உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாற்றத்தை நோக்கினோம் ஏமாற்றமே மிச்சமானது: கலகலக்கிறது சீமான் கட்சி

மாற்றத்தை நோக்கினோம் ஏமாற்றமே மிச்சமானது: கலகலக்கிறது சீமான் கட்சி

நாகப்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கை பிடிக்காமல், அக்கட்சியின் நிர்வாகிகள் தமிழகம் முழுதும் அக்கட்சியில் இருந்து விலகி வருவது தொடர்கிறது. கட்சியில் இருந்து விலகியோர், தி.மு.க., - அ.தி.மு.க., என பலவேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டுஉள்ளனர்.

வருவாய் இழந்தோம்

பலர், ஒன்றிணைந்து சீமானுக்கு எதிராக புது இயக்கம் ஒன்றை துவங்கி, திருச்சியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதோடு, மாவீரர் தின நிகழ்ச்சியையும் நடத்தினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகை, கீழ்வேளூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர்.நாகையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அளித்த பேட்டி: தமிழ் தேசியம் மீதான ஈடுபாடு காரணமாகவும், திராவிட அரசியலை எதிர்த்தும், தமிழர் ஒருவர் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற கனவோடு, கடந்த 2019ல் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தோம்.

சீமான் உத்தரவின்படி அரசியல் களத்தில் களமாடியதால், குடும்பத்தை விட்டு பிரிந்தோம்; வருவாய் இழந்தோம். தகுதிக்கு மீறி செலவழித்தோம். மாவட்ட பொருளாளராக பொறுப்பு மட்டுமே நாகராஜனிடம் இருந்தது. கட்சியின் நிதி மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிதிகள் அனைத்தும் சீமானுக்கு நெருங்கிய மண்டல பொறுப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஏமாந்தது போதும்

நிர்வாக பிரச்னைகளை சுட்டிக்காட்டியதற்காக, நாகை சட்டசபை தொகுதி தலைவர் அகமது, பொருளாளர் நாகராஜனை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். மேடையில் மீனவர்கள் பிரச்னைக்காக பேசும் சீமான், மீனவ சமுதாயத்து எதிராக நடக்கிறார்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக பேசும் சீமானை நம்பி ஏமாந்தது போதும் என முடிவெடுத்து, நாகை, கீழ்வேளூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி விட்டோம். அடுத்தடுத்தும் பலர் விலகுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
டிச 13, 2024 20:30

எத்தனை நாள் தான் சீமான் காட்டும் குரளிவித்தைகளை பார்ப்பது. கை காசை எல்லாம் போட்டு விட்டு, அடுத்த வேளை சோத்துக்கு சுருட்ட வழிகளை தேடி போகிறார்கள். வரும் தேர்தலில் மிககேவலமாக தோற்று கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் உப்புமா சினிமா கம்பெனிக்கு போய் விடுவார்...


kulandai kannan
டிச 13, 2024 11:28

சீமான் கலைக்காததா?


Barakat Ali
டிச 13, 2024 10:00

விஜய் கட்சி வந்த பிறகு தன்னை இறக்கிவிட்ட எஜமான கட்சி சொல்பேச்சு கேட்டு கட்சியைக் கலைக்காத குற்றம்... ஆமை அவதிப்படுத்து...


nv
டிச 13, 2024 09:39

இவர் தமிழ் தேசியம் என்ற போர்வையில் குளிர் காயும் நாட்டுக்கு எதிராக இருக்கும் குள்ள நரி.. இவரை நம்ப வேண்டாம்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 13, 2024 09:19

ஆக மொத்தம் துட்டுல கைவைக்க விடல அதனால் கிளம்புறீங்க. போயிட்டு வாங்க. நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் திமுக, அதிமுக போன்றல் திருட்டு கழகங்களில் இணைந்தால் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம் அவர்களுடைய யோக்கியதையை. நாம் தமிழரில் திருட வாய்ப்பில்லை என்றவுடன் திருடுவதற்கு ஏற்ற இடத்தை தேடிப்போகிறார்கள். நாம் தமிழரின் அரசியல் தவிர்க்க முடியாத அரசியல். காலத்தின் கட்டாயம். அது வந்தே தீரும்.


Raj
டிச 13, 2024 07:32

அண்ணன் சீமான் ஏற்ற, இறக்கதோடு பேசுவது நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிந்தும், புரிந்தும் விட்டது, அதனால் கூட்டம் கலைகிறது.


முக்கிய வீடியோ