உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வணிக ரீதியான படங்களை ரஜினிகாந்த் விரும்புவதேன்?: அந்துமணி பதில்கள்

வணிக ரீதியான படங்களை ரஜினிகாந்த் விரும்புவதேன்?: அந்துமணி பதில்கள்

அ.குணசேகரன், கடலுார்:

தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர்ந்து டில் லியில் போராட்டங்கள் நடத்தியதால், 14,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டில்லி வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளது குறித்து?

போராட்டக்காரர்களுக்கு காலவரையறை யின்றி, 'டேரா' போட்டு போராடக் கூடாது என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதே... வர்த்தகர்களும் இழப்புக் கோரி, கரப்பான் பூச்சிகள் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகள் மீது வழக்கு பதிய வேண்டும்.மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின், குடியரசு கட்சி இடைக்கால தேர்தலில் குறைந்த இடங்களை பெற்று, தன் பிரதிநிதிகள் சபையை இழந்து விட்டதே?

எந்த நாடாக இருந்தாலும், நல்லாட்சி கொடுக்கவில்லை என்றால், மக்களால் புறக்கணிக்கப்படுவர் என்பது நிரூபணமாகி உள்ளது. அவர் கட்சியை சேர்ந்த, ஜேம்ஸ் டலாரிக்கோ என்பவர், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு இந்திய உணவகத்தில், நம்மூர் அரசியல்வாதி போல் மசால் தோசை தயாரித்து பிரசாரம் செய்து, 'ஸ்டன்ட்'டெல்லாம் அடித்துப் பார்த்தார்... பெரிதாக ஓட்டு தேரவில்லை!சி.கார்த்திகேயன், சாத்துார்:

வணிக ரீதியான படங்களை, இப்போது வரை நடிகர் ரஜினிகாந்த் விரும்புவதேன்?

நடிகர் ரஜினிகாந்த் தெளிவானவர்; தன் நடிப்பில் உள்ள நிறை, குறைகளை அறிந்தவர். தன் ஆக் ஷன் மற்றும் ஸ்டைல் தான் தன் பலம் என்று அறிந்து, அதற்கு மேல் பரீட்சார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து பெயரை, 'ரிப்பேர்' செய்து கொள்ளாமல், கல்லா கட்டி வருகிறார்; பாராட்டலாம்!க.வெண்ணிலா, ஈரோடு:

குள்ள நரிகள் பாதுகாப்புக்கு, 1.30 கோடி ரூபாயை வனத்துறை ஒதுக்கீடு செய்துள்ளதே?

வனத்தில் உள்ள குள்ள நரிகளுக்கு தானே வெண்ணிலா... நகரத்தில் உலா வருபவைக்கு இல்லையே!க.வைத்தியநாதன், பாலக்காடு:

தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் ஆப்பிள், தாய்லாந்து இனிப்பு புளி ஆகியவற்றை, 25 மாவட்டங்களில் சாகுபடி செய்ய உள்ளதாக, தோட்டக்கலை துறையினர் தெரிவித்து உள்ளனரே?

சபாஷ்! இப்படி நம் விவசாயம் முன்னேற்றம் அடைந்தால், நம் தேவைகளை நம் மாநிலத்திலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம்; வர்த்தக ரீதியாக நம் மாநில விவசாயிகளும் முன்னேறுவர்!ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு:

இந்தியாவில் வடிவமைக்கப் பட்டு தயாரிக்கப்படும் மொபைல் போன், அக்டோபர் 2028 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பது பற்றி?

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. விலை மலிவாகவும், நல்ல தரத்துடனும் தயாரித்து சந்தைப்படுத்தினால் நாம் ஏன் மற்ற நாட்டு மொபைல் போன்களை வாங்கப் போகிறோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ரவீந்திரன்
நவ 06, 2026 19:53

வெளிநாட்டு பொருள்களை வெறுப்பவன் அல்ல. ஆனால் நம்நாட்டில் தயாரிக்கும் நம் சொந்த மொபைல் வாங்க விருப்பத்துடன் இருக்கிறேன்


Baskaran
நவ 06, 2026 19:01

தமிழ் சினிமாவின் தரம் எங்கே செல்கிறது? ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் வெறும் வணிக நோக்கத்திற்காகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பது வருத்தமளிக்கிறது. ஜெயிலர் 2 போன்ற திரைப்படங்களில் கதையம்சம், சமூகச் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வன்முறை, ரவுடியிசம், போதைப்பொருள், புகைப்பழக்கம் போன்றவற்றைத் தொடர்ந்து ஹீரோயிசமாகக் காட்டுவது சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமல்ல. மற்ற மொழித் திரைப்பட நடிகர்களைப் பயன்படுத்தி பான்-இந்தியா வசூலைப் பெருக்குவதைவிட, வலுவான கதையும் தரமான திரைக்கதையும் முக்கியம். அதேபோல், அனிருத்தின் இசையில் வெறும் சத்தம், கொண்டாட்டம், அர்த்தமற்ற பாடல் வரிகள் மட்டுமே இல்லாமல், இசைத் தரமும் இலக்கியச் சுவையும் இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளம். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது வெறும் மாஸ் காட்சிகளையும் வசூல் சாதனைகளையும் அல்ல சமூகத்திற்குப் பயனுள்ள கருத்துகளையும் காலத்தால் நிலைத்து நிற்கும் படைப்புகளையும்தான். தமிழ் சினிமா என்பது வணிகம் மட்டுமல்ல அது கலை, கலாச்சாரம், மொழி, சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பு. ரசிகர்களின் ரசனையையும் அறிவையும் மதிக்கும் தரமான படைப்புகளே தமிழ் சினிமாவின் எதிர்காலமாக இருக்க வேண்டும்


Ganesun Iyer
நவ 07, 2026 04:46

நீங்க சொல்றதெல்லாம் செய்யறதுக்கு தான் கமலகாசன் உள்ளாரே...


Sun
நவ 06, 2026 13:56

நகரங்களில் நம் கண் முன் வாழும் குள்ள நரிகள் என்ன விலை கொடுத்தாவது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததுதானே அந்த மணி சார்?


Hari
நவ 06, 2026 09:28

James Talerico is from Democratic Party and he is the one who won in Texas.


Barakat Ali
நவ 06, 2026 09:18

அந்துமணிக்கான கேள்விகளை எந்த மெயில் ஐடிக்கு அனுப்பலாம் என்பதை இதே பகுதியில் தெரிவிக்கலாமே ??


VENKATASUBRAMANIAN
நவ 06, 2026 08:04

காசு ஒன்றே குறி பிழைக்க தெரிந்தவர் ரஜினி.


குமரி குருவி
நவ 06, 2026 06:54

குள்ளநரி இனம் என்றும் அழியாது. அது காட்டை விட நாட்டில் அதிகம்..


என் ஏ அரவழகன்
நவ 06, 2026 06:52

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்ற மோகத்தில் டிரம்ப் சுற்றி வந்ததால் மக்கள் சேவைகள் முடக்கம் அதனால் தேர்தலில் தோல்வி


முக்கிய வீடியோ