உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்புரான் படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் ஏற்படுத்துகிறது

எம்புரான் படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் ஏற்படுத்துகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: “எம்புரான் திரைப்படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் அமைப்பு ஏற்படுத்துகிறது,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், 2019ல் வெளியான மலையாள படம் லுாசிபர். இதன் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படம், மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 27ம் தேதி உலகம் முழுதும் வெளியானது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு ஹிந்துத்துவா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எம்புரான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு பால்ராஜ் படேல் என்ற பாபா பஜ்ரங்கி பெயர் வைக்கப்பட்டதும் சர்ச்சையை எழுப்பியது. பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்ற பாபா பஜ்ரங்கி, குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதால், சர்ச்சை அதிகரித்தது. எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்க வலியுறுத்தின. இந்நிலையில், இந்த திரைப்படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் பார்த்தார். இதையடுத்து, எம்புரான் படம் குறித்து சமூக வலைதள த்தில் அவர் கூறியுள்ளதாவது:நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றைப் பற்றி இந்த படம் பேசுகிறது. இது சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளை கோபப்படுத்தியுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் கொடூரங்களை சித்தரித்ததால், வகுப்புவாதிகள் ஒரு கலைப் படைப்பை அழிக்க நினைக்கின்றனர். மலையாள திரையுலகை புதிய உச்சத்துக்கு அழைத்து செல்லும் இந்த படம் குறித்து தேவையற்ற பயத்தையும், வெறுப்பையும் சங்பரிவார் அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.கலைப்படைப்புகளையும், கலைஞர்களையும் அழிக்க விடுக்கப்படும், அழைப்புகள் பாசிச மனநிலையின் புதிய வெளிப்பாடுகள். இது ஜனநாயக உரிமை மீறல். இவ்வாறு அவர் கூறினார்.

மோகன்லால் வருத்தம்

எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு படத்தின் நாயகனான நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு கலைஞனாக, என்னுடைய படங்கள் எதுவும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மத சமூகத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் பார்த்துக் கொள்வது என் கடமை.அதை மனதில் வைத்து, என்னை நேசிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு துயரத்திற்கும், நானும் எம்புரான் குழுவினரும் மனதார வருந்துகிறோம். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, எம்புரான் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய, 17 காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Oneindia
ஏப் 01, 2025 13:46

வரலாற்று திரிப்பான சாவா படத்தில் நடக்காத சம்பவத்தை நடந்ததாக பொய்யில் புனையப்பட்ட ஒரு போலி திரைப்படத்தை பாராளுமன்றம் வரை திரையிடப்பட்டு பொய்யை உண்மையாக சொல்லி முஸ்லிம்களை வெறுப்பு பிரச்சாரம் செய்கிற வேலையைத்தான் ....


Oneindia
ஏப் 01, 2025 13:41

உண்மையை சொன்னாலே பிடிப்பதில்லை.


surya krishna
மார் 31, 2025 23:18

kerala story film vanthappa intha vaai savadal enga pocchu


ஆரூர் ரங்
மார் 31, 2025 21:22

சீனா கம்யூனிஸ்டு அரசு டியனான்மன் சதுக்கத்தில் சொந்த மக்கள் மீதே ராணுவத்தை ஏவி 20000 இளைஞர்களை படுகொலை செய்தது பற்றி பினராய் ஒருக்காலும் வாயே திறக்கவில்லை.


ஆரூர் ரங்
மார் 31, 2025 21:19

கேரளாவில் கம்மி சேட்டன்மார் வாரம் ஒரு அரசியல் படுகொலையில் ஈடுபடுகிறார்கள். கட்சி அலுவலகத்திலேயே எல்லா அக்கிரமங்களையும் செய்கிறார்கள். ஆனால் தலைநகரிலேயே 9000 சீக்கியர்கள் இனப் படுகொலை செய்யபட்டதைப்பற்றி இப்போதெல்லாம் பேசுவதேயில்லை. அதற்காக காங் எம்பி சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி இதுவரை மூச்சு விடவில்லையே.


Mecca Shivan
மார் 31, 2025 10:05

சீன கம்யூனிஸ்ட் தோழர் ஒரு படத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்கிறார் அது நிச்சயம் ஹிந்துக்களுக்கு அல்லது இந்திய ஒற்றுமைக்கு எதிரான படமாகத்தான் இருக்கும் ..


sankar
மார் 31, 2025 09:12

விஜயன் அவர்களே இந்த புத்தி கேரளா பெய்ல்ஸ் படம் வந்த போது ,எங்கே போச்சு? அந்த படத்தை பார்க்காமலே, தடை செய்தவர்தான் நீங்கள்? நீங்கள் ஒரு அரை வேக்காடு ..


ஆரூர் ரங்
மார் 31, 2025 07:42

ஆக உண்டியல் குலுக்கி கட்சி கோத்ரா ரயிலை எரிந்து 59 அப்பாவிகளை படுகொலை செய்த மூர்க்க கும்பலை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது


Subramanian
மார் 31, 2025 08:12

சரியான பதில்


Iyer
மார் 31, 2025 07:17

நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றைப் பற்றி இந்த படம் பேசுகிறது நல்ல தமாஷ் தான் பினராய் அவர்களே இனப்படுகொலைகள் செய்வதில் சீனர்களும், சோவியத் கம்யூனிஸ்ட்களும் தான் முக்கிய குற்றவாளிகள். ஹிந்துக்கள் ஒருபோதும் அப்படி செய்யமாட்டர்கள்


Sathyan
மார் 31, 2025 07:11

ஒரு திருடனுக்கு மற்றொரு திருடன் தான் துணைக்கு நிற்பான் என்பது பினராயி பேச்சால் உண்மை என்று தெரிகிறது.