உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2029 தேர்தலுக்கு இப்போதே தயாராகும் மோடி!

2029 தேர்தலுக்கு இப்போதே தயாராகும் மோடி!

மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி செயலராக பணியாற்றுகிறார். இப்படி, 85 துறைகளின் செயலர்களையும், சமீபத்தில் தன் வீட்டிற்கு அழைத்தாராம் பிரதமர் மோடி. எதற்காக இந்த அழைப்பு; என்ன விவாதிக்கப் போகிறார் என, எவ்வித அறிவிப்பும் இல்லையாம்.பிரதமர் வீட்டில், இந்த 85 செயலர்கள் கூடியதும், தன் 25 ஆண்டு கால அரசியல் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டாராம் மோடி. பார்லிமென்ட் தேர்தலின்போது, பா.ஜ.,வின் வாக்குறுதிகளில் எத்தனை செயல்படுத்தப்பட்டு உள்ளன.நிலுவையில் உள்ள திட்டங்கள், அவை எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து, ஒவ்வொரு துறையும் பட்டியலை தருமாறு கேட்டுக் கொண்டாராம் பிரதமர்.'செயலர்கள் என்ன வேண்டுமானாலும், தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசலாம்' என மோடி சொல்ல, சில செயலர்கள் மனம் திறந்து பேசினராம். இந்த செயலர்களுடன், உளவுத்துறை தலைவர், 'ரா' அமைப்பின் தலைவர் ஆகியோரும் பங்கேற்றனராம்.'ஸ்டார்ட் அப்'களுக்கு அரசு அதிகமாக உதவ வேண்டும்; இளைஞர்கள் அதிக அளவில் இந்த ஸ்டார்ட் அப்களை துவங்க வேண்டும். இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எனக்கு தர வேண்டும்' என, செயலர்களிடம் வேண்டுகோள் வைத்தாராம் பிரதமர்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம். செயலர்களுடன், குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டாராம்.கடைசியில், அனைவரும் விடைபெறும் போது, -'நீங்கள், உங்கள் பணி ஓய்வுக்கு பின், புத்தகம் எழுதினால் இந்த கூட்டத்தில் நாம் பேசியதையெல்லாம் தயவுசெய்து எழுத வேண்டாம்' - என, கேட்டுக் கொண்டாராம் மோடி.'அடுத்த பார் லிமென்ட் தேர்தலுக்கு மோடி இப்போதே தயாராகிவிட்டாரே...' என, செயலர்கள் பேசிக் கொண்டனராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

திகழும் ஓவியம்
அக் 12, 2025 07:00

சொம்பு ஆர்ட்டிஸ்ட்க்கு வழக்கமாக வரும் வரும்படி மட்டும் போதும். நீட் ஒழிப்பு முதல் கையெழுத்து, இளம் விதவைகள் நல அமைச்சகம், டாஸ்மாக் ஒழிப்பு, செங்கல் எய்ம்ஸ், எல்லாருக்கும் 2 ஏக்கர் நிலம், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு இதெல்லாம் பற்றி கவலை இல்லை adimai கூட்டம்...இதுல 75 வருசமா சனாதன ஒழிப்பு, ஹிந்தி ஒழிப்பு, ஆரியன், வடக்கன் அப்டின்னு 75 வருஷ ஊசிப் போன வடை...கேவலம், kothadimai


naranam
அக் 12, 2025 06:57

திமுக அரசால் தமிழனுக்குக் கிடைப்பதென்னவோ டாஸ்மாக்கும் ஊசிப் போன வடையும் தான்.


naranam
அக் 12, 2025 06:37

எங்கள் மோதிஜியை ஆட்ட முடியாது அசைக்க முடியாது என்பது உண்மையே. அமித் ஷாவுக்கும் யோகிக்கும் இடையே வேட்பாளர் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உபி இல் குறைந்த தொகுதிகளில் வெற்றி.அதே சமயம் காங்கிரசின் பொய் பிரச்சாரம் காரணமாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்கள் குழம்பி போய் விட்டனர் என்பதும் உண்மை. இந்த இரண்டு காரணங்களால் தான் அவர் இப்போது நிதிஷ் குமார் மற்றும் நாயுடு போன்றவர்களை நம்பி ஆட்சி நடத்தும் நிலை. ஆனால் வரும் 2029 தேர்தலில் மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் மோதிஜியே ஆட்சி அமைப்பார் என்பது திண்ணம்.


Oviya Vijay
அக் 12, 2025 01:38

தமிழகத்தைத் தவிர்த்துத் தானே... ஏனெனில் தமிழகத்தில் உங்கள் வடை விற்பனைக்கு அல்ல...


vivek
அக் 12, 2025 05:18

அந்த வடை உனக்கு அல்ல சொம்பு ஓவியரே...இதயம் டமால் ஆகப்போகுது பத்திரம்


vivek
அக் 12, 2025 05:22

ஒரு வடைக்கு வரும் கொத்தடிமை காக்கை கூட்டம்....


புதிய வீடியோ