உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்

மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க.,வில் தன் மகள் ஸ்ரீ காந்திமதியை ராமதாஸ் முன்னிறுத்துவதால், பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அன்புமணி மத்திய அமைச்சரான பின், 'பசுமை தாயகம்' அமைப்பின் தலைவரான சவுமியா, அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டு நேரடி அரசியலுக்கு வந்தார். அதன்பின், அன்புமணிக்கு உதவியாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டார். மேடை ஏறிய காந்திமதி இந்நிலையில், பா.ம.க., வில் அப்பா -- மகன் மோதல் ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. மகனுடன் சமாதானம் ஏற்படாத நிலையில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அரசியலில் முன்னிறுத்தி வருகிறார். கடந்த ஜூலை 8ல், திண்டிவனத்தில் நடந்த பா.ம.க., செயற்குழுவில், ஸ்ரீ காந்திமதி மேடையேறினார். கடந்த 10ம் தேதி பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டிலும் ஸ்ரீ காந்திமதி பேசினார். இப்படி மகளை, ராமதாஸ் அரசியலுக்கு கொண்டு வரும் நிலையில், அவரது மருமகளும், அன்புமணியின் மனைவியுமான சவுமியா, தீவிர அரசியலில் களமிறங்கிஉள்ளார். பூம்புகார் மகளிர் மாநாடு நடந்த அதே 10ம் தேதி முதல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், சவுமியா தொடர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்கள், அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்கள், கட்சியினரின் நுால் வெளியீட்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அன்புமணியை சவுமியா இயக்குவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அரசியலில் சவுமியா தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். காங்., தலைவர் மகள் இது பற்றி அன்புமணி ஆதரவாளர்களிடம் பேசியபோது, 'தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகள் தான் சவுமியா. தற்போதைய காங்., - -எம்.பி., விஷ்ணு பிரசாத், அவரது சகோதரர். எனவே, அரசியல் சூழலிலேயே வளர்ந்தவர் சவுமியா. 'தன் கணவர் அன்புமணிக்காக தான் இதுவரை அவர் அமைதியாக இருந்தார். இப்போது, கணவருக்கு நெருக்கடி வந்துள்ளதால் துணிந்து களமிறங்கியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக சவுமியா போட்டியிடுவார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
ஆக 15, 2025 19:05

வேற்று மொழி பேசுகின்ற திருட்டு கூட்டங்கள் தமிழ்நாட்டை ஆட்டய போடும்போது நம் தமிழ் பெண்கள் வருவதில் தப்பு illayae.


kumaran
ஆக 15, 2025 15:09

பாமக பிளவுக்கு மணியின் பங்கு அதிகம், கைவந்த கலை திமுகவிற்கு வாழ்க ஜனநாயகம்


mathavan
ஆக 15, 2025 12:53

பிஜேபி காரனுங்க இப்படித்தான் கட்சியை, மக்களை, நாட்டை பிரிப்பானுங்க, இல்லாட்டி + குடுத்து அரசை கவிப்பானுங்க, + குடுப்பது பிஜேபிக்காரனுங்களுக்கு கைவந்தகலை


தமிழ்வேள்
ஆக 15, 2025 11:55

அன்பு மணியின் முகஜாடை ஒத்துப் போவதால் இருவருக்குமே பின்னடைவு அதிகம் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது


Natarajan Ramanathan
ஆக 15, 2025 11:04

குடும்ப உறுப்பினர்களை இப்படி வலுக்கட்டாயமாக அரசியலில் இறக்கும் மரம்வெட்டி ராமதாசுக்கு கொஞ்சம்கூட கூச்சமாகவே இருக்காதா?


Santhakumar Srinivasalu
ஆக 15, 2025 08:17

அந்த பெரிசு ராமதாஸ் கட்சியில் குழப்பம் அப்புறம் குடும்ப சண்டையையும் ஆரம்பித்து வைத்து விட்டார்


ராஜா
ஆக 15, 2025 07:13

ஏதோ சினிமா படம் எடுப்பது போல இருக்கு


ராமகிருஷ்ணன்
ஆக 15, 2025 06:29

ஆட்சிக்கே வராத கட்சியிலே இத்தனை அக்கப்போரா. இதிலே ராமதாஸின் பழைய வசனம் நினைவுக்கு வருது நானோ, என் குடும்பத்தினரோ பதவிகளுக்கு வர மாட்டோம், அப்படி வந்தால் முச்சந்தியில் கட்டி வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று வீர வசனம் பேசினார்.


naranam
ஆக 15, 2025 04:46

பதவி மற்றும் அதிகார வெறி கொண்ட குடும்பக் கட்சிகளான திமுக மற்றும் பாமக போன்ற கட்சிகள் புறக்கணிக்கப் பட வேண்டும்.


முக்கிய வீடியோ