உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகளுக்கு துணை போகும் சீமான்; பாரத் ஹிந்து முன்னணி கண்டனம்

பயங்கரவாதிகளுக்கு துணை போகும் சீமான்; பாரத் ஹிந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பிரபு அறிக்கை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் போன்றோர், மதத்தின் அடிப்படையில் மனிதநேயம் இல்லாமல் கொலை செய்பவர்கள். அவர்கள் அப்பாவி முஸ்லிம் கைதிகள் அல்ல. ஹிந்து தர்மத்திற்காக, ஹிந்து மதத்தை காப்பதற்காக சேவை செய்வோரை, கொலை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ள அதிபயங்கரவாதிகள்.இவர்களை, அவர்களின் குடும்பத்தை சேர்ந்தோர், சிறைக்குச் சென்று பார்ப்பதை தவறு என்று சொல்ல முடியாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9wquzrfj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், எல்லோருடைய ஓட்டுகளையும் பெறும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பயங்கரவாதிகளின் குடும்பத்தைs சேர்ந்தவர்களுடன் நேற்று சென்று, சென்னை புழல் சிறையில் மூன்று பயங்கரவாதிகளையும் பார்த்து பேசியுள்ளார். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், மதுரையில் ஆக., 1ல் நாம் தமிழர் கட்சியும், இந்திய தேசிய லீக் கட்சியும் இணைந்து, முஸ்லிம் சிறைவாசிகளை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.சீமான் தமிழக மக்களுக்காக தினமும் போராட்டங்கள் நடத்தி வருகிறார். அதற்காக, முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பது ஏற்புடையதல்ல. ஜனநாயகம் என்ற பெயரில், மதத்தின் அடிப்படையில் கொலை செய்வோருக்காக போராட்டம் நடத்துவது, குரல் கொடுப்பது, ஜனநாயகத்தின் வலிமையை கேள்விக்குறியாக்கும். சீமான் இதை புரிந்து கொண்டு, இந்திய தேசிய லீக் கட்சி முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது. மதுரையில் சிறைவாசிகளுக்கு ஆதரவாக நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காவல் துறை அனுமதி வழங்கக்கூடாது. சீமான், தர்மத்தோடு சிந்தித்து அரசியல் செய்யவில்லை என்றால், அவருடைய முகத்திரையை கிழித்தெறிய பாரத் ஹிந்து முன்னணி பாடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'கைது செய்ய வேண்டும்'

தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கள், சாராயம் போன்றவற்றை வடித்தல், விற்றல், குடித்தல் போன்றவை தமிழக மதுவிலக்கு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும், நாம் தமிழர் கட்சி சீமானும், அவரது ஆதரவாளர்களும், கள் இறக்கி குடித்து, அதை அங்கிருந்தவர்களுக்கும் கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். 'கள் இறக்குவோரை கைது செய்தால், போலீஸ் நிலையங்கள் உடைத்தெறியப்படும்' என, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், மேடையில் அரிவாளை துாக்கி காட்டி எச்சரித்துள்ளனர். இது சட்டவிரோத செயல். தண்டனைக்குரிய குற்ற செயல். கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி, திருச்சியில் நடக்க உள்ள கள் விடுதலை மாநாட்டை தடை செய்ய வேண்டும். சட்டத்தை மீறும் சமூகவிரோத சக்திகளை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ