உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புற்றீசல் போல பெருகும் ரவுடிகள்; புது பட்டியல் தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

புற்றீசல் போல பெருகும் ரவுடிகள்; புது பட்டியல் தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

சென்னை: புற்றீசல்கள் போல ரவுடிகள் பெருகி வருவதால், புதிதாக ரவுடிகள் பட்டியலை, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான போலீசார் தயாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் ஆட்களை கடத்தி கொலை செய்தல் உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, போலீசார், 'ஏ பிளஸ்' என வகைப்படுத்தி உள்ளனர். மற்ற ரவுடிகளின் குற்ற செயல்களுக்கு ஏற்ப, அவர்களை ஏ, பி, சி, என வகைப்படுத்தி உள்ளனர். அதற்கேற்ப கண்காணிப்பு பணியும் நடக்கிறது. தற்போது, புற்றீசல்கள் போல், இளம் வயது ரவுடி கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த விபரம் இல்லாததால், அவர்களை கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, புதிய ரவுடிகளை அடையாளம் காணவும், அவர்களின் பின்னணியில் இருக்கும், முக்கிய புள்ளிகள் குறித்து துப்பு துலக்கவும், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீசார், வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்கள் வாரியாக, ரவுடிகள் பட்டியலை மறு வரையைறை செய்து, புதிய பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

முந்தைய ரவுடிகளை கண்காணித்த போது, 'ஏ பிளஸ்' மற்றும் ஏ, பி, சி, என நான்கு வகையான ரவுடிகள் பட்டியலில், 27,600 பேர் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் பட்டியலை மறு வரையறை செய்த போது, ரவுடிகள் எண்ணிக்கை, 26,500 ஆக குறைந்து இருந்தது. ஆனால், கடைகளில் புகுந்து சூறையாடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல், அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, ரவுடிகளை மீண்டும் மறு வரையறை செய்து, புதிய பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. அதற்கு மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இக்குழுவில் உள்ள போலீசார், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள்; ஜாமினில் வெளியே வந்தவர்கள்; என்.பி.டபிள்யு., எனப்படும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bala
பிப் 12, 2025 02:41

திராவிட மாடல் என்றாலே அது ரௌடிகளின் கூடாரம் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆகையால்தான் திமுகவை அன்றே MGR தீய சக்தி என்றார்


Raj S
பிப் 12, 2025 01:08

அது ஒன்னும் இல்லீங்க, அந்த பயன்படாத இரும்பு கரம் துரு புடிச்சு போச்சு... மத்தபடி எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆச்சி நடக்குது...


ஆதன்
பிப் 11, 2025 19:08

தற்போது இது நல்ல வேலை வாய்ப்பாக உள்ளது. பெரும்பாலான அரசு வேலைகள் அவுட் சோர்ஸ் செய்யப்படுகின்றன. அவுட் சோர்ஸ் வேலைகளில் சம்பளம் மிகவும் குறைவு. அவுட் சோர்ஸ் ஏஜன்சிகள் கமிஷன் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசு பணியில் சேர லஞ்சம் மட்டுமே தகுதியாக உள்ளது. ஆனால் படித்தவனிடம் பணம் இல்லை. இவர்கள் ரவுடிகளால் எளிதாக மடக்கப்படுகிறார்கள்.


Shekar
பிப் 11, 2025 15:29

கல்லூரிகளில் இதற்காக ஒரு கோர்ஸ் ஆரம்பிலாமா என்று சில கல்வி தந்தைகள் யோசிக்கின்றனராம். இது அவர்கள் இளமையில் அவர்கள் எப்படி முன்னேரினார்கள் என்பதை நினைவூட்டுகிறது என்கிறனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 11, 2025 15:04

பாஜக உட்பட அனைத்துக்கட்சிகளும் இத்தகைய சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்கள் .....


kannan
பிப் 11, 2025 14:56

தமிழகம் அமைதி பூங்கா என்று பொய்யான தகவலை பேசும் திமுக அமைசர்கள் இதை படிக்க வேண்டும்.


தேவராஜன்
பிப் 11, 2025 12:18

பாம்பறியும் பாம்பின் கால். ரெளடிகள் ஆட்சியில் உத்தமர் கூட்டமா பெருகும்?


Rajathi Rajan
பிப் 11, 2025 11:45

இவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பா ஜ கட்சின் மெம்பெர் லிஸ்ட் வாங்கி பார்த்தாலே தெரிந்து விடும் 99.99 சதவீ தம் புற்றீசல் போல பெருகும் ரவுடிகள் பற்றி..


கண்ணன்
பிப் 11, 2025 14:30

ரௌடி லிஸ்டில் வர விருப்பமா?


அப்பாவி
பிப் 11, 2025 07:49

ஒவ்விருத்தனைப் புடிக்கும் போதும் அவன் மேல் ஏற்கனவே 20, 30 கொலை, கற்பழிப்பு ஜேஸ் இருக்குன்னு புள்ளி விவரம் குடுக்கும் சிரிப்பு போலுஸ். சிரிப்பு நீதிமன்றம் அவனுக்கு உடனே ஜாமீனும் குடுத்திரும்.


m.arunachalam
பிப் 11, 2025 07:30

விசாரணை மற்றும் தண்டனை விஷயத்தில் மாற்றம் செய்யாமல் இதை குறைக்க முடியாது. குடும்ப சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். புள்டோசர் உதவும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை