மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்
14 minutes ago
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?
2 hour(s) ago
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுஉள்ளன. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தப்பி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு, 6 - 7ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், ரே நாட்டு சோழர்கள் எனும் பொத்தப்பி சோழர்கள். இவர்கள் பெல்லாரி, கோனிடேனா, நன்னுாரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்துள்ளனர்; தெலுங்கு சோழர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் . அவர்கள், தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு கோவில்களை கட்டியும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களை சீரமைத்தும், அவற்றை பராமரிக்க நில தானங்களை வழங்கியும் உள்ளனர். அதற்கு ஆதாரமாக, தற்போது புஷ்பகிரி நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பென்னா நதிக்கரையில் உள்ள பழமையான கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது நாத நாகேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், தற்போது மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கோவிலில், 16 தமிழ் கல்வெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து, முனிரத்தினம் கூறியதாவது: தற்போது நாங்கள் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவை, 12 - 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டு என்பதை அறிந்துள்ளோம். மற்ற தகவல்கள், அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து படித்த பின்தான் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
14 minutes ago
2 hour(s) ago