உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாடல் பதிப்புரிமை வழக்கு ரஹ்மானுக்கு நிம்மதி

பாடல் பதிப்புரிமை வழக்கு ரஹ்மானுக்கு நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற பாடலுக்கான பதிப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தனி நீதிபதியின் உத்தரவை டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற, 'வீரா ராஜ வீர சூரா...' பாடலில் இடம் பெற்ற மெட்டை, தங்கள் அனுமதியின்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியதாக பாடகர் வாசுபுதின் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கு தொடர்பாக 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படியும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, டில்லி உயர் நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்துவது மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். அதே நேரத்தில், பாடல் உரிமை தொடர்பான விவகாரத்திற்குள் நாங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
செப் 25, 2025 14:44

எத்தனையோ முக்கியமான வழக்குகள் இருக்கும் போது ஒரு பாடலின் இசை மேட்டின் உரிமை பற்றிய வழக்கு நாட்டுக்கு ரோமனா தேவையா?


ஆரூர் ரங்
செப் 25, 2025 10:49

எத்தனையோ பாரம்பரிய பக்திப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டில் சினிமா பாடல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. சுப்ரபாதம், சஷ்டி கவச மெட்டுக்களைக் கூட விட்டுவைக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் காப்பிரைட் என்பது நகைப்புக்குரியது.


Thiagaraja boopathi.s
செப் 25, 2025 10:21

முடிந்த வரை நீதிமன்றங்களே வழக்கை தாமதம் செய்கிறது


சுந்தர்
செப் 25, 2025 04:38

தீர்ப்பு ரத்து... உச்சம் எப்போதும் உண்மைக்கு எதிராக இப்போதெல்லாம் தீர்ப்பை மாற்றி எழுதுகிறது. குறிப்பிட்ட பாடல் மெட்டு, பல வருடங்களாக பக்திப் பாடல்கள் தொகுப்பில் உள்ளது.


முக்கிய வீடியோ