உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எல்லையை காத்த எஸ் 400 - திருப்பி அடித்த ‛ஹார்பி ட்ரோன்கள்

எல்லையை காத்த எஸ் 400 - திருப்பி அடித்த ‛ஹார்பி ட்ரோன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகிஸ்தான் நம் நகரங்களை குறிவைத்து அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான 'எஸ் 400' என்ற -வான்வழி பாதுகாப்பு கவச முறையும் முதல் முறையாக நேற்று பயன்படுத்தப்பட்டது.சுதர்சன சக்கரம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்து புராணங்களில், பகவான் விஷ்ணு மற்றும் கிருஷ்ணர், சுதர்சன சக்கர ஆயுதத்தை வைத்திருப்பர். இது வேகமாகவும், துல்லியமாகவும், எதிரிகளை அழிக்கும் திறன் உடையதாக கருதப்படுகிறது. அதுபோன்ற வசதி கள் உள்ளதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2805kvr3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரே நேரத்தில், 36 வகையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அவற்றை தடுத்து அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ரேடார் இதில் உள்ளது. தற்போது உல களவில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவீன நீண்ட துார வான் பாதுகாப்பு முறையாக இது உள்ளது.இது, 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளது. மிக வேகமாகவும், மிக மெதுவாகவும் சென்று இலக்கை கண்டுபிடித்து துவம்சம் செய்துவிடும்.இந்த பாதுகாப்பு முறை தற்போது முதல் முறையாக நம் படைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஸ்குவாட்ரன்கள் வாங்க திட்டமிட்டு, மூன்று வந்துள்ளன. மற்றவை அடுத்தாண்டு வரும். ஒரு ஸ்குவாட்ரன் என்பது, 16 ட்ரோன்கள் அடங்கியது.

ஊடுருவி தாக்கும் இஸ்ரேல் ட்ரோன்

பாகிஸ்தான் நகரங்களை குறிவைத்து இந்தியா நேற்று ஏவிய ஹார்பி ரக ட்ரோன்கள் மிகவும் துல்லியமாக வேலையை முடிக்கும் ஆற்றல் கொண்டவை. ஆசியாவில் இது போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. எதிரியின் ரேடார்களில் சிக்காமல், ஊடுருவி நுழைவது இதன் சிறப்பம்சம்.இலக்கை தேடிப் பிடித்து, தேவைப்பட்டால் வானில் காத்திருந்து தகுந்த நேரத்தில் தாக்கி தகர்க்கக் கூடியது. பகல், இரவு எந்த நேரமாக இருந்தாலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, ஒன்பது மணி நேரம் வானில் வல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 09, 2025 15:23

போர் விமானங்களை வாங்க அரசிடம் காசில்லை என பார்லிமெண்டில் கைவிரித்து விட்டார் UPA கால ராணுவ அமைச்சர் AK அந்தோணி. ஆனால் இப்போ நம்மைக் காக்கும் S400, ரபால் விமானங்கள் வாங்க இந்த அரசிடம் நிதி இருந்தது, இருக்கிறது. காரணம் இப்போ 2 ஜி, நிலக்கரி போன்ற ஊழல்கள் இல்லை. ராணுவ கொள்முதலில் லஞ்ச பேரமில்லை. மும்பைத் தாக்குதலுக்கு எவ்வித பதிலடியும் கொடுக்காத திமுக காங்கிரஸ் கூட்டணியையும் மோடியின் வெற்றி அணியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


Durai
மே 14, 2025 22:40

Yes


Ramesh Sargam
மே 09, 2025 11:50

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் பொது ராணுவத்திற்கு பலகோடிகள் ஒதுக்கப்படும். அது தேவையா என்று பல எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டனர். இன்று அவர்களுக்கு புரிந்திருக்கும், ராணுவத்திற்கு ஒதுக்கிய பணம் எப்படி நம் நாட்டை காக்கிறது என்று. இனியாவது அந்த எதிர்க்கட்சியினர் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டும்.


முக்கிய வீடியோ