உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ‛ தாய்மாமன் விஜய்யின் அங்கிள் அரசியல் மதுரையில் மாஸ் காட்டினாரா

‛ தாய்மாமன் விஜய்யின் அங்கிள் அரசியல் மதுரையில் மாஸ் காட்டினாரா

மதுரை: த.வெ.க., கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த கட்சி மாநில மாநாட்டில் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் ரசிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அவரைப் பார்க்க லட்சக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம், மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மாநாட்டுக்கு 2 லட்சம் பேர் வரை வருவர் என எதிர்பார்த்த நிலையில், 3 லட்சம் பேர் வரை வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை விட, அதிகமாகவே கட்சியினர் பங்கேற்றுள்ளனர். நடிகர்களை கொண்டாடும் ஊர் மதுரை என்ற பெயருண்டு. இங்கு நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டது விஜய் என்கிற நடிகருக்காக தான்; த.வெ.க., கட்சித் தலைவரை காண அல்ல என்று பிற கட்சியினர் கூறுகின்றனர். இதனை நிரூபிப்பது போல, விஜய் 'ராம்ப் வாக்' முடிந்து மேடையேறிய அடுத்த சில நொடிகளிலேயே அவரது பேச்சுக்காக காத்திருக்காமல், ஆயிரக்கணக்கானோர் கொத்து கொத்தாக கலைந்து வெளியேறினர். ஓட்டாக மாறுமா நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர், நடிகை வந்தால் அந்த ஏரியாவே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தில் வாடிக்கை. ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி துவங்கிய போது 5 லட்சம் பேர் திரண்டனர். காலப்போக்கில் கட்சியையே கரைத்து அவர் வெளியேறினார். மதுரையில் நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த போதும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும், ஏன் வைகோ ம.தி.மு.க., ஆரம்பித்த போதும் மக்கள் அதிக அளவில் திரண்டனர். எனவே இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது' என்கின்றனர் விஜய் எதிர்ப்பாளர்கள். இது பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல; சாப்பாடு கூட அளிக்கவில்லை. மாறாக விஜய் என்ற தனிமனிதனுக்காக வந்த கூட்டம்; அதுவும் தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளனர். அதில் 90 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைவானர்கள். இவர்கள் தாங்களும் ஓட்டளிப்பார்கள், குடும்பத்து பெரியவர்களையும் ஓட்டளிக்க வைப்பார்கள்,' என்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள். விஜய்யின் மேடை பேச்சு விஜய்யின் மேடை பேச்சு பற்றி அலசினால்... * மாநாட்டில் 'வாரிசு அரசியல்' பற்றி பேசவில்லை. அவரது பெற்றோரே மேடையில் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். * இளைஞர்களுக்காக எந்த கருத்தையும் சொல்லவில்லை. எதிர்கால இந்தியா, வேலைவாய்ப்பு உருவாக்கம் என எந்த நாட்டின் வளர்ச்சி பற்றிய கருத்துக்களையும் பேசவில்லை. * எல்லா அரசியல்வாதிகளும் மோடியை எதிர்க்க எப்போதும் பேசும், 'நீட்தேர்வு, கச்சத்தீவு மீட்பு, கீழடி வரலாறு மறைப்பு' தவிர வேறு புதிதாக பேசவில்லை. மத்திய அரசின் பிற கொள்கைகளை, சட்டத்திருத்த மசோதாக்களை கண்டுகொள்ளவில்லை. * 'என்ன மிஸ்டர் வேதநாயகம்... அல்லு விடுதா' என வேட்டைக்காரன் படத்தில் வில்லனை பார்த்து டயலாக் பேசுவதைப் போல, 'வாட் ப்ரோ... வொய் ப்ரோ' என்ற டயலாக்கை போல 'வாட் அங்கிள்... ராங் அங்கிள்.. வொர்ஸ்ட் அங்கிள்' என்று முதல்வரை சீண்டிப் பேசியது அரசியல் நாகரிகத்தை மீறிய சினிமா பஞ்ச் வசனங்களாகவே பார்க்கப்பட்டது. மாநிலத்தின் முதல்வரை, இன்னொரு கட்சித்தலைவர் அதுவும் 51 வயதானவர் 'அங்கிள்' என்று பொதுமேடையில் கிண்டலாக அழைத்ததை மக்கள் ரசிக்கவில்லை. 'அப்பா என்று கூப்பிடச் சொன்னீர்களே அங்கிள்' என்று பேசியதும் ரசிக்கப்படவில்லை. * தாய் மாமன் -நல்ல ஐடியா n தமிழக சகோதரிகளின் பிள்ளைகளுக்கு நான் தாய்மாமன் என்றார். இதுவரை அரசியலில் எல்லோரும் அம்மா, அய்யா, அப்பா, அண்ணன், அண்ணி என்று சொல்லி வந்த நிலையில் 'தாய்மாமன்' என்ற சொல், இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. * அ.தி.மு.க., கட்சி இன்று எந்த நிலையில் உள்ளது... என வருத்தப்பட்டு எம்.ஜி.ஆரையும் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரரான விஜயகாந்தையும் தனக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டது அவ்விரு கட்சிகளின் ஓட்டுக்களையும் கபளீகரம் செய்யும் நோக்குடன் தான். இளசுகளின் ஓட்டு தனது முகத்திற்காகவும் நடுத்தர வயதினரின் ஓட்டு விஜயகாந்த், முதியவர்களின் ஓட்டு எம்.ஜி.ஆரின் முகங்களுக்காக கிடைக்கும் என்பதற்காகவே விஜய் இப்படி பேசினார். இது அந்த கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. * மறைமுகமாக கமலை சீண்டினார். ரிடையர்டராகி, மார்க்கெட் போன காலத்தில் அரசியலுக்கு வரவில்லை என்றதன் மூலம் கமலைச் சொல்கிறார் . 'அவரே வரல... இவரா வருவாரு' என்றதன் மூலம் நேரடியாக ரஜினியை சீண்டியுள்ளார். * பிற கட்சிகளுக்கு கலக்கம் n பா.ஜ., கொள்கை எதிரி, தி.மு.க.,அரசியல் எதிரி என்று பேசினார். ஆனால் கொள்கை எதிரிக்கும், அரசியல் எதிரிக்கும் என்ன வேறுபாடு என்பதையெல்லாம் விஜய் விளக்கவில்லை. * மாநாட்டு தீர்மானங்களிலும் புதுமை இல்லை. கட்சிகளின் வழக்கமான பரந்துார் விமானநிலையம், கச்சத்தீவு மீட்பு போன்றவையே தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. விஜய்யின் மாநாட்டு பேச்சில் குறை, நிறைகள், சர்ச்சைகள் இருந்தாலும் அது பிற அரசியல் கட்சிகளுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை. கூடிய கூட்டமும் 2026 தேர்தலில் போட்டி பயங்கரமாக இருக்கும் என்று பிற கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது. விஜய்க்கு முந்தைய நிறைய அரசியல் வரலாறுகளை தமிழகம் பார்த்துள்ளது. இனிமேல் இவரது அரசியல் வரலாறையும் பார்க்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Balaji Munuswamy
ஆக 23, 2025 16:10

தாய் மாமன் என்று கூறியுள்ள ஜோஸப் விஜய் அவர்களே அனைத்து பென்களலுக்ம் இலவசமாக சீர்வரிசை செய்விரா உங்கள் படத்திற்க்கு இலவசமாக டிக்கட் குடுப்பிற்களா எம்ஜியார் ஆற்றிய சேவைகள் தெரியுமா வயிறார சாப்பிட வைத்து அழகு பார்த்தவர் நியோ உண்னை காண தமிழ்நாடு முழவதும் இருந்து வந்த மநாடு ரசிகர்களுக்காக ஒரு வேலை சோறு போட வக்கில்லாத நி எம்ஜியார் வஜயகாந்த் மாதரி சொல்லவே வாய் கூச வில்லையா. இந்து மதத்தை அசிங்கமாக பேசி அழிக்க துடித்து கொண்டிருக்கும் கங்கிரஸ் திமுக .பாடம் கற்பிக்க வேண்டுமென்றால் . என் ஒட்டு உன்மையான இந்துவுக்கு என்று கூறுங்கள் நம் இந்து மதத்திற்க்கு கொளரவ்விங்கள்


SANKAR
ஆக 23, 2025 15:39

your comment on vijay not talking about vaarisu arasiyal BECAUSE HIS PARENTS ARE THERE is meaningless.WHEN HIS PARENTS WERE IN A POLITICALLY ELECTED POSTS?


Santhakumar Srinivasalu
ஆக 23, 2025 13:14

அநாகரீகமான மேடைப்பேச்சு!


venugopal s
ஆக 23, 2025 11:47

பணக்காரன் பின்னாலும் பத்து பேர் பைத்தியக்காரன் பின்னாலும் பத்து பேர் என்பார்கள். இவர் பணக்கார பைத்தியம், அதனால் சற்று அதிகம் பேர் வரத்தான் செய்வார்கள்!


vivek
ஆக 23, 2025 23:14

ஆனால் திராவிட சொம்பு நீ மட்டும் தான் வேணுகோபால்


venkat
ஆக 23, 2025 11:13

திமுகவின் பி டீம் மாதரி தோணுது விஜய் கட்சி


ponssasi
ஆக 23, 2025 10:24

சாலையில் யாரேனும் சறுக்கி விழுந்தால்கூட பெரும் கூட்டம் கூடிவிடுகிறது ஆனால் விழுந்தவர்க்கு உதவுவது யாரேனும் இருவர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் கையில் கேமேராவுடன் செலஃபீ எடுத்து ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்


angbu ganesh
ஆக 23, 2025 10:02

இவர் ஆயிரம் ஐஸ் வைக்கட்டும் ஆனா இந்த பாழா போன மக்களை நம்ப முடியாது எவ்ளோ பார்த்தாச்சு விஜய் அங்கிள் ஓகே, உங்க கொள்கைதான் என்ன கடந்த 60, 65 வருசமா காமராஜர் ஆட்சியை தவிர எந்த ஆட்சியையும் சரியாய் செய்யல அவனவன் அவனுங்க குடும்பத்தை மட்டும் நல்ல காப்பாத்திக்கிட்டான் உங்களுக்கு வோட்டு போட்ட நாங்க போங்கடா நீங்களும் உங்க அரசியலும்


D Natarajan
ஆக 23, 2025 08:14

நடிகனை பார்க்க இவ்வளவு கூட்டமா. தமிழ மக்கள் ஏமாளிகள். தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது


pakalavan
ஆக 23, 2025 07:45

விஜய் வருகை, அதிமுக மற்றும் பாஜகா காரனுங்களுக்குத்தான் கலக்கம், இனிமேலு எடப்பாடி பாஜாகா வை கழட்டிவிட்டுருவா,


Mettai* Tamil
ஆக 23, 2025 10:32

விஜய் வருகை, திமுக மற்றும் அதன் கூட்டணி காரனுங்களுக்குத்தான் கலக்கம்,


vivek
ஆக 23, 2025 11:24

பகலவா விஜய் திட்டியது திமுகவை மட்டுமே


ramesh
ஆக 23, 2025 13:39

விவேக் எடப்பாடி உங்கள் பிஜேபி யை கழட்டி விட தயார் ஆகி விட்டார் . வரும் ஜனவரிக்கு பிறகு எடப்பாடி பிஜேபியை கழட்டி விட்டு விஜய் உடன் கூட்டணி வைப்பார் . எடப்பாடியை தாக்கி பேசவில்லை அதை கவனித்தீரா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 23, 2025 21:04

பகல் கனவு பலிக்காதாம் பகலவா....!!!


vivek
ஆக 23, 2025 23:17

பிளேட்டை மாதாதே நான் சொன்னது திமுகவை திட்டினார் என்று.... நீ ஒத்து கொள்கிறியா


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 07:44

அவர் அங்கிள் என்று ஊழல் மன்னரை கூறியதை பார்த்தல் இவரும் அந்த பாதையிலேயே செல்லுவார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது , அதாவது குடும்ப ஜீன்கள் இருக்குமே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை