உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுபோதையில் கூட்டு பலாத்காரம்; மறுத்த பெண்களுக்கு அடி, உதை

மதுபோதையில் கூட்டு பலாத்காரம்; மறுத்த பெண்களுக்கு அடி, உதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குற்றவாளிகள் கூட்டாக சேர்ந்து, மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது, பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் வாயிலாக தெரிய வந்துள்ளது.வழக்கில் எட்டு பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால், இக்கும்பல் 30க்கு மேற்பட்ட இளம்பெண்களிடம் நட்பாக பழகுவது போல நடித்து, சகஜமாக பழகிய பின் காமவலை வீசீயுள்ளது. இதற்கு சம்மதிக்காத பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களை சகோதரனாக நம்பி பழகிய பெண்களை ஏமாற்றி, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ez3s6jcg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்று, அறைக்குள் நிர்வாணமாக அடைத்து வைத்து, மதுபோதையில் கூட்டாக, இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். அந்த பெண் வலி தாங்காமல் கதறியும் விடாத காமக்கொடூரர்கள், அவரது வாயில் மதுவை ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர். அந்த பெண் ஒரு வழியாக, பின்கதவு வழியாக தப்பித்து, அந்த கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.மற்றொரு இளம்பெண்ணை கடத்திச் சென்று, ஒரே நேரத்தில் ஒன்பது பேரும் சேர்ந்து, 15 முறைக்கும் மேல் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி, பல மாதங்கள் அந்த பெண்ணை சீரழித்து உள்ளனர். அந்த அப்பாவி பெண், இவர்கள் மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். திருநாவுக்கரசின் பண்ணை வீடு உட்பட நான்கு வீடுகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. சபரிராஜன், திருநாவுக்கரசு மொபைல் போனில், 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காதலிக்கு நேர்ந்த கதி

சபரிராஜன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் பல நாட்கள் அவரது சம்மதத்துடன், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான, 50க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்களை, மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தது, போலீசார் சோதனையில் தெரிய வந்தது.பைனான்ஸ் மற்றும் பழைய கார்களை விற்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசு, பல விபசார அழகிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். விபசார தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்து, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.இதனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து, கல்லுாரி மாணவியர் மற்றும் அப்பாவி இளம்பெண்களையும் விபசார தொழிலில் ஈடுபடுத்த வலைவீசி இருக்கிறார். ஆசைக்கு இணங்க மறுத்தபோது, கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் சாட்சி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M.Mdxb
மே 20, 2025 13:58

இந்த சம்பவங்களை வைத்து பார்த்தால் அனைத்துக்கும் மூல காரணம் மது இதை நம் தமிழகம் அரசு ஒழிப்பதாக இல்லை இன்னும் சொல்ல போனால் அதிக டாஸ்மாக் திறந்து மக்களை குடிக்க சொல்லி அரசே கட்டாயப்படுவதாக தோணுது மது வீட்டுக்கு நாட்டுக்கு மட்டும் கேடு அல்ல பல பெண்களின் கற்பை கெடுத்து விடுகிறது. இதில் குற்றம் யாரை சொல்வது மது விற்கும் அரசா மது குடித்த மனிதனா குற்றம் செய்த்தவரை விட குற்றம் செய்ய தூண்டிய அரசா அந்த நீதி தேவதைக்கு தான் வெளிச்சம் வெளிச்சம்


Krithisha
மே 15, 2025 16:38

****** அறுத்து விட வேண்டும் என்று எனது கருத்து


essemm
மே 14, 2025 20:53

இந்த நாய்களுக்கு இந்த தண்டனை பத்தாது. வாழ்நாள் ஜெயில் தண்டனை என்பது அவர்களுடைய நன்னடத்தை. அரசு விடுமுறை ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால். தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வருவார்கள். வந்தும் இதே வேலையை தான் செய்வார்கள். இவர்களை பொதுமக்கள் முன்னிலையில். கம்பத்தில் சங்கிலி போட்டு கட்டிவைத்து. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தையரே என்ன தண்டனை என்பதை அவர்களே முடிவும் செய்யவேண்டும். அது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக முடியும். இனிமேல் வளரும் சந்ததியினர்க்கு ஒரு பாடமாகவும் அமையும்.


Ragupathi
மே 14, 2025 18:56

ரொம்ப சிம்பிள். இவர்களுக்கு அரசு பணம் செலவழித்து பாதுகாப்பு போலீசார் 3 வேளை சோறு இத்தியாதி இத்தியாதி வீண் செலவு. இனி இவர்களால் குடும்பத்திற்கும் பிரியோஜனம் இல்லை. அதனால் சுட்டு தள்ளி கேஸை குளோஸ் பண்ணுங்க. மக்கள் வரிபணமாவது மிச்சமாகும். கேவலமான ஜென்மங்கள் இருந்தாலென்ன செத்தாலென்ன மத்தவனுக்காவது பயம் வரும்.


Ram pollachi
மே 14, 2025 15:57

சோறு, தண்ணீர் எதுவும் கண்ணில் காட்டாமல் ஒரு இரண்டு மாதம் தூங்க விடாமல் ஜெயிலில் அடைத்து வைத்தால் வழிக்கு வந்துவிடுவார்கள்... பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வீதியில் இறங்கி போராடிய நபர்களில் நானும் ஒருவன் . தீர்ப்பை மதிக்கிறேன் இனியாவது இந்த பெண்கள் திருந்துவார்களா பார்க்க தானே போகிறோம்....


theruvasagan
மே 14, 2025 15:41

இந்த கொடூரன்களுக்கு சாவை உடனே காட்டாமல் சாகும் வரை சிறை என்கிற தண்டனை எல்லாவற்றையும் விட கொடூரம்.


அப்பாவி
மே 14, 2025 12:11

இந்தக் கேவகமான தீர்ப்பைப் பாத்துட்டு ....


அப்பாவி
மே 14, 2025 12:10

கேவலமா இருக்கு இவிங்களுக்கு தண்டனை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2025 11:40

குற்றம் நடந்த இடங்கள் வீடுகளை அரசு எடுத்து கொண்டு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கி அந்த நிலங்களை விற்று அதில் வரும் வருமானத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விற்கும் போது குற்றவாளிகள் உறவினர்கள் நண்பர்கள் பக்கத்து வீட்டு காரர்கள் விற்பனை செய்ய கூடாது. அப்படியே ஏமாற்றி வாங்கினால் அதை மீண்டும் பறிமுதல் செய்து மற்றொருவருக்கு விற்று விட வேண்டும்.


Haja Kuthubdeen
மே 14, 2025 11:09

ஜெயிலில் இவனுங்களை தெளிய வச்சு தெளிய வச்சு உறுச்சு கட்டனும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை