உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அன்று ரஜினி படத்திற்கு பா.ம.க., எதிர்ப்பு; இன்று அன்புமணி மகள் படத்திற்கு அழைப்பு

அன்று ரஜினி படத்திற்கு பா.ம.க., எதிர்ப்பு; இன்று அன்புமணி மகள் படத்திற்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரஜினியின், பாபா திரைப்படத்தை வெளியிட, அன்று பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது. இன்று பா.ம.க., தலைவர் அன்புமணி மகள் சங்க மித்ரா தயாரித்துள்ள, அலங்கு படத்தை வெளியிட, ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக காங்கிரஸ் துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என, விமர்சனம் செய்துஉள்ளார்.கடந்த 2002ல், ரஜினி நடித்த, பாபா படம் வெளியானது. அப்படத்தில் ரஜினி சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்க வேண்டும் என, பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது. அந்த படம் வெளியான தியேட்டர்களில், பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மோதல் ஏற்பட்டது. படப்பெட்டி கடத்தப்பட்டது.இதற்கு பதிலடி தரும் வகையில், 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 6 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர்களுக்கு எதிராக, ரஜினி உத்தரவின் பேரில் அவருடைய ரசிகர்கள் தேர்தல் வேலை பார்த்தனர். பா.ம.க.,வுக்கு எதிராக ஓட்டு போடுமாறு, ரசிகர்களுக்கு ரஜினியும் உத்தரவிட்டார். அதிலிருந்து பா.ம.க., ரஜினி ரசிகர்கள் என இரு தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது.இந்நிலையில், சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில், நேற்று காலை ரஜினியை, பா.ம.க., தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சங்கமித்ரா தயாரித்துள்ள, அலங்கு படத்தின் முன்னோட்ட காட்சிகள், ரஜினிக்கு காட்டப்பட்டன. படக் குழுவினரை ரஜினி பாராட்டினார். இந்த படம், வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெற்றி பெற தன் வாழ்த்துகளையும் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், அலங்கு படத்தை ரஜினி வெளியிட வேண்டும் என்றும் சங்கமித்ரா அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அன்று, பாபா படத்தை வெளியிடாமல், பா.ம.க.,வினர் பிரச்னை உண்டாக்கியபோது, ரஜினியை நானும், வன்னியர் சங்கத் தலைவர்கள் ஏ.கே.நடராஜன், தீரன் போன்றவர்கள் சந்தித்து ஆதரவு அளித்தோம். 'இன்று, அதே பா.ம.க.,வினர் ரஜினியை சந்தித்து, அவர்களின்குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்' என கூறியுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Lk lk
டிச 12, 2024 06:44

சொல்லுங்க தவறுகளை திருத்த செய்வது நல்ல மனிதனுக்கு அணுகுமுற


Ramesh Sargam
டிச 11, 2024 20:29

வண்ணம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர்கள் இந்த திரை உலகினர், அரசியல்வாதிகள். பச்சோந்தி வண்ணம் மாறுவது தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள. ஆனால், நான் குறிப்பிட்டவர்கள் மனம் மாறுவது பணத்துக்காக.


Udhayakumar
டிச 11, 2024 19:10

அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை நண்பனும் இல்லை


Sekar Shunmugaraj
டிச 11, 2024 14:01

அது அன்றைய அரசியல்... இது தற்போதைய அரசியல்.. அரசியல்வாதிகள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள் & முன்னேறுவார்கள். அப்பாவிகள்தான் போராடுவார்கள் &பாதிக்கப்படுவார்கள் அதன்பின் பரிதாபம் என்கிற அரசியல் வரும்...


Sekar Shunmugaraj
டிச 11, 2024 13:55

எல்லாம் அரசியல்...அது அன்றைய அரசியல்..இது இன்றைய அரசியல்... அரசியல்வாதிகள் பிழைத்துக்கொள்வார்கள் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் அதன்பின் அனுதாபம் கிடைக்கும் அதுவும் அரசியல் நோக்கத்தோடு


Geethanjali Nil
டிச 11, 2024 10:46

என் பெயர் கீதாஞ்சலி. என்ன செய்ய. தமிழ் தான் நாங்கள்


Geethanjali Nil
டிச 11, 2024 10:44

நான் கூட ஒரு வகையில் எழுத்து காரர். தான். 20 வருசமா எழுதறேன். இந்த கீதாஞ்சலி பிரியதர்சினி. ன்னு பேரு..நாங்க தமிழ் தான். சங்கமித்ரா தமிழ் பெயர் இல்ல. சௌம்யா ஃபேமிலி அப்டிதான்


ஆரூர் ரங்
டிச 11, 2024 09:27

சங்கமித்ரா தூய தமிழ்ப் பெயரா?.எப்போதிலிருந்து?


DHANASEKARAN DEVAN
டிச 11, 2024 08:22

இன்னா செய்தாரை இருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்


Mani . V
டிச 11, 2024 05:54

இதுக்காக நீங்கள் எங்களை கேடுகெட்டவர்கள், தரமற்றவர்கள் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. நாங்கள் பல வேடம் போடுபவர்கள். எங்களை நீங்கள் யோக்கியர்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. சை, இப்படியும் பிழைத்து சாப்பிட வேண்டியிருக்கிறது


Geethanjali Nil
டிச 11, 2024 10:45

ஹா ஹா


புதிய வீடியோ