு நவ., 6ல் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுபணி துறையில் தர விலைப்பட்டியல் ஆண்டுதோறும் உயரும் என்பதால், அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் கட்டட அனுமதி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் என்று தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

david beula
நவ 01, 2024 08:30

சுமார்750 சதுர அடி வீடுகட்டு வதர்க்கு வரைபடத்துடன் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று விசாரிக்கும் பொழுது இந்த தகவல் அனைத்தும் தவறு என்று சொல்லி பழைய கட்டணத்தை வாங்குகிறார்கள் இதற்கு எப்பொழுது விடிவு வரும் இந்த தகவல் அனைத்தும் பேக் ஆனதா தயவாய் கூறுங்கள் அல்லது அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்


suriyanarayanan
அக் 30, 2024 10:29

மகளீர் திட்டமாக இலவச எந்தவொரு கட்டணம் இல்லாமல் சுய சான்று அனுமதி நிலம் மகளீர் பெயரில் இருக்கும் திட்டம் ஒரு முறை மட்டும் இதை அரசு செய்யுமா


suriyanarayanan
அக் 30, 2024 10:27

சுய சான்று முலம் கட்டிடம் அனுமதி 1300 சதுர அடிகள் வரை இலவச அனுமதி கொடுத்தால் நல்லது முதன் முதலாக 1300 சதுர அடிகள் ஒரு முறை மட்டுமே வீடுகட்ட இலவசமாக எந்த விதமான கட்டணம் இல்லாமல் அரசு செயல்படுத்த வேண்டும்.பெண்கள் பெயரில் அந்த இடம் இருக்க வேண்டும் என்ற விதிகளோடு இலவச எந்த கட்டணமும் இல்லாமல் அரசு செய்வது நல்லது மகளீர் வீடு கட்டடம்


Sriraman Ts
அக் 30, 2024 06:35

சுயசான்று முறை வரவேற்கத்தக்கது. இதனால் ஊழல் குறையலாம்


முக்கிய வீடியோ