அமளியுடன் துவங்கியது பிரியங்காவின் பயணம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சமீபத்தில் நடந்த கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா வெற்றி பெற்றார்.இந்நிலையில் நேற்று காலை டில்லி ஜன்பத் இல்லத்தில் இருந்து, தாய் சோனியாவிடம் ஆசி பெற்று, சகோதரர் ராகுலுடன் ஒரே காரில், பார்லிமென்டிற்கு பிரியங்கா வந்து சேர்ந்தார். அவர், கேரள பாரம்பரிய உடையான வெள்ளை கலரில், தங்க நிற பார்டர் போட்ட சேலை உடுத்தி வந்தார். பிரியங்கா முதல்முறையாக எம்.பி.,யாக பதவி ஏற்பதை காண, அவரது தாயும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, மகன், மகள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். காலையில் லோக்சபா கூடியதும் முதல் அலுவலாக, சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தவுடன், கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி, பதவி உறுதி ஏற்பு மொழியை பிரியங்கா ஹிந்தியில் வாசித்தார்.