உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி

உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்துள்ள, 'அட்ராசிட்டி'க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ''நாட்டு மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 'சுதேசி' என்ற உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள தன் சொந்த லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.தேசிய இயக்கம் அங்கு, 2,183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். இதில், சாலை உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.தொடர்ந்து, வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகப் பொருளாதாரம் உறுதியற்ற, நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது.இது போன்ற சமயங்களில், அனைத்து நாடுகளும் சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தும். இந்தியாவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.இதனால், சொந்த பொருளாதார முன்னுரிமைகளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.இதில், அரசை போலவே நாட்டு மக்களுக்கும் பொறுப்புள்ளது. உள்ளூர் பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது ஒரு தேசிய இயக்கமாக மாற வேண்டும். இதை நான் மட்டும் சொல்லக் கூடாது; நாட்டு மக்கள் அனைவரும் சொல்ல வேண்டும்.நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டுமென்றால், கட்சி வேறுபாடுகளை மறந்து, அரசியல் தலைவர்கள் நாட்டின் நலனுக்காக ஒன்று சேர்ந்து, மக்களிடையே சுதேசி என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும், அதில் இந்தியரின் உழைப்பு இருக்கிறதா என, சிந்திக்க வேண்டும். 'உள்ளூர் பொருட்களுக்கான குரல்' என்ற மந்திரத்தை நாம் ஏற்க வேண்டும்.உறுதிமொழி உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், நம் கடைகள் மற்றும் சந்தைகளில், சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம் என்ற உறுதிமொழியை அனைத்து கடைக்காரர்களும், வியாபாரிகளும் எடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதே நாட்டிற்கு செய்யும் உண்மையான சேவை. கூட்டு முயற்சியால் மட்டுமே, 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நாம் நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

hariharan
ஆக 03, 2025 23:36

முதலில் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற அமெரிக்கா சார்ந்த மற்றும் பிற நுண்ணறிவு செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்குவதற்கு மத்திய அரசு காலநிர்ணயம் செய்யவேண்டும். இந்தியாவில் தயார் செய்த பொருள்களையே வாங்கவேண்டும் என்றால் அதற்கு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும். மக்களை சுரண்டும் வரி விதிப்புகளை கைவிட வேண்டும். இந்தியாவிலுள்ள சுற்றுலாத்தலங்களை உலகத்தரத்திற்கு மாற்ற வேண்டும். வெளிநாட்டு சுற்றுலாத்தலங்களுக்கு செல்லாமல் இங்குள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.


nisar ahmad
ஆக 03, 2025 21:03

கண்டிப்பாக நாம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தர வேண்டும்.


venugopal s
ஆக 03, 2025 20:17

நாங்களும் அதையே தான் சொல்கிறோம். தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களையே முன்னுரிமை கொடுத்து வாங்குங்கள்.தமிழகத்தில் தயாரிக்காத பொருட்களை மட்டும் வட இந்தியாவில் இருந்து வாங்குங்கள் என்கிறோம்.


Ganapathy
ஆக 04, 2025 03:47

அப்ப கரன்ஸிய தொடாதே. அதுதான் வட இந்தியாவுல அச்சாகுதே. கேவலமாக கேனத்தனமான தேச விரோத கருத்துகளை திராவிட சொம்புகள் மட்டுமே எப்பவும் யோசிக்குறானுங்க.


பேசும் தமிழன்
ஆக 03, 2025 18:34

மோடி அய்யா..... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள்..... நாட்டின் நலனுக்காக நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும்.... நாட்டு மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்..... வந்தே மாதரம்...... ஜெய்ஹிந்த்.


அப்பாவி
ஆக 03, 2025 17:30

இந்திய தயாரிப்பு வாங்குவதற்கு யோசிப்பேன். உள்ளூர் கத்திரி, வெண்டைக்காய் வாங்கி ஆதரவு குடுப்பேன்.


Ganapathy
ஆக 04, 2025 03:48

அதானே வெளியுர்ல அச்சாகும் ரூபாய் நோட்டு உனக்கெதுக்கு?


Ramesh Sargam
ஆக 03, 2025 12:12

மக்கள் யோசிக்கவேண்டும், விலை அதிகம் இல்லாத உள்ளூர் தயாரிப்பு பொருட்களா அல்லது அதிக வரியுள்ள அமெரிக்க நாட்டு பொருட்களா என்று.


முக்கிய வீடியோ