வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல வேளை ,உயரக்க நடுவானில் பறக்கும் போது கதவை திறந்து அந்த பயணியை இறக்கிவிடாமல் இருந்தார்களே அதுவே மிகப்பெரிய அதிர்ஷ்டம்..
இதென்ன பிரமாதம்? நம்மாளுங்கு இறக்கையில கயிறு கட்டிக் கூட விமானத்தை ஓட்டுவாங்க!
மும்பை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்களை நிறுவியுள்ளது மாநகராட்சி. மாஹிம் பகுதியில் நிறுவப்பட்ட கேமராவில் பதிவான காட்சியை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குப்பை கொட்டிய ஒருவரை கண்டறிந்த ஏ.ஐ., கேமரா, அவரை உடனடியாக எச்சரிக்கிறது. கேமராவுடன் இணைந்துள்ள ஸ்பீக்கரில், எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகிறது. நகரை சுத்தமாக வைத்திருக்க உதவும்படி அறிவுரையும் கூறுகிறது.'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பீதியை கிளப்பியது 'ஸ்பைஸ்ஜெட்'
சற்று நேரத்தில், 'டேக் ஆப்' ஆக வேண்டிய அந்த, 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், ஜன்னலில் டேப் ஒட்டியிருப்பதையும், அது தளர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். விமான ஊழியரிடம் கேள்வியும் எழுப்பினார். அவர்களுக்கு இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. 'அதனால் எந்தப் பாதுகாப்புப் பிரச்னையும் இல்லை' என, கூறிய விமான ஊழியர், 'இந்த விமானத்தில் பயணிப்பது சிரமம் என்றால், நீங்கள் பயணத்தை தவிர்த்து விடலாம்' என, துடுக்காக பேசினார்.அவரது பேச்சு பயணியருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 'எங்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்' என்ற பயணியின் கேள்விக்கு, தானே பொறுப்பேற்பதாகவும் அந்த ஊழியர் பதிலளித்தார். இந்த வாக்குவாதத்தின் வீடியோவை கண்ட வலைதளவாசிகள், ஸ்பைஸ்ஜெட் பற்றிய தங்கள் அனுபவத்தை பதிவிட்டு வருகின்றனர்.கடலில் விளம்பரமா? கொந்தளித்த நெட்டிசன்கள்
மும்பையில், ஜுஹூ, பாந்த்ரா - வொர்லி கடல் பாலம் போன்ற இடங்களில் மிதக்கும் விளம்பர படகுகளையும், விளம்பர பலகைகளையும் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சிறந்த ஊழியருக்கு கார் பரிசு; துபாய் நிறுவனம் தாராளம்
துபாய் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிறப்பாக செயல்பட்ட ஊழியருக்கு சொகுசு கார் பரிசளித்த செய்தி, வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. 'ரிச்கீ பிராப்பர்டீஸ்' நிறுவன ஊழியரான நடாலியா சாவெஸ் என்பவர், 2 ஆண்டுகளில் 4,761 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருந்தார். அவரை பாராட்டும் வகையில் நிறுவன சி.இ.ஓ., டாபன் அத்மன், அவருக்கு 4 சிறப்பு விருதுகள் வழங்கினார். கூடவே, 'லம்போர்கினி' சொகுசு காரையும் பரிசளித்தார். அந்த காரின் வெவ்வேறு மாடல்கள், துபாயில் 2.3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகின்றன.கனவுப்பயணம் கசந்தது; இந்தியப்பெண் குமுறல்
எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர், மறைமுகக் கட்டணம், டாக்ஸி கட்டணக் கொள்ளை, தொடர் டிப்ஸ் கோரிக்கையால் பயணம் கசந்ததாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். 'உலகின் மிக அதிகம் ஏமாற்றப்படும் நாட்டில் தங்கினேன்' என்ற அவரது பதிவு, வலைதளங்களில் வேகமாக பரவியது.
நல்ல வேளை ,உயரக்க நடுவானில் பறக்கும் போது கதவை திறந்து அந்த பயணியை இறக்கிவிடாமல் இருந்தார்களே அதுவே மிகப்பெரிய அதிர்ஷ்டம்..
இதென்ன பிரமாதம்? நம்மாளுங்கு இறக்கையில கயிறு கட்டிக் கூட விமானத்தை ஓட்டுவாங்க!