மேலும் செய்திகள்
தினகரனிடம் கூட்டணி பேச்சு நிர்வாகிக்கு டோஸ் விட்ட விஜய்
1 hour(s) ago
பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஆளுங்கட்சியினர் போர்வையில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதால், தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். உறுப்பினர்களில், 75 சதவீதம் பெற்றோராகவும், அதிலும், 50 சதவீதம் பெண்களாகவும் இருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. குழுவில் உள்ள பெற்றோரால், தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் செயல்படுகிறார். இந்தக் குழுவானது, மாதத்திற்கு ஒரு கூட்டத்தையாவது நடத்தி, மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளியின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் குறைபாடு, இடைநிற்றலை நீக்கல், ஆசிரியர்களின் வருகை மற்றும் நடவடிக்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அத்துமீறல் அதற்கான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், இந்தக் குழுவானது, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த குழுக்களில் பெரும்பாலான இடங்களில், ஆளுங்கட்சியினரே தலைவர், துணை தலைவர் பதவிகளை அபகரித்துஉள்ளனர். இவர்கள், பள்ளிகளுக்கு என சொல்லி நன்கொடை வசூலிப்பது, தங்களின் சொந்த காரியங்களுக்கு பள்ளி வளாகங்களையும் பள்ளியின் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்வது, கட்சி நிர்வாகிகளை விடுமுறைநாட்களில் பள்ளிவளாகத்திற்கு அழைத்து பேசுவது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதை, தட்டிக்கேட்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். சர்ச்சை வீடியோ
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டவும், பள்ளியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்களே, இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் மேலாண்மை குழு தலைவியின் கணவர், ஒரு வகுப்பறையில் இளம்பெண்ணுடன் இருந்ததை, அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த விடுதி மாணவர்கள், வீடியோ எடுத்துள்ளனர். அவர்களை மேலாண்மை குழு தலைவியின் கணவர் மிரட்டும் வீடியோவும், சமூக வலைதளங்களில் பரவிசர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து, மேலாண்மை குழு தலைவியிடம் பெற்றோர் கேட்ட போது, தன்சகோதரி தனது கணவரை பார்க்க வந்ததாகவும், அவர் பள்ளியில் இருப்பதை அறிந்து, அங்கு சென்றதாகவும் கூறி உள்ளார். என்ன நடக்கிறது
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளின்வகுப்பறை சாவிகளை, தலைமை ஆசிரியரோ அல்லது உள்ளூர் ஆசிரியரோ வைத்திருப்பது தான் முறை. ஆனால், பல பள்ளிகளில் அப்படி வைத்திருக்க விடுவதில்லை. தினமும் மாலையில், ஆளுங்கட்சியினரிடம் சாவிகளை கொடுத்து விட்டு, காலையில் போய் வாங்க வேண்டியுள்ளது. சாவி அவர்களிடம் இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரிவதில்லை. இதுகுறித்து, யாரிடமும் வெளிப்படையாக புகார் அளிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.--- நமது நிருபர் -
1 hour(s) ago