உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமான் இடம் பெற சைதை துரைசாமி முயற்சி

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமான் இடம் பெற சைதை துரைசாமி முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், நாம் தமிழர் கட்சியை இடம் பெற வைக்கும் முயற்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, சைதை துரைசாமி ஆதரவாளர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக உள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் இடம் பெற்று, சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமானிடம் விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=00ppt7rm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒரே காரில்

ஆனால், சீமான் தனித்து போட்டியிடவே விரும்புகிறார். அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., கட்சிகளுடன் கூட்டணி இல்லை என, தொடர்ந்து கூறி வருகிறார். சீமான் நேற்று முன்தினம் இரவு, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீட்டிற்கு சென்றார். அதன்பின், இருவரும் ஒரே காரில் வெளியே புறப்பட்டு சென்றனர்.அவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், நாம் தமிழர் கட்சி இடம்பெற்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என, சீமானிடம், சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

வளமான கூட்டணி

ஏற்கனவே சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில், 'பா.ஜ., கட்சியுடன் அ.தி.மு.க., இணைந்து வளமான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும்' என கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் வகையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டம் இல்லத்தில், சைதை துரைசாமி நேற்று சந்தித்தார்.ராமதாஸ் - அன்புமணி இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கூடவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமானையும் இடம் பெற வைக்கும்போது, கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதாலேயே, அதற்கான முயற்சியிலும் சைதை துரைசாமி தீவிரமாக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

saravanan
ஏப் 18, 2025 14:38

பாஜக -அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் ஒத்த கருத்துடைய இயக்கங்கள் அதிமுக திராவிட கட்சி என்றாலும் கடவுள் மறுப்பு கோட்பாடு என்றேல்லாம் பேசி இந்து மத நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து துவேசித்தது இல்லை. நாட்டு நலன் என வரும் போது இரு கட்சிகளும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கின்றன. ஆனால் அபிப்பிராய பேதங்கள் தவிர்க்க முடியாதது. தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தின் நலன் காக்க பாஜக-அதிமுக கூட்டணி இன்றியமையாததா கிவிட்டது. இந்த கூட்டணியில் பா.ம.க, தேதிமுக மற்றும் இன்னபிற கட்சிகளும் இணையும் போது வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக வசமாகிவிடுகிறது அதேபோல இருக்கின்ற சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது சைமனும் ஜோசப்பும் இணைந்து பயணிக்கின்ற வாய்ப்புகளே மிக அதிகம்


Selvarajan Gopalakrishnan
ஏப் 18, 2025 07:24

யாருடா நீங்க? இவ்வளவு அறிவு வச்சிக்கிட்டு UAE இருக்க பேசாம கட்சியில் சேர்ந்து விட வேண்டியதுதானே


Yes God
ஏப் 17, 2025 21:52

சைமன் என்ற சீமான் எதிரிகளை பந்தாடும் வல்லமை பெற்றவர்


ravi
ஏப் 15, 2025 10:40

நல்லது நடந்தால் மகிழ்ச்சி நல்லதே நடக்கும் என நம்பிக்கை


Karma
ஏப் 14, 2025 19:48

தமிழக முன்னேற்றத்திற்கு உதவும் உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டுகிறேன் மிகவும் நல்ல முடிவு வரவேற்கிறேன்.


venugopal s
ஏப் 14, 2025 12:27

கட்டுச் சோற்று மூட்டையில் எத்தனை பெருச்சாளிகள் வந்தாலும் போட்டு மூடி வைத்துக் கொள்வார்கள்!


Oviya Vijay
ஏப் 14, 2025 11:12

அமித்ஷா ஒரு சேர் தள்ளி அமர்ந்து அண்ணாமலையையும் எடப்பாடியையும் அருகருகே அமர வையுங்கள் பார்க்கலாம்... அப்போதே தெரிந்து விடும் இந்தக் கூட்டணியின் லட்சணத்தை... ஆதலால் தான் சொல்கிறோம் இது பொருந்தாத கூட்டணி என்று...


vivek
ஏப் 14, 2025 11:26

மானமுள்ள திமுக தனியா நீக்கும்னு எங்கே சொல்லேன் ஆர்டிஸ்ட். ..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 14, 2025 13:10

பெட்டி கொடுத்ததால் ஒட்டிக்கொண்ட கம்மிங், சீட்டாஸ், கான் கட்சிகள் போலல்ல ஆர்டிஸ்ட்.....அது மக்கள் விரும்பும் கூட்டணி....எல்லா திருட்டு களவாணிகளும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை கொள்ளையடிப்போரை துரத்தியடிக்கும் கூட்டணி.....ஆர்டிஸ்ட்டோட கதறல் செம் ஜாலியா இருக்கு.....!!!


Saravanan
ஏப் 14, 2025 22:06

உங்க தளபதியை தனியா தேர்தல்ல நிக்க சொல்லுங்க பார்க்கலாம்


பேசும் தமிழன்
ஏப் 14, 2025 09:16

சைதை துரைசாமி அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.... சிறு துரும்பும் பல் குத்த உதவும்..... திமுக ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க வேண்டும்.


S Regunathan Abudhabi UAE
ஏப் 14, 2025 09:14

விஜய் வருகையால் சீமான் 3-4% ஓட்டுகளை இழக்கிறார். இந்த லட்ஷணத்தில் அவரை அதிமுக, பிஜேபி கூட்டணியில் சேர்த்தால், அந்த ஆள் 50-60 சீட்டு கேட்ப்பார். சைதை அவர்கள் மதிப்பை காத்துக்கொள்ளவேண்டும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 14, 2025 13:34

ஓவர் பில்டப் குடுத்து ஓபன் ஆன தவெக.....அவர்கள் செய்யும் சிறுபிள்ளை தனமான செய்கைகளை கண்டு தமிழக மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.... இதில் நாதகவின் வாக்கு வங்கி குறையுமாம்....போய் வேற ஜோலிய பாருலே....!!!


ஆரூர் ரங்
ஏப் 14, 2025 09:13

ஆமையை நடு வீட்டிற்குள் புக விட்டால்..